Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கடந்தாண்டு எடுத்தோம் கவிழ்த்தோம் என டிரம்ப் ஹெச்-1பி விசாவின் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தி, பல கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே அந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் வகையில் புதிய மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இது இந்தியர்களுக்கு நன்மையைத் தருவதாகவே இருக்கும் எனத் தெரிகிறது.!

அமெரிக்கா பல்வேறு துறைகளிலும் வளர்ந்த ஒரு நாடாக இருக்கிறது. ஆனாலும் கூட பல துறைகளில் போதிய வல்லுநர்கள் அமெரிக்காவுக்கு இருப்பதில்லை. இதனால் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களையே நம்பி இருக்க வேண்டி இருக்கிறது. அப்படி போதியளவு வல்லுநர்கள் இல்லாத ஒரு துறை என்றால் அது அமெரிக்கச் சுகாதாரத் துறையைச் சொல்லலாம்.

US H-1B Visa relaxation Bill Waives Trump 100K for Doctors and Nurses Amid very heavy Shortage

மருத்துவர்கள் பற்றாக்குறை

நமது நாட்டில் நாம் நினைத்தால் ஒரு மருத்துவரைப் பார்க்க முடியும். லேசாக உடம்பு சரி இல்லை என்றாலும் கூட மருத்துவரை ஆலோசித்து மருந்துகளை நாம் எடுத்துக் கொள்வோம். எதாவது சீரிஸயான பிரச்சனை துறை சார்ந்த வல்லுநரைப் பார்க்க வேண்டும் என்றாலும் கூட ஓரிரு நாட்களில் அப்பாயின்மென்ட் வாங்கி பார்க்க முடியும். ஆனால், அமெரிக்காவில் அப்படி இல்லை. அங்குப் போதியளவு மருத்துவர்களோ நர்ஸ்களோ இல்லை.

இதனால் சாதாரண சளி, காய்ச்சலுக்கு எல்லாம் நினைத்தபடி மருத்துவரைப் பார்க்க முடியாது. அதேபோல வல்லுநரைப் பார்க்கவும் கூட பல நாட்கள் வரையிலும் நாம் காத்திருக்க வேண்டி இருக்கும். இந்த பிரச்சினை பல ஆண்டுகளாகவே அமெரிக்காவில் இருந்து வருகிறது. அதை இந்த ஹெச்-1பி விசா மூலமாகவே அமெரிக்கா ஓரளவுக்குச் சமாளித்து வந்தது.

கட்டுப்பாடுகள்

இந்தச் சூழலில் தான் கடந்தாண்டு டிரம்ப் திடீரென ஹெச்-1பி விசாவுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்தார். மேலும், அதன் கட்டணத்தையும் கூட ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களாக உயர்த்தினார். அமெரிக்கர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு வெளிநாட்டு நபர்களுக்குச் செல்லக்கூடாது என்பதற்காகவே இந்த ரூல்ஸை கொண்டு வந்துள்ளதாக டிரம்ப் கூறினார். ஆனால், உண்மையில் மருத்துவத் துறையில் அமெரிக்க வல்லுநர்களே இல்லாத சூழலில், இந்த புதிய ரூல்ஸ் நிலைமையை மேலும் மோசமாக்கியது.

இதற்கிடையே அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் கடந்த வாரம் இது தொடர்பாக மசோதா கொண்டு வரப்பட்டது.. இது வெளிநாட்டு மருத்துவர்கள், செவிலியர்கள் போன்ற சுகாதாரப் பணியாளர்களுக்கான ஹெச்-1பி விசா கட்டணத்தை ரத்து செய்ய முன்மொழிவதாக இருக்கிறது. எதிர்க்கட்சி எம்பிக்களும், டிரம்ப் கட்சி எம்பிக்களும் சேர்ந்தே இந்த சட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர்.

முன்மொழிவு

"H-1Bs for Physicians and the Healthcare Workforce Act" என்ற இந்த மசோதாவை டிரம்பின் குடியரசுக் கட்சியினர் மைக் லாவ்லர், மரியா எல்விரா சலாசார் மற்றும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியைச் சேர்ந்த டெமாக்ரட்கள் சான்ஃபோர்ட் டி பிஷப் ஜூனியர், யெவெட் கிளார்க் ஆகிய நான்கு எம்பிக்கள் சேர்ந்து முன்மொழிந்தனர். அமெரிக்காவில் சட்டத்தைக் கொண்டு வரும் பொறுப்பு இந்தியாவைப் போல அமைச்சரவைக்கு இல்லை, எம்பிக்களிடமே இருக்கிறது. தனியொரு எம்பியும் தேவை என்றால் மசோதாவை கொண்டு வர முடியும். அதன்படியே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

அடுத்து என்ன

அமெரிக்காவின் மருத்துவர், செவிலியர் பற்றாக்குறையைச் சரிசெய்ய வெளிநாட்டுச் சுகாதாரப் பணியாளர்களுக்குக் கூடுதல் ஹெச்-1பி விசா கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க இது நோக்கமாகும். இதன் மூலம் இந்திய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உட்படப் பலரும் பலனடைவார்கள்! அதேநேரம் விசா கொண்டு வரப்பட்டதாலேயே இது உடனடியாக நிறைவேறிவிடும் எனச் சொல்ல முடியாது. பல மாத விவாதத்திற்கு பிறகே இது வாக்கெடுப்பிற்கே எடுத்துக் கொள்ளப்படும்.

அமெரிக்காவில் சுகாதார ஊழியர்கள் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரிக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. 2036க்குள் 86,000 மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படும் என்று அமெரிக்க மருத்துவ சங்கம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+