இந்தியாவுக்கு 100% வரி.. முதுகில் குத்தும் டிரம்ப்! விரைவில் அமலுக்கு வரும் புதிய சட்டம்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது 100% வரை இறக்குமதி வரியை விதிக்க, அதிபர் டொனால்ட் டடிரம்புக்கு அதிகாரம் அளிக்கும் மசோதாவை விரைவில் நிறைவேற்ற உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடிதான் என்னுடைய பெஸ்ட் பிரண்ட் என்று டிரம்ப் அடிக்கடி சொல்வதுண்டு. ஆனால், அப்படிப்பட்ட நண்பனுக்கு 100% வரியா? என்று பலரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

US india russia

'லிண்ட்சே ஓ.கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த மசோதா, கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க செனட் சபையில் 86-11 என்ற பெரும் வாக்கு வித்தியாசத்தில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுவிட்டது. தற்போது பிரதிநிதிகள் சபையிலும், இதற்கான ஆரம்பகட்ட நடைமுறை வாக்கெடுப்பு 214-211 என்ற கணக்கில் நூலிழையில் வெற்றி பெற்று இறுதி வாக்கெடுப்கை நோக்கி நகர்ந்திருக்கிறது.

உக்ரைன் போரில் அமெரிக்காவால் ஜெயிக்க முடியவில்லை. என்னதான் சப்போர்ட் செய்தாலும், ரஷ்யாவின் தாக்குதலை உக்ரைனால் முறியடிக்க முடியவில்லை. நாளுக்கு நாள் ரஷ்யாவின் ஆதிக்கம்தான் அதிகரித்து வருகிறது. இப்படியே போனால்.. அமெரிக்கா சப்போர்ட் செய்தும்.. உக்ரைன் தோற்றுவிட்டது என்று வரலாற்றில் பேசப்படும் என்பதுதான் டிரம்புக்கு தற்போதைய பயம். எனவே எப்படியாவது உள்ளடி வேலை பார்த்து இந்த போரில் ரஷ்யாவை வீழ்த்த வேண்டும்.

எனவே, ரஷ்யாவுக்கான வருமானத்தை தடுக்க டிரம்ப் புதிய திட்டத்தை உருவாக்கினார். ரஷ்யாவிடம் ஏராளமாக கச்சா எண்ணெய் இருக்கிறது. அதை விற்று வரும் காசில்தான்.. போரில் ஆயுதங்களை உற்பத்தி செய்கிறது. இந்த விற்பனை தடுத்துவிட்டால்? இதுதான் டிரம்பின் பலே பிளான். எனவே ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அமெரிக்கா 100% வரியை விதிக்க திட்டமிட்டு.. அதற்கான சட்டத்தை இயற்ற தொடங்கியிருக்கிறது.

ரஷ்யாவிடம் நாம்தான்(இந்தியா) அதிக அளவில் எண்ணெய் வாங்குகிறோம். நமக்கு அடுத்து சீனாக்காரன் வாங்குறான். ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, அசர்பைஜான் உள்ளிட்ட நாடுகளும் எண்ணெய்யை வாங்குகின்றன.

ஒருவேளை அமெரிக்கா இந்த சட்டத்தை நிறைவேற்றினால்.. அமெரிக்காவில் இந்த நாடுகளை சேர்ந்த பொருட்களுக்கு வரி டபுள் மடங்காக உயர்த்தப்படும். இப்படி நடந்தால், அமெரிக்காவில் இந்திய மாம்பழங்களின் ரேட் எகிறும். எனவே அமெரிக்கர்கள் இந்திய மாம்பழங்களை தவிர்த்துவிட்டு பாகிஸ்தானிய பழங்கள் அல்லது இலங்கை, வங்கதேச பழங்களை வாங்க தொடங்குவார்கள். இப்படியே ஒவ்வொரு பொருளும் விற்பனையாகாமல் இருந்தால் நமக்குதான் நட்டம். டிரம்ப் வரியை உயர்த்தினால் இதுதான் நடக்கும்.

இப்படியாக வரி பயத்தை காட்டி இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளை வழிக்கு கொண்டுவர டிரம்ப் பிளான் செய்திருக்கிறார். இருந்தாலும் இந்தியா இந்த விஷயத்தை லேசில் விட்டுக்கொடுப்பதாக தெரியவில்லை. இப்போவே சென்னையில் பெட்ரோல் விலை ரூ.110-ஐ தாண்டியிருக்கிறது. ரஷ்ய எண்ணெய்யை விட்டுவிட்டால்.. ரூ.150-160 என விலை உயரும். அப்புறம் என்ன? மோடி ஆட்சிக்கு எதிராக போராட்டங்கள் வெடிக்கும். எனவே, கச்சா எண்ணெய் என்பது இந்திய மக்களின் எனர்ஜி பாதுகாப்பு மற்றும் மக்கள் நலன் சார்ந்த முடிவு என்று இந்தியா பேசி வருகிறது.

இதையெல்லாம் டிரம்ப் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. அவரை பற்றிதான் தெரியுமே! தான் பிடித்த டைனோசருக்கு அக்குளில் மச்சம் இருக்கிறது என்று சாதிக்கும் நபர். எனவே வரி விஷயத்தை சட்டமாக்குவது.. ரஷ்யாவுக்கு நெருக்கடி தருவதில் என்பதில் ஒற்றைக்காலில் நிற்கிறார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் அவருக்கு பெரும்பான்மை இருப்பதால் நிச்சம் சட்டம் நிறைவேறும் என்றே சொல்லப்படுகிறது. அப்படி நடந்தால் இந்தியா என்ன செய்யப்போகிறது என்பது கேள்விக்குறி!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+