அமெரிக்காவில் அதிகரித்த பணவீக்கம்.. வேலைவாய்ப்பு சரிவு! கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன?
வாஷிங்டன்: வரி விஷயத்தில் அமெரிக்க ஆடிய ஆட்டம் என்ன என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் இவ்வளவு ஆட்டம் ஆடிய அமெரிக்கா தற்போது பணவீக்கம் மற்றும் வேலையின்மை பிரச்சனையில் திண்டாடி வருகிறது.
அமெரிக்காவில் கடந்த மாதம் பணவீக்கம் அதிகரித்துள்ளது. எரிவாயு, மளிகைப் பொருட்கள், ஹோட்டல் அறைகள், விமானக் கட்டணம், உடைகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலைகள் உயர்ந்ததே இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நுகர்வோர் விலைவாசி 2.9% உயர்ந்துள்ளது. இது முந்தைய மாதத்தில் 2.7% ஆக இருந்தது. கடந்த ஜனவரி மாதத்திற்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய உயர்வு இது என்று தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.
உணவு மற்றும் எரிசக்தி அல்லாத பிற பிரிவுகளில், முக்கிய பணவீக்கம் 3.1% ஆக உயர்ந்தது. இது ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் மாறாமல் உள்ளது. இந்த இரு புள்ளிவிவரங்களும் பெடரல் ரிசர்வ் வங்கியின் 2% இலக்கை விட அதிகமாகும். அதாவது பெடரல் ரிசர்வ் வங்கி என்பது நமக்கு ரிசர்வ் வங்கி எப்படியோ, அதுபோல அமெரிக்காவுக்கு இந்த வங்கிதான் எல்லாம். இது பணவீக்கத்தை 2%க்குள் வைத்திருக்க விரும்புகிறது. ஆனால் இதன் கட்டுப்பாட்டையும் மீறி தற்போது பணவீக்கம் அதிகரித்திருக்கிறது.
ஏற்கெனவே குறுகிய கால வட்டியை குறைக்க வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். இப்படி இருக்கையில், பணவீக்கம் இப்படியே இருந்தால் டிரம்ப் சொல்வதை போல குறுகிய கால வட்டி விகிதத்தை 4.3% இலிருந்து 4.1% ஆக குறைக்க வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த வாரம் நடைபெறவுள்ள பெடரல் ரிசர்வ் வங்கியின் முக்கிய கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்படலாம்.
இதில் சில நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. வழக்கமாக பணவீக்கம் அதிகரிக்கும் போது, வட்டி விகிதங்களை வங்கி அதிகரிக்கும். அப்படி செய்வதன் மூலம் செலவுகள் கட்டுப்படுத்தப்பட்டு விலைவாசி உயர்வு ஒரு லிமிட்டில் இருக்கும். ஆனால் இந்த முறை வட்டி விகிதங்கள் குறைக்கப்படுவதால் பணவீக்கம் தொடர்ந்து அதிகரிக்கத்தான் செய்யும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மறுபுறம் அமெரிக்காவில் வேலையின்மை விகிதமும் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் வேலையின்மை விகிதம் 4.3% ஆக பதிவாகியிருக்கிறது.
பணவீக்கமும், வேலையின்மை விகிதமும் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்பது கவனிக்கத்தக்கது.
-
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications