Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்கள் சிவந்த டிரம்ப்.. திடீரென சீனா பக்கம் திரும்பி நேரடி வார்னிங்.. உற்று பார்க்கும் உலக நாடுகள்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே ஏற்பட்டுள்ள தற்காலிகப் போர்நிறுத்தம் நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், சீனாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானுக்குச் சீனா ஆயுதங்களை வழங்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், அப்படி ஆயுதங்கள் வழங்கினால் அது சீனாவுக்கு மிக பெரிய சிக்கலைத் தரும் என டிரம்ப் மிரட்டியுள்ளார்.

வளைகுடாவில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்த போர் இப்போது தான் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்காவும் ஈரானும் இரு வாரங்கள் போரை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளது. பாகிஸ்தானில் நேற்று இரு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. பல மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எதுவும் வரவில்லை.

US Iran Ceasefire Crisis President Donald Trump Warns China Over Alleged Weapons Supply to Iran

ஆயுதங்களை அனுப்பும் சீனா?

இது ஒரு பக்கம் இருக்க.. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், சீனாவின் தலையீடு குறித்த தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதாவது அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளின் தகவல்படி, அடுத்த சில வாரங்களுக்குள் ஈரானுக்குப் புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளைச் சீனா வழங்கக்கூடும் எனச் சொல்லப்படுகிறது. அதிலும் இந்த பதற்றமான சூழலில் நேரடியாகச் சீனாவில் இருந்து ஈரானுக்கு ஆயுதங்கள் சென்றால் அது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால்.. முதலில் வேறு நாடுகளுக்கு அனுப்பி.. பிறகு அங்கிருந்து ஈரானுக்கு இந்த ஆயுதங்களைச் சீனா கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளதாக சி.என்.என் (CNN) செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா எச்சரிக்கை

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதல்களில் சேதமடைந்த தனது பாதுகாப்புத் திறனை மேம்படுத்த ஈரான் துடித்துக் கொண்டிருக்கும் நிலையில், சீனாவின் இந்த உதவி அதற்குப் பெரும் பலமாக அமையும் எனக் கருதப்படுகிறது. இருப்பினும், இப்போது ஈரான் அமெரிக்கா மோதல் நடக்கும் சூழலில், சீனா இந்த ஆயுதங்களை வழங்குவது நிலைமையை மோசமாகவே மாற்றும்.

இந்த விவகாரம் குறித்து வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப், "சீனா அப்படிச் செய்தால், அவர்கள் பெரிய பிரச்சனைகளைச் சந்திப்பார்கள்" எனத் ஒரே வரியில் கூறிவிட்டார்.. அடுத்த மாதம் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க டிரம்ப் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த ஆயுத விவகாரம் அந்தச் சந்திப்பையே கூட பாதிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

அதேநேரம் மறுபுறம், சீனா இந்தக் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அவர்கள் இது தொடர்பாக, "எந்தவொரு தரப்பிற்கும் நாங்கள் ஆயுதங்களை வழங்கவில்லை.. அமெரிக்கா ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்புவதை நிறுத்த வேண்டும்" என வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

டிரம்ப்

ஈரானுடன் மிகத் தீவிரமான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்த டிரம்ப், "ஒப்பந்தம் நடந்தாலும் சரி, நடக்காவிட்டாலும் சரி... இறுதியில் வெற்றி நமதே. எனக்கு அதில் எந்தவொரு வித்தியாசமும் தெரியவில்லை" எனத் தனது ஸ்டைலில் பதிலளித்தார். இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் சில கண்ணிவெடிகளை வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அமெரிக்கக் கடற்படை அங்குக் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஏன் ஆபத்து

ஏற்கனவே போரில் சில அதிநவீன அமெரிக்க விமானங்களை ஈரான் படைகள் தங்களிடம் இருந்த ஆயுதங்களைக் கொண்டே தாக்கி அழித்திருந்தன. இந்தச் சூழலில் சீனா வழங்கத் திட்டமிட்டுள்ள ஏவுகணைகள் அமெரிக்கப் போர் விமானங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையலாம் என அஞ்சப்படுகிறது. அமைதிப் பேச்சுவார்த்தை முடியாத போது, சீனாவுக்கு டிரம்ப் விடுத்துள்ள இந்த எச்சரிக்கை, மத்திய கிழக்கு நாடுகளின் போர் மேகங்களை இன்னும் அதிகரிக்கவே செய்துள்ளது!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+