மூடு மாறிய டிரம்ப்! 'ரீசெட்' பண்ணிடுவோம் பாத்துக்கோங்க.. ஈரான் விஷயத்தில் வாயை விட்டுட்டாரே!
வாஷிங்டன்: ஈரான்-அமெரிக்கா இடையேயான அமைதிக்கான பேச்சுவார்த்தை 4 மணி நேரத்தை கடந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டிரம்ப் இந்த பேச்சுவார்த்தை குறித்து பேசியிருக்கும் விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், ஒருவேளை அது தோல்வியடைந்தால் எங்களுடைய நடைமுறையை ரீசெட் செய்ய வேண்டி வரும் என்று எச்சரித்துள்ளார்.

4 மணி நேரமாக நடக்கும் பேச்சுவார்த்தை
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில், நேரடியாக ஈரான்-அமெரிக்கா இடையே உரையாடல்கள் நடக்கவில்லை. நடுவில் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்கிறது. அதாவது ஈரான் தனது வலியுறுத்தல்களை பாகிஸ்தானிடம் சொல்லும், பாகிஸ்தான் அதை அமெரிக்காவுக்கு தெரிவிக்கும். அதேபோல அமெரிக்காவும் பாகிஸ்தானுடன்தான் பேசும். நேரடியாக ஈரானுடன் பேசாது. இதன் காரணமாக பேச்சுவார்த்தை நீண்ட நேரமாக நடைபெற்று வருகிறது.
டிரம்ப் சொன்னது என்ன?
டிரம்ப் இந்த பேச்சுவார்த்தையை வரவேற்றிருந்தாலும், ஈரான் ஒரு தோல்வியடைந்த நாடு என்று விமர்சித்திருக்கிறார். ஒருவேளை இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் அணுகுமுறையை ரீசெட் செய்துவிடுவோம் என்று எச்சரித்துள்ளார். தற்போது ஹார்முஸ் நீரிணையை கிளீன் செய்து வருவதாகவும், அந்த பகுதியில் ஈரானின் கடற்படை பலம் குறைந்து இருப்பதாகவும் டிரம்ப் கூறியிருக்கிறார்.
பாகிஸ்தானுக்கு சிக்கல்
ஒருவேளை இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் அது பாகிஸ்தானுக்கும் சிக்கலை ஏற்படுத்திவிடும். ஏனெனில் டிரம்ப் தனது பாணியை ரீசெட் செய்வதாக கூறியிருக்கிறார். அப்படியெனில், நிச்சயம் போர் உக்கிரமாக இருக்கும். இது பாகிஸ்தானையும் உள்ளே இழுத்துவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே இந்த பேச்சுவார்த்தை மிக முக்கியமானதாக இருக்கிறது. இதில் யாருக்கு வெற்றி என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
பேச்சுவார்த்தையில் என்ன பேசப்பட்டது?
ஈரான் தரப்பில் இரண்டு டிமாண்ட்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. கத்தார் உள்ளிட்ட நாடுகளில் முடக்கப்பட்டிருக்கும் தங்கள் சொத்துக்களை விடுவிக்க வேண்டும். போரினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும். இரண்டாவது கோரிக்கை, நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்பதுதான்.
அமெரிக்கா தரப்பில் அணு சக்தி பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் இரு தரப்பினரிடையே ஏற்கப்பட்டால் ஒப்பந்தம் கையெழுத்தாகி, தற்போது அமலில் உள்ள தற்காலிக போர் நிறுத்தம் நிரந்தர போர் நிறுத்தமாக மாறும்.
-
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
குவைத் ஏர்போர்ட்டில் துடிதுடித்து உயிரிழந்த இந்தியர்.. ஈரானின் ட்ரோன் தாக்குதலில் பயங்கரம்! திக்திக் -
73 ஏவுகணை தாக்குதல்.. 656 ட்ரோன்.. சைரன் சத்தம்.. பெண்கள், குழந்தை கதறல்.. உக்ரைனை துவம்சம் செய்த ரஷ்யா! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்!












Click it and Unblock the Notifications