பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: மத்திய கிழக்கில் மீண்டும் நிலைமை கையை விட்டுப் போகும் சூழலை எட்டியுள்ளது. அங்கு இரு நாடுகளுமே மீண்டும் தாக்குதலை ஆரம்பித்துள்ள சூழலில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே ஈரான் மீது மிக மோசமான தாக்குதலை நடத்தப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேரடியாக எச்சரித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

மத்தியக் கிழக்கு நாடுகளில் அமைதியை நிலைநாட்ட எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்கு இடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான மோதல் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trump Warns Iran US Iran Conflict

டிரம்ப்

ஈரான் அரசு அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்யாமல் காலதாமதம் செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்ரூத் சோஷியல்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில், "ஈரான் பேச மட்டுமே செய்கிறார்கள்.. செயலில் எதையும் காட்டுவதில்லை. அவர்களுக்குச் சாதகமான ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ள அவர்கள் நீண்ட காலம் எடுத்துக் கொள்கிறார்கள். இதற்கான விலையை அவர்கள் இப்போது கொடுத்தே ஆக வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாங்கள் அவர்கள் மீது மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்தப் போகிறோம். நேற்று அவர்களைத் தாக்கினோம், இன்றும் மிகக் கடுமையாகத் தாக்குவோம்" என்று ஆக்ரோஷமாகத் தெரிவித்துள்ளார்.

என்ன காரணம்

இந்தத் திடீர் மோதலுக்கு முக்கியக் காரணம் 'ஹார்முஸ் ஜலசந்தி' பகுதியில் நடந்த ஒரு சம்பவம் ஆகும். அதாவது முக்கியமான கடல் வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தி அருகே அமெரிக்காவின் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக சொல்லப்படுகிறது. அந்த ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு வீரர்கள் அதிர்ஷ்டவசமாக ஒரு ட்ரோன் படகு மூலம் மீட்கப்பட்டனர். இதற்குப் பதிலடியாக, அமெரிக்க ராணுவம் ஈரானின் வான் பாதுகாப்பு நிலைகள், ரேடார் மையங்கள் மற்றும் தரைக்கட்டுப்பாட்டுத் தளங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானும் தனது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியது. ஜோர்டான், குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை இலக்கு வைத்து ஈரான் இந்தத் தாக்குதலை நடத்தியது.

பாதிப்பு இல்லை

இருப்பினும், ஈரானின் இந்தத் தாக்குதலால் அமெரிக்காவிற்குப் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரானால் ஏவப்பட்ட பெரும்பாலான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் நடுவானிலேயே தடுத்து அழிக்கப்பட்டதாகவும், அமெரிக்க வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. அதன் பிறகு நடந்த மிக முக்கியமான மோதலாக இது பார்க்கப்படுகிறது. இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்காவுடனான தூதரக உறவுகள் மற்றும் பேச்சுவார்த்தைகளை மறுபரிசீலனை செய்யப்போவதாக ஈரான் அறிவித்துள்ளது. ஏற்கனவே இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அவ்வப்போது மோதல்கள் நடந்து வரும் நிலையில், இப்போது அமெரிக்காவும் நேரடியாகக் களமிறங்கியிருப்பது மத்தியக் கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

பதற்றம்

அமைதி ஒப்பந்தம் ஏற்படாததால் கோபமடைந்துள்ள டிரம்ப், ஈரானைத் தாக்கப் போவதாக எச்சரித்துள்ளார். ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக அமெரிக்கா தாக்குதல் நடத்த.. அதற்குப் போட்டியாக ஈரானும் அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தொடர் மோதல்கள் மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் ஒரு போர் மூளுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+