ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம்
தெஹ்ரான்: அமெரிக்கா ஈரான் இடையே தற்போது இடைக்கால ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில், அடுத்து இறுதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது. அதேநேரம் டிரம்பின் இந்த முயற்சிக்கு அவரது டீமியில் இருந்தே கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளதாம். ஏன் இதுபோல எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.. இதன் பின்னணி தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
ஈரான் உடனான பல மாத கால மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து, அந்நாட்டின் அணுசக்தித் திட்டம் குறித்து புதிய பேச்சுவார்த்தைகளைத் தொடங்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார். அதன் முதல் முயற்சியாகவே இப்போது அமெரிக்கா ஈரான் இடையே இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

டிரம்ப்
அடுத்த கட்டமாக ஈரானுடன் அணு ஆயுதங்கள் குறித்த பேச்சுவார்த்தையை டிரம்ப் நடத்தவுள்ளார். இதற்கு உலகெங்கும் பல்வேறு நாடுகளும் வரவேற்பு தெரிவித்து வருகின்றன. இருப்பினும், இந்த அமைதி முயற்சிக்கு ஈரானை விட, டிரம்ப்பின் சொந்த நிர்வாகத்திற்குள் இருக்கும் அதிகாரிகளே பெரிய தடையாக உருவெடுத்துள்ளனர். வெள்ளை மாளிகைக்குள் நிலவும் இந்த மோதல் குறித்தும், டிரம்ப் சந்திக்கும் சவால்கள் குறித்தும் விரிவாகப் பார்ப்போம்.
டீம் A
டிரம்ப்பின் குழுவில் தற்போது ஈரான் விவகாரத்தில் இரண்டு வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் டிரம்ப்பின் ஆலோசகர் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இந்த அணியில் உள்ளனர். இவர்கள் ஈரானுடன் ராஜதந்திர ரீதியாகப் பேசி, ஒரு தீர்வை எட்ட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
பல மாதங்களாக நீடிக்கும் போர் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது எண்ணெய் சந்தையை நிலைப்படுத்தும் என்றும் இவர்கள் சொல்கிறார்கள். மேலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மற்றொரு பெரிய போர் ஏற்படுவதைத் தவிர்க்க இதுவே சிறந்த வழி என்பதும் 60 நாள் கால அவகாசத்தைப் பயன்படுத்தி ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தலாம் என்பதும் இவர்கள் வாதமாக இருக்கிறது.
டீம் B
அதேநேரம் மறுபுறம் சிஐஏ இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் ஆகியோர் இதை எதிர்க்கிறார்கள். இவர்கள் ஈரானை நம்புவது ஆபத்தானது என்று கருதுகிறார்கள். ஈரான் தனது அணுசக்தித் திட்டங்களை உண்மையிலேயே கைவிடும் என்பதில் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை.
பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஈரான் காலத்தைக் கடத்த முயல்கிறது என்றும் ஒருமுறை அழுத்தத்தைக் குறைத்துவிட்டால், மீண்டும் ஈரானைக் கட்டுப்படுத்துவது கடினம் என்றும் இவர்கள் சொல்கிறார்கள். மேலும், ஈரான் தனது அணு ஆயுதக் கொள்கையில் மாற்றங்களைச் செய்வதற்கு முன்பே, அமெரிக்கா பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவது தவறு என்பது இவர்கள் வாதமாகும்.
ஏன் முக்கியம்
இந்த மோதலில் சிஐஏ இயக்குநர் ஜான் ராட்க்ளிஃபின் நிலைப்பாடு மிகவும் முக்கியமானது. அவர் ஒரு அரசியல்வாதியாக இல்லாமல், அமெரிக்காவின் உளவுத்துறைத் தலைவராக இருப்பதால் அவரது எச்சரிக்கையை டிரம்ப்பால் எளிதில் புறக்கணிக்க முடியாது. ஈரான் தனது அணுசக்தி செறிவூட்டல் பணிகளை நிறுத்திக்கொள்ளும் என்பதில் தனக்குத் துளியும் நம்பிக்கை இல்லை என்று ராட்க்ளிஃப் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். உளவுத்துறையே ஈரானை நம்பாதபோது, டிரம்ப் எப்படி தனது நட்பு நாடுகளையும், நாடாளுமன்றத்தையும் இந்த ஒப்பந்தத்திற்குச் சம்மதிக்க வைப்பார் என்பதே இப்போதைய பெரிய கேள்வி.
தற்போது எட்டப்பட்டுள்ள உடன்பாடு என்பது ஒரு இறுதி ஒப்பந்தம் அல்ல. இது வெறும் 60 நாட்களுக்கான ஒரு ஆரம்பக்கட்ட கட்டமைப்பு மட்டுமே. இந்த 60 நாட்களுக்குள் ஈரானின் அணுசக்தி இருப்பு மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து ஒரு தெளிவான முடிவுக்கு வர வேண்டும்.
டிரம்ப் தர்மசங்கடம்
இங்கே டிரம்ப்பிற்கு ஒரு தர்மசங்கடமான சூழல் உள்ளது. முன்பு ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுடன் போடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை டிரம்ப் கடுமையாக விமர்சித்தார். அது மிகவும் பலவீனமான ஒப்பந்தம் என்று அவர் கூறினார். ஆனால், இப்போது அவரே ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய சூழலில் இருக்கிறார். இந்த 60 நாள் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால், டிரம்ப் ஒரு பெரிய போரைத் தடுத்து நிறுத்திய பெருமையைப் பெறுவார். ஒருவேளை இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், "நாங்கள் அப்போதே எச்சரித்தோம்" என்று அவரது சொந்த அதிகாரிகளே அவருக்கு எதிராகத் திரும்பும் நிலை ஏற்படும்.
-
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்! -
டிரம்ப்-ன் 80வது பிறந்தநாள்.. சண்டையில் துவங்கி சண்டையில் முடிந்தது.. எப்படி? -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம்.. அதிர்ச்சியில் இஸ்ரேல்! எதிர்ப்பது ஏன்? பின்னணி -
இந்தியாவுக்கு சிக்கல் தொடரும்.. ஹார்முஸ் திறக்கப்பட்டாலும் கூட எல்லா பிரச்சனையும் உடனே தீராது! -
விடியல் பிறக்கிறது.. ஈரான் போர் முடிவு.. டிரம்ப் உடன் ராசியான முஜ்தபா கமேனி.. இவரே சொல்லிட்டாரா? -
வெறும் 12 நிமிடங்களில் ரூ.94.5 லட்சம் கோடி லாபம்.. ஒரே நாளில் எல்லாம் மொத்தமா மாறிடுச்சு -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு? -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது!












Click it and Unblock the Notifications