48 மணி நேரத்தில் வெடிக்கும் போர்? ஈரானை தாக்கும் அமெரிக்கா.. டிரம்ப் எடுக்க போகும் மேஜர் முடிவு!
வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில காலமாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே இந்த வார இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை ஆரம்பிக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக டிரம்ப் தீவிர ஆலோசனையில் இருப்பதாகவும் சீக்கிரமே டிரம்ப் இறுதி முடிவை எடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மத்தியக் கிழக்கில் கடந்த சில வாரங்களாக மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்கா ஈரான் இடையே ஒருபக்கம் பேச்சுவார்த்தை நடந்தாலும் கூட மற்றொரு பக்கம் இரு நாடுகளுமே மாறி மாறி எச்சரிக்கை விடுத்து வருகின்றன. மேலும், அமெரிக்கா தனது போர்க்கப்பல்கள், விமானப் படைகளைக் குவித்து வருகிறது.

ஈரான் மீது தாக்குதல்
இதற்கிடையே இந்த வார இறுதியில் ஈரான் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தவுள்ளதாக சிஎன்என் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் இந்த விவகாரத்தில் டிரம்ப் தான் இறுதி முடிவை எடுப்பார் என்றும் அவர் இதுவரை இதில் தனது முடிவை எடுக்கவில்லை என்றும் டிரம்ப் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஈரானுக்கு அருகே அமெரிக்க ராணுவம் குவிக்கப்படும் சூழலில், இந்த வார இறுதிக்குள் அமெரிக்கா தாக்குதலுக்கு முழுமையாகத் தயாராக இருக்கும் எனத் தெரிகிறது.
இருப்பினும், டிரம்ப் இந்த விவகாரத்தில் இதுவரை இறுதி முடிவை எடுக்கவில்லை. எது சிறந்த நடவடிக்கையாக இருக்கும் என்பது குறித்து தனது ஆலோசகர்கள் மற்றும் நட்பு நாடுகளிடம் அவர் கருத்து கேட்டதாகவும் கூறப்படுகிறது. வழக்கமாகத் தடாலடி நடவடிக்கைகளுக்குப் பெயர் போன டிரம்ப், இந்த முறை பொறுமையாகச் செயல்படுகிறார். என்ன செய்யலாம் என்பது குறித்து அதிக நேரம் சிந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கூட்டு நடவடிக்கை
ஒருவேளை ஈரான் மீது தாக்குதலை ஆரம்பித்தால், அது அமெரிக்காவின் கூட்டு நடவடிக்கையாகவே இருக்கும். அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்தே ராணுவ நடவடிக்கையைத் தொடங்கும். இது கடந்த ஆண்டு நடந்த 12 நாள் மோதலை விட மிகவும் பெரியதாக இருக்கும் என்றும், இந்த மோதல் ஆரம்பித்தால் அது பல வாரங்கள் நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.
என்ன காரணம்
ஈரான் அணுகுண்டுகளை தயாரிக்க முயலும் சூழலில், அதை மையமாக வைத்தே இப்போது பதற்றம் ஏற்பட்டுள்ளது. அணு ஆயுதங்களைத் தயாரிப்பதை ஈரான் மறுத்தாலும் கூட அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் அதை ஏற்பதாகத் தெரியவில்லை. அணு ஆயுத ஆசைகளை ஈரான் கைவிட்டுவிட்டு இது தொடர்பாக ஒப்பந்தம் போட வேண்டும் என டிரம்ப் வலியுறுத்துகிறார். ஈரான் பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை என்றால் ராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதே டிரம்ப்பின் நிலைப்பாடு,
இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்திச் செயலாளர் கரோலின் லீவிட் கூறுகையில், "ஈரானுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அடுத்த சில வாரங்களில் அவர்கள் நிலைப்பாடு குறித்து நமக்குத் தெரிய வரும். அதிபர் டிரம்ப் சரியான நேரத்தில் தேவையான நடவடிக்கை எடுப்பார். ராணுவ நடவடிக்கை குறித்தும் ஆலோசனைகள் உள்ளன. ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அனைத்தையும் டிரம்ப் ஆலோசனை செய்து வருகிறார்" என்று அவர் தெரிவித்தார்.
ஒரே ஒரு சிக்கல்
இதற்கிடையில், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த 90 சதவீதம் வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.. அதேநேரம் இந்த தாக்குதலுக்கு டிரம்ப்பால் தனிச்சையாக ஒப்புதல் தர முடியாது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை. டிரம்ப் தனது இறுதி முடிவை எடுத்து, நாடாளுமன்ற ஒப்புதலும் கிடைத்தால் இந்த வார இறுதியிலேயே ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம்!
-
சொந்த செலவில் சூனியம்.. 2022க்கு பிறகு அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி! டிரம்புக்கு எதிராக மக்கள் -
"விட்டால் போதும்.." கையை பிசையும் டிரம்ப்.. ஈரான் போரை முடிக்க முடியாமல் திணறும் அமெரிக்கா! -
அயதுல்லா அலி கமேனியின் மகனையும் முடித்த இஸ்ரேல்? உண்மையில் அதிகாரம் யாரிடம்? ஓங்கும் ஐஆர்ஜிசி கை! -
தலைக்கு மேல் பறக்கும் ஏவுகணைகள்.. வளைகுடா நாடுகளை விட்டு வர மறுக்கும் இந்தியர்கள்! உருக்கமான பின்னணி -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
நேட்டோவில் இருந்து விலகும் அமெரிக்கா? உலக நாடுகளுக்கே அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்.. இப்படி ஆகிடுச்சே -
இதுக்கு ஒரு எண்டே கிடையாதா.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போர் இந்திய இழந்தது என்ன..? -
கோதாவில் இறங்கும் இங்கிலாந்து.. 35 நாடுகளை திரட்டி ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு? எகிறும் டென்ஷன் -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
“இந்தப் போரால் ஒரே ஒரு நல்லது நடக்கும்”.. ஈரான் - இஸ்ரேல் போர் பற்றி வைரமுத்து கவிதை! -
ரூபாய் மதிப்பு 100-ஐ தாண்டுமா? ஆர்பிஐ களத்தில் இறங்கியும் பலன் கிடைக்காத நிலை! -
துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து?











Click it and Unblock the Notifications