US Israel attack Iran: US Israel attack Iran: ஈரான் மீது தாக்குதல் ஏன்? சூட்டோடு சூடாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சு
வாஷிங்டன்: ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரான் அதிபர் மாளிகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த தாக்குதலை இஸ்ரேல் அமெரிக்கா இணைந்து நடத்தியுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இது குறித்து பேசியுள்ளார். போர் என்றால் அது தவிர்க்க முடியாதது. வருங்கால நலனுக்காகவே இந்தப் போர் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் வரலாறு காணாத உச்சத்தை தொட்டு இருக்கின்றன. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

ஈரானை எச்சரித்த டிரம்ப்
இந்த போராட்டத்துக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆதரவு தெரிவித்ததால், போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்கா - இஸ்ரேல் இருக்கலாம் என ஈரான் குற்றம் சாட்டி வந்தது. இதுமட்டுமின்றி ஈரானில் போராட்டக்காரர்கள் மீது கடுமையான அடக்குமுறைகள் ஏவப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தார்.
‛‛ஈரான் எங்களுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும். தற்போதைய சூழலில் ஓர் ஒப்பந்தம் மிக அவசியம் தேவையாக உள்ளது. இல்லாவிட்டால் கடுமையான மற்றும் பேரழிவை ஏற்படுத்தும் விளைவுகளை ஈரான் சந்திக்க நேரிடும்" என எச்சரித்து இருந்தார். இதை தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் ஈரான் உடன்படவில்லை. இந்த நிலையில் தான் இன்று இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதலை நடத்தியுள்ளது.
ஈரான் மீது தாக்குதல்
இதனால் ஒட்டுமொத்தமாக மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. முதலில் ஈரான் தலைவர் அய்தொல்லா அலி கமேனியின் வீடு மற்றும் அலுவலகங்களே குறிவைக்கப்பட்டு தாக்குதல்கள் நடந்ததாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஈரான் தலைநகர் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதே சமயம் கமேனி தற்போது ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இல்லை எனவும், பாதுகாப்பான இடத்துக்கு அவர் மாற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு கூறியுள்ளார். ஈரான் மீதான இஸ்ரேலின் திடீர் தாக்குதல்களைத் தொடர்ந்து இருநாடுகளும் தங்களது வான்வழிப் பாதைகளை மூடியுள்ளன.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு
இதேபோன்று பதில் தாக்குதலுக்கு ஈரானும் தயாராகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இஸ்ரேல் முழுவதும் அவசரநிலை அறிவிக்கப்பட்டு அபாய ஒலிகள் எழுப்பப்பட்டுள்ளன. இதேபோன்று, ஈரானின் வான்வழிப் பாதைகள் அனைத்தும் அடுத்த அறிவிப்பு வரும் வரையில் மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வருங்கால நலனுக்காகவே இந்த போர் என்று தெரிவித்துள்ளார்.
வருங்கால நலனுக்காகவே
டிரம்ப் கூறியதாவது:- ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களை ஈரான் கொன்று குவித்து இருக்கிறது எனவும், அமெரிக்காவின் அடிப்படை பாதுகாப்புக்கு கட்டமைப்புக்கு சவால் விடும் வகையில் ஈரானின் நடவடிக்கைகள் இருப்பதாலையே இந்த போரை தொடங்கியுள்ளோம்.
இந்த மோதலில் விலைமதிப்பற்ற அமெரிக்க வீரர்கள் உயிரிழக்கலாம் என்பது எனக்கு தெரியும். போர் என்றால் அது தவிர்க்க முடியாதது. வருங்கால நலனுக்காகவே இந்தப் போர்.. என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் வலைத்தளத்தில் கூறியுள்ளார்.
-
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications