"100+ ஆபாச படங்கள்.." பகலில் நீதிபதி.. இரவில் ஆபாச நட்சத்திரம்! அமெரிக்க நீதிபதியின் இரட்டை வாழ்க்கை
வாஷிங்டன்: அமெரிக்காவில் நீதிபதி ஒருவரே ஆபாசப் படங்களில் நடித்தது சர்ச்சையாகியுள்ளது இந்த விவகாரத்தில் இணையத்தில் இரு விதமான கருத்துகளும் எழுந்துள்ளது.
நீதித்துறையில் இருப்பவர்கள் கண்ணியம் மிகுந்தவர்களாக இருக்க வேண்டும். அவர்களிடம் சென்றால் நீதி கிடைக்கும் என்று பொதுமக்களுக்கு நம்பிக்கை என்பது ஏற்பட வேண்டும்.
குறிப்பாக நீதிபதிகள் மீது மக்களுக்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும். நமது நாட்டில் நீதிபதியாகப் பல கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில், அந்த நம்பிக்கையும் அதிகமாகவே இருக்கிறது.

அமெரிக்கா
ஆனால், உலகெங்கும் இதே நிலை தான் இருக்கிறது என்று சொல்ல முடியாது. அமெரிக்காவில் அப்படித்தான் வினோதமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதற்கு இணையத்தில் கலவையான பல விமர்சனங்களே எழுந்துள்ளது. அப்படி என்ன நடந்தது.. வாங்கப் பார்க்கலாம். அமெரிக்காவில் ஒன்லி பேன்ஸ் என்ற தளம் ரொம்பவே பிரபலம். இது அங்கே இருக்கும் மிக பிரபலமாக உள்ள ஆபாசப் படங்களுக்கான தளமாகும். இதில் பார்வையாளர்களிடம் இருந்து ஆபாசப் படப் பிரபலங்கள் நேரடியாகப் பணத்தைப் பெறுவார்கள் என்பதால், ஆபாசப் படப் பிரபலங்கள் இதையே விரும்புகிறார்கள்.

ஆபாசப் படத்தில் நீதிபதி
இதனால் இந்தத் தளத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. மற்ற வேலைகளைப் பார்க்கும் பலரும் கூட பகுதி நேரமாக இந்த ஒன்லி பேன்ஸ் தளம் மூலமும் வருமானம் ஈட்டி வருகின்றனர். பலரும் இதில் வருமானம் ஈட்டி வந்தாலும் கூட இதில் நீதிபதி ஒருவரே ஆபாசப் படங்களில் நடிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அது சரி, அமெரிக்காவில் இதுபோல வினோதமான சம்பவங்கள் நடப்பது வழக்கமான ஒன்று தானே.. இருப்பினும், ஆபாசப் படங்களில் அவர் நடித்தது உறுதியான நிலையில், அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

100+ ஆபாசப் படங்கள்
நியூயார்க் நகரத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் 33 வயதான கிரிகோரி ஏ லாக்... நீதிபதியாக பணியாற்றிய போதிலும், இவர் ஆபாச வீடியோக்களை தயாரித்து நடித்தும் உள்ளார். அவர் தனது பணி நேரம் முடிந்த பிறகு, ஆபாசப் படங்களில் நடித்துள்ளார். தனது படங்களைப் பார்க்க அவர், ரசிகர்களிடம் மாதம் ரூ. 987 ($12) வசூலித்துள்ளார். இப்படி அவர் தனது ஒன்லி ஃபேன்ஸ் மூலம் 100க்கும் மேற்பட்ட ஆபாசப் படங்களைத் தயாரித்து நடித்துள்ளதாகவும் தெரிகிறது.

பரபரப்பு
அவர் தனது பயோவில் நீதிபதி என்று எங்கும் குறிப்பிடவில்லை.. பயோவில் "பகலில் நல்ல ஒரு வேலையைச் செய்து வருகிறேன். இரவில் இது போன்ற டர்டி வேலையில் இருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். இந்த ஒன்லி பேன்ஸ் தளத்தில் மட்டுமின்றி மற்றொரு ஆபாசப் படத் தளத்திலும் அவர் கணக்கு வைத்துள்ளார். அங்கே அவர் ஆபாசப் படங்களைப் பார்க்க 10 டாலரை வசூலித்து வருகிறார். இது சமீபத்தில் தான் அங்கே வெளிச்சத்திற்கு வந்தது. இது பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

பணி நீக்கம்
அவரது செயல்பாடு மோசமானது என்று விமர்சித்துள்ள, நியூயார்க் நகர சபை, அவரை பணிநீக்கம் செய்துள்ளது. மேலும் அவர்கள் கூறுகையில், "ஒவ்வொரு மட்டத்திலும் மக்களுக்கு அதன் நீதிமன்றங்கள் மீது முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும். லாக் போன்ற நபர்களை சட்டப்பூர்வமா பதவிகளில் அமர்த்துவது மக்களின் நம்பிக்கையைச் சிதைக்கிறது.. நாங்கள் பக்கச்சார்பில்லாமல் இருப்போம் என்ற நம்பிக்கையை இது சிதைக்கிறது" என்று நகர சபை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

விமர்சனம்
இந்த நடவடிக்கைக்கு இணையத்தில் இரு விதமான கருத்துகள் உலா வந்து கொண்டிருக்கிறது. ஒரு தரப்பினர் நீதிபதி போன்ற உயர் பொறுப்பில் இருப்பவர்கள் இதுபோல ஆபாசப் படங்களில் நடிப்பதை ஏற்க முடியாது என்பதால் அவர் மீதான நடவடிக்கை சரியானது தான் என்று தெரிவித்துள்ளனர். அதேநேரம் மற்றொரு தரப்பினர், நீதிபதியாக அவரது வேலையில் எந்தவொரு குற்றத்தையும் கண்டுபிடிக்காத போது, அவர் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை ஏற்க முடியாது என்றும் ஆபாசப் படங்களில் நடிப்போரை ஒதுக்கி வைக்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும் விமர்சித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications