இப்படி ஆகிடுச்சே.. ஆர்டர் செய்தது மில்க்ஷேக்.. வந்தது "யூரின்" டெலிவரி மேன் பதிலால் ஆடிப்போன நபர்
வாஷிங்டன்: அமெரிக்காவில் பிரபல உணவு நிறுவனத்தில் மில்க்ஷேக் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு யூரின் டெலிவரி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதாத குறைக்கு ஆர்டர் செய்த நபர் மில்க்ஷேக் என நினைத்து யூரினை சிறிது குடிக்கவும் செய்துள்ளார்.
பிடித்தமான உணவுகளை வீட்டில் இருந்தபடியே வாங்கும் அளவுக்கு வசதிகள் தற்போது பெருகிவிட்டன. ஆன்லைன் உணவு டெலிவரி சேவை செய்யும் நிறுவனங்களில் பிடித்த உணவுகளை பிடித்த ஓட்டல்களில் இருந்து ஆர்டர் போட்டால் போதும். அடுத்த சில நிமிடங்களில் சுடச்சுட வீட்டு வாசலுக்கே வந்து கொடுத்து விடுவார்கள். இதனால், உலகம் முழுவதும் இந்த ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஆனால், உணவு டெலிவரி நிறுவனங்கள் சில நேரங்கள் சைவ உணவு ஆர்டர் போட்டவர்களுக்கு அசைவ உணவு விநியோகம் செய்வது என சில குளறுபடிகளிலும் ஈடுபட்டு விடுகிறது. இது தொடர்பாக வாடிக்கையாளர்கள் சமூக வலைத்தளங்களில் புகார் தெரிவிப்பதையும் அடிக்கடி காண முடிகிறது. இதேபோன்ற ஒரு குற்றச்சாட்டைதான் அமெரிக்காவில் கேலப் வூட்ஸ் என்ற வாடிக்கையாளர் முன்வைத்து இருக்கிறார்.
மில்க்ஷேக்: ஆனால், அவர் வைத்த புகார் நெட்டிசன்களை ஒரு நிமிடம் அதிர வைத்துள்ளது. இது குறித்த விவரத்தை பார்ப்போம். அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தை சேர்ந்தவர் கேலப் வூட்ஸ். அமெரிக்காவில் மிகவும் பிரபலமான உணவு டெலிவரி நிறுவனமான GrubHub - மூலம் மில்க் ஷேக் ஆர்டர் செய்தாராம். ஆர்டர் செய்த சில நிமிடங்களிலேயே டெலிவரி மேனும் மில்க் ஷேக்கை கொடுத்து விட்டு சென்றுள்ளார்.
யூரின்: ஆசை ஆசையாய் மில்க் ஷேக்கை சாப்பிடுவதற்காக ஸ்டிரா போட்டு குடித்துள்ளார். ஆனால், அதன் பிறகுதான் கேலப் வூட்ஸ்சிற்கு தெரிந்துள்ளது, உள்ளே இருந்தது மில்க் ஷேக் இல்லை என்பது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே என்னதான் இருக்கிறது என பார்த்த போது.. யூரினை மில்க் ஷேக் என்ற பெயரில் டெலிவரி செய்தது தெரியவந்துள்ளது. இதனால், ஒரு நிமிடம் உறைந்து போயிருக்கிறார்.
டப்பாவை மாற்றியதால்: இதனால், அதிர்ச்சி அடைந்த கேலப் வூட்ஸ் உடனடியாக டெலிவரி செய்த நபரை போன் செய்து அழைத்துள்ளார். அந்த நபர் வந்ததும், மில்க் ஷேக் டப்பாவுக்குள் யூரின் இருந்தது குறித்து கேட்டுள்ளார். அப்போதுதான் தான் செய்த தவறை டெலிவரி மேன் ஒப்புக்கொண்டு இருக்கிறார். அதாவது, நீண்ட நேரம் ஓய்வு இன்றி வேலை செய்து கொண்டு இருந்ததால், தனது வாகனத்தில் இருந்த ஒரு காலி உணவு டப்பாவில் யூரின் போனாராம். அந்த டப்பாவையும் வாகனத்திற்குள்ளே வைத்து இருக்கிறார்.
பணி நீக்கம்: இதனால், டெலிவரி செய்யும் போது குழப்பத்தில் தெரியாமல் இந்த தவறு நடந்து விட்டதாக டெலிவரி மேன் கூறியதாக வூட்ஸ் கூறினர். என்னத்த சொல்ல என்று தலையில் அடிக்காத குறையாக Grubhub நிறுவனத்தை தொடர்பு கொண்டு பணத்தை திரும்ப கேட்டு இருக்கிறார். ஆனால் முழு உணவு தொகையை கொடுக்காமல் நிறுவனம் இழுத்தடித்து விட்டதாம். பின்னர் இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள Grubhub நிறுவனம் , தவறுதலாக டெலிவரி செய்த ஊழியரை பணியில் இருந்து நீக்கிவிட்டதாக விளக்கம் அளித்துள்ளது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications