பயங்கரம்.. பெண்ணின் இதயத்தை வெட்டி.. சமைத்து சாப்பிட்டு.. பிறகு நடந்த ஷாக்.. நடுநடுங்க வைத்த லாரன்ஸ்

பெண்ணின் இதயத்தை கொன்று சமைத்து விருந்து வைத்துள்ளார் ஒருவர்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: பக்கத்து வீட்டு பெண்ணை ஒருத்தர் கொலை செய்துவிட்டார்.. பிறகு அந்த பெண்ணின் இதயத்தை கட் பண்ணி வெளியே எடுத்து சமைத்து சாப்பிட்டுள்ளார்.. இப்படி ஒரு ஷாக் அமெரிக்காவில் நடந்து மொத்த பேரையும் தூக்கி வாரி போட்டு வருகிறது.

அவர் பெயர் லாரன்ஸ் பால் ஆண்டர்சன்.. 42 வயதாகிறது.. அமெரிக்காவில் ஒக்லஹோமா மாகாணத்தை சேர்ந்தவர்.. ஓக்லஹோமா நகரத்தில் இருந்து 40 மைல் தொலைவில் இருக்கும் சிக்கஷா என்ற இடத்தில்தான் வசித்து வந்துள்ளார்..

கடந்த பிப்ரவரி 9ம் தேதி, தன்னுடைய பக்கத்து வீட்டு பெண்ணை கொலை செய்து விட்டார். அந்த பெண்ணின் பெயர் ஆண்ட்ரியா லின் பிளாங்கென்ஷிப்.. இவரை கொன்றுவிட்டு, அவரது இதயத்தை கட் பண்ணி எடுத்தார் லாரன்ஸ்.

 உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

அந்த இருதயத்தை தன் வீட்டுக்கு கொண்டு போய், அதை உருளைக்கிழங்குடன் சேர்த்து வதக்கி பொறியல் செய்தார்.. அதை தன்னுடைய குடும்பத்துக்கே விருந்தாக்கினார். இறுதியில் தன் வீட்டில் இருந்த சொந்த மாமாவையும், அவரது பேத்தியையும் கொலை செய்தார். இது பற்றிய தகவல் போலீசாருக்கு கிடைக்கவும் லாரன்ஸ் வீட்டுக்கு விரைந்து சென்றனர்.. அப்போது அந்த மாமா சடலமாக கிடந்தார்.. அவருக்கு 67 வயதாகிறது..

 உயிர் ஊசல்

உயிர் ஊசல்

அவருக்கு பக்கத்தில் அவருடைய 4 வயது பேத்தி கேயோஸ் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.. அந்த குழந்தையை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. ஆனால், வழியிலேயே அந்த குழந்தை இறந்துவிட்டது. அதுமட்டுமல்ல, இவர்கள் 2 பேரை கொன்றதுடன், அதே வீட்டில் லாரன்ஸ்-ன் அத்தை இருக்கிறார்.. அந்த ஆன்ட்டியின் 2 கண்ணையும் கத்தியை எடுத்து குத்திவிட்டார் லாரன்ஸ்.. அவர் மட்டும் இப்போது உயிர் பிழைத்துள்ளார்.. ஐசியுவில் இருக்கிறாராம்.

 அதிர்ச்சி

அதிர்ச்சி

இதெல்லாம் பார்த்து போலீசார் அப்படியே உறைந்து போய்விட்டனர்.. இறுதியில் லாரன்ஸிடம் விசாரணையை தொடங்கினர்.. பக்கத்து வீட்டு பெண்ணை கொன்று, அவரது இதயத்தை பொறியல் செய்து சாப்பிட்டது குறித்து லாரன்ஸ் சொன்ன காரணம் இருக்கே, அதை கேட்டு போலீசார் அதற்கு மேல் ஆடிப்போய்விட்டனர்..

தொந்தரவு

தொந்தரவு

லாரன்ஸ் வீட்டில் ஒரு பேய் இருக்கிறதாம்... அடிக்கடி ஒரு பிசாசு வந்து போகிறதாம்.. லாரன்ஸை அவை இரண்டும் தினமும் தொந்தரவு செய்து வந்துள்ளது.. பக்கத்து வீட்டு பெண்ணை கொன்று அவரது இருதயத்தை உருளைக்கிழங்குடன் சேர்த்து சமைத்து விருந்து வைத்தால், வீட்டில் உள்ள பேயும், பிசாசும் ஓடிவிடும் என்று யாரோ சொல்லி இருக்கிறார்கள். அதற்காகவே இப்படி செய்ததாக வாக்குமூலம் தந்துள்ளார்.

 ஆயுத வழக்கு

ஆயுத வழக்கு

லாரன்ஸ் அடிப்படையிலேயே ஒரு கிரிமினல் குற்றவாளியாம்.. இதுவரை செய்யாத குற்றமில்லை.. 2017-ம் ஆண்டு போதை மருந்து, ஆயுத வழக்கில் 20 வருஷம் ஜெயில் தண்டனையை அனுபவித்தவர்.. ஆனால் இந்த தண்டனையை கவர்னர் 9 வருஷமாக குறைத்தார்.. சமீபத்தில்தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.. மாமாவும் அத்தையும்தான் இவர்களுக்கு அடைக்கலம் தந்திருந்தனர்.. அவர்களையும் லாரன்ஸ் இப்போது கொன்றுவிட்டார் என்பது தெரியவந்துள்ளது.

 விசாரணை

விசாரணை

இதையடுத்து, கோர்ட்டில் லாரன்ஸை போலீசார் ஆஜர்படுத்தினர்.. அப்போது ஜட்ஜை பார்த்ததுமே லாரன்ஸ் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்துவிட்டார்.. நான் ஒரு பாவி.. எனக்கு ஜாமீன் தந்துடாதீங்க, ப்ளீஸ் என்று கெஞ்சினார்.. இப்போது லாரன்சுக்கு மரண தண்டனை தரப்பட உள்ளது.. ஏற்கனவே 20 வருஷம் ஜெயில் தண்டனையில் இருந்து லாரன்ஸை விடுவித்திருக்ககூடாது, பாவமே பார்த்திருக்க கூடாது என்ற வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது... லாரன்சிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.. இந்த சம்பவம் அமெரிக்காவில் கடுமையான பீதியையும், அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+