"ஒரு கோடி" ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன டேக்சி டிரைவர்.. டிப்ஸ் ஆக கிடைத்த 5 டாலருக்கு வாங்கிய லாட்டரி
வாஷிங்டன்: அமெரிக்காவில் டேக்சி டிரைவர் ஒருவருக்கு டிப்ஸ் ஆக கிடைத்த 5 டாலருக்கு வாங்கிய லாட்டரிக்கு ரூ.1 கோடி பரிசு கிடைத்துள்ளது. சினிமாவில் ஒரே பாட்டில் பணக்காரர் ஆவது போல இந்த டேக்சி டிரைவர் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
ஒரே பாட்டில் பணக்காரர் ஆவது போன்ற காட்சிகளை சினிமாவில் பார்த்துவிட்டு இந்த மாதிரி நம்ம லைஃப்பும் மாறாத என பகல் கனவு காணதவர்களே இருக்க மாட்டார்கள். ஆனால், நிஜ வாழ்க்கையிலும் இது சாத்தியம் என்றால் லாட்டரியில் பரிசு அடிப்பவர்களைத்தான் சொல்ல முடியும்.

நேற்று வரை அன்றாட செலவுக்காக தள்ளாடிய பலரும் ஓவர் நைட்டில் பல கோடிகளுக்கு அதிபராகிவிடுகிறார்கள். அடிக்கடி இந்தியாவிலும், இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதுண்டு. இந்தியாவில் சில மாநிலங்களில் லாட்டரி சீட்டிற்கு சட்டப்பூர்வ அனுமதி உள்ளது. என்னதான், ஒரு சிலர் பணக்காரர் ஆனாலும், லாட்டரியை நம்பி, நடுத்தெருவுக்கு வந்த குடும்பங்களே அதிகம்.
லாட்டரி பரிசு: இதனால் தான், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் லாட்டரிக்கு தடை விதித்துள்ளன. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்.. அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் லாட்டரி விற்பனை நடைபெறுகிறது. அமெரிக்காவில் பெட்ரோல் நிலையங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் என பல இடங்களிலும் இந்த லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும்.
டிப்ஸ் ஆக கிடைத்த 5 டாலர்: இந்த நிலையில், தான், விர்ஜினியா மாகாணத்தை சேர்ந்த டேக்சி டிரைவர் ரியான் பாஸ்ச் என்பவர் தனக்கும் என்றைக்காவது லாட்டரியில் பணம் கிடைக்கும்.. கோடீஸ்வரர் ஆகிவிடலாம் என்ற நம்பிக்கையில் வாங்கி வந்து இருக்கிறார். நம்ம ஊர் உபேர், ஓலா போல அமெரிக்காவில் லிஃப்ட் என்ற வாடகை கார் நிறுவனம் பிரபலானது.
இதில் கார் ஓட்டி வரும் ரியான் பஸ்ச்க்கு அவரது காரில் பயணித்த பயணி ஒருவர் டிப்ஸ் ஆக 5 டாலரை கொடுத்துள்ளார். காருக்கு பெட்ரோல் போட சென்ற போது, இந்த 5 டாலரை வைத்து ஒரு லாட்டரி வாங்கினால்தான் என்ன?.. என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. உடனே பெட்ரோல் நிலையத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஸ்க்ராட்ச் லாட்டரியை வாங்கியிருகிறார் ரியான் பஸ்ச்.
கண் விழித்த அதிர்ஷ்ட தேவதை: டிக்கெட்டை வாங்கி ஸ்கராட்ச் செய்த போதுதான் தெரிந்து இருக்கிறது.. அவருக்கு அதிர்ஷ்ட தேவதை கண்விழித்துள்ளது. 1,50,000 டாலர் பரிசுத்தொகை விழுந்துள்ளது. இந்திய மதிப்பில் இதன் மதிப்பு 1.2 கோடியாகும். திடீரென லாட்டரியில் இவ்வளவு தொகை விழுந்ததை பார்த்து ரியான் பஸ்ச்க்கு கையும் ஓடவில்லை.. காலும் ஓடவில்லை..
தற்போது சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கும் ரியன் பஸ்ச் இந்த தொகையை வைத்து என்ன செய்யலாம்.. ஏது செய்யலாம் என்று மகிழ்ச்சியுடன் திட்டம் போட்டு இருக்கிறாராம்.. அண்மையில், அமெரிக்காவைச் சேர்ந்த மிரியம் லாங் என்ற பெண் தனது வீட்டின் அருகே உள்ள கடைக்குச் சென்றார். அப்போது, அப்படியே லாட்டரி பக்கம் திரும்பி இருக்கிறார்.
8.33 கோடி பரிசு: மெகா மில்லியன் டிக்கெட்டை வாங்க நினைத்து தவறுதலாக அவர் வேறு ஒரு பட்டனை அழுத்தியிருக்கிறார். அவருக்கு பவர்பால் லாட்டரிக்கான டிக்கெட் கிடைத்துள்ளது. வாங்க நினைத்தது வேறு.. வாங்கியது வேறு என்ற சோகத்தில் வீட்டிற்கு சென்ற அவருக்கு பல கோடிகள் கொட்டியிருக்கிறது.
தவறான லாட்டரியை வாங்கிவிட்டோமே என்ற சோகத்தில் அந்த பெண் வீடு திரும்பியுள்ளார். இருப்பினும், இந்த பெண் வாங்கிய லாட்டரியின் வெற்றியாளர் அறிவிக்கும் நிகழ்ச்சியைப் பார்க்கும் போது இவருக்கு இன்ப அதிர்ச்சி. ஏனென்றால் இவர் வாங்கிய லாட்டரியின் முதல் ஐந்து எண்கள் மெகா லாட்டரியுடன் மேட்ச் ஆகி இருக்கிறது. இதன் மூலம் அவருக்கு $1 மில்லியன் டாலர், அதாவது ரூ. 8.33 கோடி கிடைத்துள்ளது.
-
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications