Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே நாளில் 2 லாட்டரியில் பரிசு! கொட்டிய பண மழை.. அதிர்ஷ்டம்னா இதுதான்! மகளால் அடித்த ”லக்”

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: வாழ்நாளில் ஒருமுறையாவது நமக்கு லாட்டரியில் பரிசு அடித்துவிடாதா? என லாட்டரி பிரியர்கள் டிக்கெட்டை வைத்துக்கொண்டு சுற்றும் நிலையில், ஒரே நாளில் இரண்டு லாட்டரிகளில் பரிசுகளை அடித்து பலரையும் பொறாமைப்பட வைத்து இருக்கிறார் ஒருவர். அதிலும் இரண்டாவதாக பரிசு அடித்த லாட்டரி டிக்கெட் அவர் மகள் வாங்கி கொடுத்ததாம்.. இது பற்றிய சுவாரசிய தகவலை முழுமையாக இங்கே பார்க்கலாம்.

யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என்றே தெரியாது. நேற்று வரை பஸ்சில் போக கூட காசு இல்லாத நிலையில் இருந்தான்.. இன்னைக்கு பாருங்க சொந்தமாக பஸ்சே வாங்கும் அளவுக்கு வசதியாகிவிட்டான்.. எல்லாம் நேரம் என்று சொல்வார்கள். கடின உழைப்புக்கு சில நேரம் அதிர்ஷ்டம் என்று கூட பெயர் சூட்டி விடுவார்கள். என்னதான் கடின உழைப்பு இருந்தாலும் கொஞ்சமும் லக் இருந்தால்தான் திடீர் முன்னேற்றம் அடைய முடியும் என்று பொதுவாக சொல்வது வழக்கம்.

us-man-wins-the-two-lottery-prize-in-same-day-he-thank-his-daughter-who-give-as-a-gift-second-ticke

ஒரே நாளில் 2 லாட்டரி பரிசு

இது எல்லாம் எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ.. லாட்டரியில் டிக்கெட் வாங்கி பரிசு அடிப்பவர்களுக்கு பொருந்தும் என்றே சொல்லலாம். எத்தனையோ பேருக்கு பல ஆண்டுகளாக ஒரு ரூபாய் கூட லாட்டரியில் பணம் அடிக்காமல் போய் நஷ்டம் ஏற்படும். ஆனால் ஒரு சிலருக்கோ வாங்கிய முதல் டிக்கெட்டிற்கே பல கோடி கொட்டும். இதெல்லாம் அதிர்ஷ்டத்தின் பட்டியலில் சேர்த்து விடலாம்தான்.. சரி அதெல்லாம் இருக்கட்டும்..

இங்கே விஷயத்திற்கு வருவோம். வாழ்நாளில் ஒருமுறை லாட்டரியில் பணம் அடித்துவிடாதா என லாட்டரி பிரியர்கள் ஏங்கும் நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ஒருவருக்கு ஒரே நாளில் இரண்டு முறை லாட்டரியில் பரிசு அடித்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:- அமெரிக்காவின் வடக்கு கரோலினாவை சேர்ந்தவர் டென்னிஸ் பார்க்ஸ், கார்தேஜ் பகுதியை சேர்ந்த இவருக்கு லாட்டரி டிக்கெட் வாங்கும் பழக்கம் இருந்துள்ளது.

இரண்டு லட்டு தின்ன ஆசையா

தனக்கு விழுந்த லாட்டரியில் $50,000 பரிசு விழுந்துள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ.43 லட்சம் பரிசு அடித்துள்ளது. ஸ்க்ராட்ச் ஆப் டிக்கெட்டில் பரிசு அடித்ததால் அதை வாங்குவதற்கு லாட்டரி அலுவலகத்திற்கு பரிசு வாங்க சென்றுள்ளார். அப்போது, அவரது மகள் பிறந்த நாள் பரிசாக ஒரு லாட்டரி டிக்கெட்டை பரிசாக கொடுத்து இருக்கிறார். நரி முகத்தில் முழித்தாரோ என்னமோ.. அந்த லாட்டரிக்கும் பரிசாக ரூ.86 லட்சம் அடித்துள்ளது.

ஒரே நாளில் அடுத்தடுத்து லாட்டரியில் பரிசு விழுந்ததால் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்து இருக்கிறார் டென்னிஸ் பார்க்ஸ். ஒருமுறையாவது பரிசு அடிக்குமா என ஏங்கியவருக்கு கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா என சொல்லும் வகையில், அடுத்தடுத்து லாட்டரியில் பரிசு அடித்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. தனக்கு பரிசு அடித்தது பற்றி கூறிய பார்க்ஸ், தற்போது கிடைத்துள்ள தொகையை கொண்டு நான் கட்டாமல் வைத்து இருக்கும் நிலுவைத்தொகையை செலுத்திவிடுவேன்.

நெட்டிசன்கள் கருத்து

குடும்பத்துடன் ஒஹியோ செல்ல திட்டமிட்டு இருக்கிறேன். எதிர்பாராத விதமாக கிடைத்துள்ள இந்த பரிசுத்தொகைய கொண்டு பெரிய அளவில் திட்டமிட்டுள்ளேன்" என்றார். உண்மையாகவே இவருக்கு அடித்ததுதாங்க அதிர்ஷ்டம் என்று நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "லாட்டரியை வாங்கிவிட்டு கையில் வைத்து இருந்த பணம் எல்லாம் கரைந்து போனவர்கள்தான் அதிகம் பேர்.. இப்படி ஏதோ ஒன்றிரண்டு பேருக்குதான் பரிசு அடிக்கிறது.

எப்படியிருந்தாலும் இவருக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் அதிகமாகத்தான் இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "கனவில் வந்த லாட்டரி எண்ணை வாங்கியவருக்கு பல கோடி பரிசு அடித்ததாக சமீபத்தில் ஒரு பதிவை பார்த்தேன். அவருக்கு அடுத்தபடியாக பெரிய அதிஷ்டசாலி இந்த நபராகத்தான் இருப்பார்" என்று பதிவிட்டு இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+