"கண்ணா மூணாவது லட்டு தின்ன ஆசையா.." 3ஆவது மனைவிக்கு ரூட் போடும் காதல் ரோமியோ! கடுப்பில் 90s கிட்ஸ்
வாஷிங்டன்: 90s கிட்ஸ் இன்னும் கல்யாணத்திற்குப் பெண் கிடைக்காமல் சுற்றி வரும் நிலையில், இவரது கதையைக் கேட்டால் நிச்சயம் தலையே சுற்றி விடும்.
இந்த உலகில் இருக்கும் எல்லா நபருக்குப் பின்னாலும் ஒரு காதல் கதை இருக்கும். அது ஒன் சைட் லவ்வாக கூட இருக்கலாம். ஆனால், காதலில்லாமல் ஒருவரைக் கண்டுபிடிப்பது கடினம்.
காதல் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அப்படியொரு வினோதமான காதல் கதைக்குச் சொந்தக்காரராக மாறியுள்ளார் பிரபல அமெரிக்க புட்பால் வீரர்.

திருமணம்
2k கிட்ஸுக்கு கூட கல்யாணமாகி செட்டிலாகி வரும் நிலையில், 90s கிட்ஸ் இன்னும் கல்யாணத்திற்குப் பெண் கிடைக்காமல் சுற்றி வருகின்றனர். சமூக வலைத்தளங்களை எடுத்தாலே 90s கிட்ஸ் புலம்பல் தான் வரிசை கட்டி நிற்கும். அவர்களுக்கு எல்லாம் இவரது கதையைக் கேட்டால் நிச்சயம் பொறாமையாகத் தான் இருக்கும். அப்படி என்ன தான் செய்தார் எனக் கேட்கிறீர்களா? வாங்கப் பார்க்கலாம்.

அமெரிக்கப் பிரபலம்
இந்த காலத்தில் உலகில் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்ற வாழ்க்கை முறையைப் பார்த்துப் பார்த்து தேர்வு செய்து வருகின்றனர். அதில் சில வாழ்க்கை முறைகள் நமக்கு ரொம்பவே வினோதமாக இருக்கும். அப்படியொரு வினோத வாழ்க்கைக்குச் சொந்தமானவர் தான் முன்னாள் அமெரிக்கக் கால்பந்து வீரர் மசாயா லெஜண்ட் ஆண்ட்ரூ. இந்த பிரபலத்தின் வாழ்க்கை பலருக்கும் வினோதமாகத் தோன்றும். சிலரைப் பொறாமைப்படவும் வைக்கும்.

இரண்டு மனைவிகள்
ஆண்ட்ரூவுக்கு ஏற்கனவே திருமணமாகவிட்டது. அதுவும் ஒரு முறை இல்லை. இரண்டு முறை. அவரும் அவரது இரண்டு மனைவிகளும் இப்போது ஒரே வீட்டில் தான் வசிக்கிறார்கள். ஆம் நீங்கள் படித்தது சரி தான். ஆண்ட்ரூ தனது இரு மனைவிகளுடன் ஒரே வீட்டில் தான் வசித்து வருகிறார். அதாவது கடந்த 2014இல் ஆண்ட்ரூவுக்கு ஸ்டெபனி என்ற பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

என்ன நடந்தது
இவர்கள் சில ஆண்டுகளாக நெருக்கமாகப் பழகி வந்துள்ளனர். இருப்பினும், திடீரென அவர்களுக்குப் பிரச்சினை ஏற்படவே அவர்கள் தங்கள் உறவைத் துண்டித்துக் கொண்டனர். இதையடுத்து கடந்த 2018இல் ரோசா என்ற மற்றொரு பெண்ணை ஆண்ட்ரூ சந்தித்து உள்ளார். இருவரும் ஒரே வீட்டில் வசிக்கத் தொடங்கி உள்ளனர். அப்போது ஆண்ட்ரூவுக்கு ஸ்டெபனிவுடன் மீண்டும் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாகவும் மாறியுள்ளது.

ஒரே வீட்டில்
இதனால் நேரடியாக அவரை வீட்டிற்கே அழைத்து வந்துவிட்டார் ஆண்ட்ரூ. பார்டனரை பகிர்ந்து கொள்வதும், இருவருக்கும் ஒரே கணவர் இருப்பதும் ஸ்டெபனிக்கு முதலில் முரணாகவே இருந்து உள்ளது. இதைக் கடந்து வரவே அவருக்கு சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ளது. அதன் பின்னர் மூவரும் ஒரே வீட்டில் சந்தோஷமாக வாழத் தொடங்கி உள்ளனர். முதலில் இதற்குத் தயங்கிய ஸ்டெபனி, இப்போது தனக்குக் காதலன், காதலி என இருவரும் உள்ளது சந்தோஷமாகவே உள்ளதாகக் கூறுகிறார்.

மொத்தம் எட்டு குழந்தைகள்
ரோசாவுக்கு ஆண்கள் மீது தான் ஈர்ப்பு என்றாலும் கூட தனது பாய் பிரண்ட் கேட்டுக் கொண்டதால் இதற்குச் சம்மதித்ததாகவும் இப்போது மகிழ்ச்சியாகவே உள்ளதாகக் கூறுகிறார். கடந்த ஓராண்டாகவே இவர்கள் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். அதேபோல இவர்களுக்கு மொத்தம் 8 குழந்தைகள் உள்ளன. 9ஆவது குழந்தையும் கூட ஆன் தி வே.

மூன்றாவது மனைவி ஆன் தி வே
இருந்தாலும் ஆண்ட்ரூவுக்கு இது போதவில்லையாம். மற்றொரு மனைவி வேண்டும் என அடம் பிடிக்கிறார். இன்னுமே கூட குழந்தைகள் வேண்டும் என்றும் இதற்கு மூன்றாவதாக ஒரு மனைவி இருந்தால் நன்றாக இருக்கும் என்கிறார் ஆண்ட்ரூ. இதற்கு அவரது மனைவிகளும் பச்சைக் கொடி காட்டிவிட்டனர். இதனால் மூன்றாவது மனைவியை ஆர்வமாகத் தேடி வருகிறார் ஆண்ட்ரூ.












Click it and Unblock the Notifications