சீனா ஆதிக்கம் செய்ய விடமாட்டோம்.. இந்தியாவுக்கு அமெரிக்க ராணுவம் துணை நிற்கும்- வெள்ளை மாளிகை அதிரடி
வாஷிங்டன்: இந்தியா உட்பட, சீனாவை எங்கும் அதிகாரம் செய்யவிடமாட்டோம் என்று, வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி மார்க் மீடோஸ் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியா, சீனா இடையிலான மோதல் மட்டுமல்லாமல், எந்த நாட்டு பிரச்சினையிலும் வலிமையான நட்புறவுக்கு, அமெரிக்க ராணுவம் துணையாக நிற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
கிழக்கு லடாக் எல்லையில் ஆக்கிரமிப்பு முயற்சிகளில் ஈடுபடுகிறது சீனா. இந்தியா, சீனா ராணுவத்துக்கு இடையிலான மோதலில் இந்தியா தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

தென் சீனக் கடலுக்கு விரைந்த அமெரிக்க கப்பல்கள்
இது மட்டுமல்ல, தென் சீனக் கடலில் பல தீவுகளை சீனா ஆக்கிரமித்து வருகிறது. பிலிப்பைன்ஸ், தைவான், புருனே உள்ளிட்ட நாடுகள் இப்படியான குற்றச்சாட்டுகளை சீனா மீது தொடர்ந்து முன்வைத்து வருகின்றன. சீனாவுக்கு தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புக் கிளம்பி வருகிறது.
இந்த நிலையில் தென் சீனக் கடல் பகுதிக்கு இரு விமானம் தாங்கி கப்பல்களை அமெரிக்கா அதிரடியாக அனுப்பி வைத்துள்ளது.

ஆதிக்கம் செலுத்த விட மாட்டோம்
இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி மார்க் மீடோஸ் Fox என்ற செய்தி சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது: ஒரு விஷயத்தை தெளிவாகக் கூறிவிடுகிறோம். ஆசியாவிலோ அல்லது ஐரோப்பிய பிராந்தியத்திலோ, எந்த நாடும் தங்களை சக்தி வாய்ந்தவராக வெளிப்படுத்த மற்ற நாடுகளை அடக்க நாங்கள் விட மாட்டோம். அது சீனாவாக இருந்தாலும் எந்த நாடாக இருந்தாலும்சரி அதற்கு எங்கள் ஆதரவு கிடையாது.

இந்தியாவுக்கு ஆதரவு
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவில் மோதல் ஏற்பட்டிருந்தாலும், எங்கள் ராணுவம் நட்புறவுக்கு துணை நிற்கும், தொடர்ந்து வலுவாக நிற்கும். சீன ராணுவத்தின் தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டதற்கு, பதிலடியாக சீனாவின் செல்போன் செயலிகளை இந்தியா தடை செய்துள்ளதில் தவறு ஏதும் இல்லை.

அமெரிக்க கப்பல்கள்
அமெரிக்கா, இரு விமானம் தாங்கி கப்பல்களான ரொனால்ட் ரீகன் மற்றும் நிமிட்ஸ் ஆகியவற்றை தென் சீனக் கடலுக்கு அனுப்பியுள்ளது. தென் சீனக் கடல் பகுதியில் என்ன நடக்கிறது என்பதை நாங்களும் அறிந்து வைத்துள்ளோம். மிகப்பெரிய ராணுவப்படை, வலிமையான சக்தி அமெரிக்காவிடம் உள்ளது என்பதை உலகம் அறிவதற்காகத்தான் இந்த படைகள் அங்கே போயுள்ளன. இவ்வாறு, மார்க் மீடோஸ் தெரிவித்தார்.
-
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
பஹ்ரைனில் சொதப்பிய US! பாதுகாப்பு டெக்னாலஜியில் பெரிய ஓட்டை! குடியிருப்புக்குள் பாய்ந்த ஏவுகணை -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications