ஒரு துணியும் போடல.. ஆடையின்றி மேடையேறிய மாடல்.. உற்று பார்த்த ரசிகர்கள்! அப்புறம் நடந்த செம சம்பவம்
வாஷிங்டன்: பாரீஸ் நிகழ்ச்சி ஒன்றில் மாடல் ஒருவர் திடீரென நிர்வாணமாக மேடைக்கு வந்ததால் அங்கிருந்த பார்வையாளர்கள் குழப்பம் அடைந்தனர்.
சர்வதேச அளவில் தொடர்ச்சியாக பல ஃபேஷன் ஷோக்கள் நடத்தப்படும். இதில் பாரீஸில் நடக்கும் ஃபேஷன் வீக் நிகழ்வுகள் என்பது உலகில் பலராலும் கவனிக்கப்படக் கூடிய ஒன்றாகும்.
இந்த நிகழ்ச்சியில் ஆடை வடிவமைப்பாளர்கள் பலரும் தங்கள் புதிய ஆடைகளை அறிமுகம் செய்வார்கள். அதேபோல பல சூப்பர் மாடல்களும் இதில் ஆர்வமாகப் பல புதிய முயற்சிகளை எடுப்பார்கள்.

பாரீஸ் ஃபேஷன் நிகழ்வு
அப்படியொரு நிகழ்வு தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரீஸ் ஃபேஷன் நிகழ்வில் நடந்துள்ளது. அமெரிக்க சூப்பர்மாடல் பெல்லா ஹடிட், பாரிஸ் பேஷன் வீக்கில் செய்த செயல் தான் பலரது கவனத்தையும் அவர் பக்கம் திருப்பி உள்ளது. இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி அது தீயாகப் பரவி வருகிறது. அப்படி பெல்லா ஹடிட் என்ன செய்தார் என கேட்கிறீர்களா? வாங்கப் பார்க்கலாம்.

ஆடை இல்லை
சில நாட்களுக்கு முன்பு கோப்பர்னி ஸ்பிரிங் ஃபேஷன் ஷோ நடைபெற்றது. இதில் மாடல்கள் அனைவரும் புதுப்புது வடிவ ஆடைகளுடன் ரேம்ப் வாக் செய்தனர். அப்போது மாடல் பெல்லா ஹடிட் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென ஒரு துணி கூட இல்லாமல் மேடை ஏறினார். ஆடை எதுவும் அணியாமல் அவர் ரேம்ப் வாக் செய்ததால் முதலில் அங்கிருந்த பார்வையாளர்கள் குழப்பம் அடைந்தனர்.

ஸ்ப்ரே
இருப்பினும், அதன் பின் அங்கிருந்த இடத்தில் அவர் மீது ஸ்ப்ரே பெயின்ட் ஆடை போல வடிவமைக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஹடிட் முதலில் நிர்வாணமாக மேடையில் நடந்து வருவது தெரிகிறது. அவர் ஹை ஹீல்ஸ் செருப்பை மட்டுமே அணிந்திருந்தார். மேலும் மார்பகங்களைத் தனது கையால் அவர் மூடிக்கொண்டு நடந்து வந்தார்.

உடையாக மாறியது
அதன் பின்னர், அங்கிருந்த கலைஞர்கள் அவரது உடலில் ஸ்ப்ரேவை அடிக்கின்றனர். அந்த ஸ்ப்ரே கொஞ்ச நேரத்தில் காய்ந்து, தடிமனான உடை போல மாறிவிட்டது. பின்னர் அங்கிருந்த ஆடை வடிவமைப்பாளர் அதை ஒழுங்குபடுத்தி முறையான டிசைனில் வடிவமைக்கிறார். பெயின்ட் ஸ்ப்ரே இப்படி சில நொடிகளில் அங்கு முழு ஆடையாக மாறியதைக் கண்டு பார்வையாளர்கள் வியந்து போனார்கள்.

கேம் சேஞ்சர்
இதை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்தனர். அதுதான் இப்போது இணையத்தில் விவாதத்தைக் கிளப்பி உள்ளது. இது ஒரு கேம் சேஞ்சர் கண்டுபிடிப்பு என்றும் இந்த புதிய தொழில்நுட்பம் என்பது வரும் காலத்தில் ஆடை வடிவமைப்பு துறையையே மாற்றும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

எப்படிப் பயன்படும்
வரும் காலத்தில் ஆடை வடிவமைப்பு துறையில் இதுபோல பல புதிய தொழில்நுட்பங்கள் வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது பாரிஸ் பேஷன் வீக்கில் நடந்த இந்த நிகழ்வு வெறும் தொடக்கம் தான் என்றும் இந்த தொழில்நுட்பம் மூலம் ஒருவர் தனக்குப் பிடித்த ஆடையைப் பிடித்த இடத்தில் சில நொடிகளில் உருவாக்க முடியும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
-
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications