53 ஆண்டுகளுக்கு முன் அண்டார்டிக்காவில் தொலைத்த பர்ஸ்... மீண்டும் உரிய நபரிடம் ஒப்படைப்பு
வாஷிங்டன்: 53 ஆண்டுகளுக்கு முன், அண்டார்டிக்காவில் பால் கிரிஷாம் என்ற கடற்படை வீரர் தொலைத்த பர்ஸ் மீண்டும் அவரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சான் டியாகோ பகுதியைச் சேர்ந்தவர் பால் கிரிஷாம். 91 வயதாகும் இவரது வீட்டிற்கு, கடந்த சில நாட்களுக்கு முன், சிலர் வந்துள்ளனர். பால் கிரிஷாம் 53 ஆண்டுகளுக்கு முன் அண்டார்டிக்காவில் தொலைத்த பர்ஸை அவர்கள் திரும்பி அளித்துள்ளனர்.
53 ஆண்டுகளுக்கு முன் அண்டார்டிக்காவில் தான் தொலைத்த பர்ஸ் மீண்டும் கிடைத்துள்ளதைக் கண்டு அவர் நெகிழ்ந்து போய்விட்டார்.1948ஆம் ஆண்டு முதல் பால் கிரிஷாம் அமெரிக்காவின் கடற்படையில் இணைந்து பணியாற்றியுள்ளார்.

அப்போது 1968ஆம் ஆண்டு ஆண்டு ஆபரேஷன் டீப் ஃப்ரீஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக இவர் அண்டார்டிகா பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளார். அங்கு இருக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவ இவர் அண்டார்டிக்காவுக்கு அனுப்பப்பட்டார். அப்போதுதான் இவர் தனது பர்ஸை தொலைத்துவிட்டார்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அண்டார்டிக்காவில் இருந்து அந்தக் கட்டடத்தை இடிக்க அமெரிக்க அரசு முடிவு செய்தது. கடந்த 2014ஆம் ஆண்டு கட்டடத்தை இடிக்கும் பணிகளை மேற்கொண்டிருந்தபோது தான் லாக்கரின் பின்புறத்திலிருந்து இந்த பர்ஸை கண்டுபிடித்துள்ளனர்.
இதையடுத்து பர்ஸை அதன் சொந்தக்காரரிடம் திருப்பி அளிக்க வேண்டும் என முடிவு செய்த ஸ்டீபன் டெகாடோவும் அவரது மகளும் சில ஆண்டுகளாகவே பால் கிரிஷாம் தேடியுள்ளனர். சில வாரங்களுக்கு முன்தான் பால் கிரிஷாமின் முகவரி அவர்களுக்குக் கிடைத்துள்ளது.
அதன் பின்னரே, பால் கிரிஷாம் வீட்டிற்குச் சென்று 53 ஆண்டுகளுக்கு முன் அவர் தொலைத்த பர்ஸை ஸ்டீபன் டெகாடோ திருப்பி அளித்துள்ளார். 53 ஆண்டுகளுக்கு முன் தான் தொலைத்த பர்ஸ், அதுவும் அண்டார்டிக்காவில் தொலைத்த பர்ஸ் மீண்டும் தனக்குக் கிடைத்ததைக் கண்டு பால் கிரிஷாம் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.
-
நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.. லெபனான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய டிரம்ப்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications