வேலைக்கு ஆகாத வியூகம்.. அமெரிக்காவின் பிளான் டோட்டல் சொதப்பல்! ரஷ்யா விஷயத்தில் பேக் அடித்த டிரம்ப்!
வாஷிங்டன்: ரஷ்ய எண்ணெய் மீது சர்வதேச அளவில் விதித்திருந்த தடையை ஒரு மாதத்திற்கு நீக்குவதாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது. ஈரான் போரால் உலக நாடுகள் அமெரிக்காவை நெருக்கியிருக்கின்றன. இதனையடுத்து தற்போது இந்த முடிவை அமெரிக்கா அறிவித்திருக்கிறது.
அமெரிக்காவின் வெளிநாட்டு சொத்துக்கள் கட்டுப்பாட்டு அலுவலகம், ரஷ்ய எண்ணெய்க்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக அறிவித்திருக்கிறது.

அதன்படி, ஏப்ரல் 17ஆம் தேதி நள்ளிரவு 12:01 மணிக்கு முன்பாகக் கப்பல்களில் ஏற்றப்பட்ட ரஷ்யப் பொருட்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை பொருந்தும். இந்த அனுமதி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 16 நள்ளிரவு 12:01 மணி வரை, அதாவது, இந்த ஒரு மாத காலத்திற்குள் கப்பல்களில் ஏற்கனவே ஏற்றப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்ய அல்லது விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கப்பல்களில் உள்ள பொருட்களைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்ப்பதற்கான பல துணைச் சேவைகள் மீதான கட்டுப்பாடுகளை அமெரிக்கா தற்காலிகமாக நீக்கியிருக்கிறது. அதன்படி ரஷ்ய கப்பல்களை பாதுகாப்பாக நிறுத்திக்கொள்ளவும், ஊழியர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வும், அவசரக் கால பழுதுபார்ப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், கப்பல் மேலாண்மை, காப்பீடு, பதிவு செய்தல் மற்றும் சரக்குகளைக் கையாளவும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வளவுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டாலும், சில விஷயங்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. ஈரான், வட கொரியா, கியூபா மற்றும் உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியா பகுதிகளைச் சேர்ந்த நபர்கள் அல்லது நிறுவனங்களுடன் எந்தப் பரிவர்த்தனையும் செய்யக்கூடாது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள பிற அமெரிக்க பொருளாதாரத் தடைகளை மீறும் வகையிலான செயல்பாடுகளுக்கு இந்த அனுமதி பொருந்தாது என அமெரிக்கா தெளிவாக தெரிவித்திருக்கிறது.
ஏன் இந்த முடிவு?
ஈரான் போர் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக விலை உயர்ந்திருக்கிறது. எனவே அமெரிக்காவின் நட்பு நாடுகளே தற்போது, டிரம்புக்கு எதிராக பேச தொடங்கியிருக்கின்றன. இப்படி இருக்கையில் நிலைமையை உடனடியாக சீராக ஈரானும் ஒத்துழைக்கவில்லை.
எனவே, வேறு வழியின்றி தற்போது ரஷ்ய எண்ணெய்க்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications