Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாலையில் போன கார் மீது விழுந்து நொறுங்கிய விமானம்.. அடுத்த நொடி பதற்றம்.! ஷாக் வீடியோ

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் எதிர்பாராத விமான விபத்து நடந்துள்ளது. அங்கு நெடுஞ்சாலையில் அவசரமாக சிறிய ரக விமானம் தரையிறங்க முயன்றுள்ளது. அப்போது அது கார் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

உலகெங்கும் விமானத்தில் பயணிப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் அமெரிக்காவில் இதைத் தனியாக சொல்லத் தேவையில்லை. அங்கு விமானப் போக்குவரத்தே நகரங்களுக்கு இடையே செல்லப் பிரதானப் போக்குவரத்தாக இருக்கிறது. விமானத்தில் கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகள் இருந்தாலும் கூட சில நேரங்களில் மிக மோசமான சம்பவங்கள் நடந்துவிடுகின்றன. அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது அமெரிக்காவில் நடந்துள்ளது.

US Plane Crash Miracle Small Aircraft Smashes Into Moving Car on highway No-Fatality Collision

மோசமான விபத்து

அங்குள்ள புளோரிடா நெடுஞ்சாலையில் திடீரென ஒரு சிறிய ரக விமானம் தரையிறங்கியுள்ளது. அந்தச் சாலையில் பரபரப்பான டிராபிக் இருந்த நிலையில், திடீரென அந்த விமானம் தரையிறங்க முயன்றுள்ளது. அந்தச் சிறிய ரக விமானம் ஓடிக்கொண்டிருந்த கார் மீது மோதி இருக்கிறது.. போக்குவரத்து நெரிசலான நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்த நிலையில், பின்னால் போய்க் கொண்டு இருந்த காரில் இருந்த கேமராவில் இந்தக் காட்சிகள் பதிவாகி உள்ளது.

அந்த வீடியோவில் சாலையில் டிராபிக் வழக்கம் போல இருக்கிறது. அப்போது எதிர்பார்க்காத நேரத்தில் பின்னால் இருந்து வரும் விமானம் சாலையில் தரையிறங்க முயல்கிறது. அப்போது கார் ஒன்றின் மீது அந்த விமானம் விழுவது தெளிவாகப் பதிவாகி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

என்ன நடந்தது

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். முதற்கட்டத் தகவலில் விபத்தில் சிக்கிய விமானம் இரு என்ஜின் பீச்ச்கிராஃப்ட் 55 விமானம் என்பது தெரிய வந்தது. மெரிட் தீவில் பயிற்சி பெற இந்த விமானத்தை இயக்கியுள்ளனர். அப்போது எதிர்பார்க்காத நேரத்தில் இரு என்ஜின்களிலும் செயலிழந்துள்ளது. இதனால் விமானி அந்த விமானத்தை நெடுஞ்சாலையிலேயே தரையிறக்க முயன்றுள்ளார். அப்போது தான் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது மோதி இருக்கிறார்.

பெரிய பாதிப்பு இல்லை

நல்வாய்ப்பாகச் சிறிய ரக விமானம் என்பதால் மோதியதில் விமானத்திற்கு எதுவும் ஆகவில்லை. வழக்கமாக விமானம் இதுபோல மோதினால் அது வெடித்துச் சிதற வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இந்தச் சம்பவத்தில் அதுபோல எதுவும் நடக்கவில்லை. விமானத்திலிருந்த 27 வயது விமானி மற்றும் பயணி காயமின்றி உயிர் தப்பினார்கள். காரை ஓட்டிச் சென்ற 57 வயது பெண் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

போக்குவரத்து மட்டும் பாதிப்பு

விமானம் திடீரென எங்கோ இருந்து வந்து விழுந்துவிட்டதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். விபத்து நடந்தவுடன் அருகிலிருந்தவர்கள் உடனடியாக உதவி செய்ய விரைந்தனர். முதலுதவி குழு வரும்வரை காயமடைந்த பெண்ணுக்கு உதவியுள்ளனர். இந்த விபத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்த நெடுஞ்சாலை மூடப்பட்டது. இதனால் அங்குப் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், இரட்டை எஞ்சின் செயலிழப்பே விபத்துக்குக் காரணம் எனத் தெரிகிறது. இது தொடர்பாக விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

விபத்தின் வீடியோவை பார்க்கும்போது இது மோசமான விபத்து போலவே தெரிந்தாலும், நல்வாய்ப்பாக இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. சம்பந்தப்பட்டவர்களும் கூட காயமில்லாமல் அல்லது லேசான காயங்கள் உடனேயே உயிர் தப்பியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+