Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அந்தரங்க வீடியோ!" கொள்கைக்காக எதையும் செய்வேன்.. தனது உல்லாச வீடியோவை தானே வெளியிட்ட அரசியல்வாதி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல் தலைவர் ஒருவர் தனது கொள்கையை வலியுறுத்திச் செய்த செயலை பற்றிக் கேட்டீர்கள் என்றால் மிரண்டு விடுவீர்கள்.

அமெரிக்காவில் அனைவரும் தங்கள் விரும்பும் கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவிக்கலாம். ஒரே கட்சிக்குள் பல்வேறு கொள்கைகளைக் கொண்ட தலைவர்கள் இருப்பார்கள்.

கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு எதிரான கருத்துகளைச் சொந்த கட்சியைச் சேர்ந்தவர்களே கூட வெளிப்படையாகக் கூறுவார்கள். இதெல்லாம் அங்கு இயல்பான ஒன்று தான்.

தேர்தல்

தேர்தல்

ஆனால், இப்போது அங்குள்ள அரசியல்வாதி ஒருவர் செய்துள்ள சம்பவம் ஒரு நிமிடம் தலையையே சுற்ற வைத்துவிட்டது என்று சொல்லலாம். அமெரிக்காவில் அடுத்த மாதம் மிட் டேர்ம் தேர்தல் நடைபெறுகிறது. இதைப் பொருத்தும் அங்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை மாறும் என்பதால் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளன. அங்கு ஜனநாயக கட்சியும் குடியரசு கட்சியும் தான் முக்கிய கட்சிகள் என்றாலும் கூட வேறு சில சிறிய கட்சிகளும் கூட இருக்கிறது.

 அமெரிக்கா

அமெரிக்கா

அப்படி உள்ள லிபரல் கட்சியில் இருந்து நியூயார்க்கின் 12வது மாவட்டத்தின் வேட்பாளராக மைக் இட்கிஸ் என்பவர் களமிறங்குகிறார். அமெரிக்க ராணுவ ரிசர்வ் மேஜரான இவர், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பாலியல் தொழிலாளர்களைப் பாரபட்சமாக நடத்தக்கூடாது என்பதை மையமாக வைத்து இவர் பிரசாரம் செய்து வருகிறார். இதற்காக அவர் செய்த செயல் தான் இவரை டிரெண்டிங்கில் கொண்டு வந்து உள்ளது.

 ஆபாச வீடியோ

ஆபாச வீடியோ

53 வயதான மைக் இட்கிஸ் திருமணமாகாதவர். இவருக்குக் குழந்தைகளும் இல்லை. பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதரவு பிரசாரம் என்றால் வெறும் பேச்சு மட்டும் இல்லை. களத்திலும் இறங்கிவிட்டார் இவர். பிரபல ஆபாசப் பட நடிகை நிக்கோல் சேஜ் என்பவருடன் இணைந்து ஆபாசப் படத்தில் நடித்துள்ளார். இதை அவரே ரெக்கார்ட் செய்து அந்நாட்டின் பிரபல ஆபாசப் படத் தளத்தில் பகிர்ந்தும் உள்ளார்.

 விளக்கம் வேறு

விளக்கம் வேறு

அந்த வீடியோ மொத்தம் 13 நிமிடங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும், வீடியோவின் தொடக்கத்தில் நடிகை நிக்கோல் சேஜ் முழு சம்மதத்துடன் தான் இதைச் செய்வதாகவும் கட்டாயப்படுத்தவில்லை என்பதையும் கூறிவிடுகிறார். மேலும், தங்கள் இருவருக்கும் பாலியல் நோய் எதுவும் இல்லை என்பதையும் மைக் இட்கிஸ் தெரிவித்து உள்ளார்.

 என்ன சொல்கிறார் தெரியுமா

என்ன சொல்கிறார் தெரியுமா

இது தொடர்பாக மைக் இட்கிஸ் கூறுகையில், "நான் பேசுவதோடு நிறுத்திவிட்டால், இதில் நான் எந்தளவுக்கு உறுதியாக இருக்கிறேன் என்பது தெரியாது. இதனால் தான் துணிந்து செய்தேன். உண்மையில் இது எனக்குப் பெரிய கற்றல் அனுபவமாக இருந்தது. நான் பொதுவாகவே கூச்ச சுபாவம் கொண்டவன். என் மீது யாரும் கவனத்தை வைக்கக் கூடாது என்றே நினைப்பேன். ஆனால், இந்த விவகாரம் முக்கியமானது.

 கொள்கை முக்கியம்

கொள்கை முக்கியம்

இதை எப்படியாவது அனைத்து தரப்பு மக்களிடமும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்தேன். அதன் காரணமாகவே இப்படிச் செய்தேன்" என்று அவர் தெரிவித்து உள்ளார். பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்குதல், உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருதல், விவகாரத்து பெறும் ஆண்கள் குழந்தைகளுக்கான பராமரிப்பு செலவைக் கொடுக்க எதிர்ப்பது ஆகியவற்றுக்கு ஆதரவாக இவர் குரல் கொடுத்து வருகிறார்.

 முதல் நபர் இல்லை

முதல் நபர் இல்லை

இவர் செய்த செயல் இணையத்தில் விவாதத்தையே ஏற்படுத்தி உள்ளது. இருந்த போதிலும், மற்ற வேட்பாளர்கள் யாரும் இது தொடர்பாக எதுவும் பேசவில்லை. அதேநேரம் கவனத்தை ஈர்க்க அமெரிக்காவில் தங்கள் சொந்த அந்தரங்க வீடியோவை வெளியிடும் முதல் நபர் இவர் இல்லை. ஏற்கனவே, சாக் வீனர் என்பவர் இப்படிச் செய்து இருந்தார். இருப்பினும், அவரால் வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+