"அதை மட்டும் செய்யக் கூடாது" இஸ்ரேலுக்கு வார்னிங் கொடுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.. என்னாச்சு?
வாஷிங்டன்: ஹமாஸ் இயக்கத்தினருக்கு எதிராக காசா மீது தரைவழி தாக்குதலை தொடங்க இஸ்ரேல் தயாராக உள்ளது. இதற்கிடையே, இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வார்னிங் ஒன்றை கொடுத்துள்ளார்.
காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7 ஆம் தேதி திடீர் தாக்குதலை நடத்தினர். எதிர்பாராத இந்த தாக்குதலால் ஒரு நொடி அதிர்ந்து போன இஸ்ரேல், பின்னர் பதில் நடவடிக்கையாக காசா நகரம் மீது குண்டு மழை பொழிந்தது. இஸ்ரேலின் பதில் நடவடிக்கைகள் ஒட்டுமொத்த பாலஸ்தீனத்தின் காஸா, மேற்கு கரை பகுதிகளை நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போரால் இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஒழிக்கப்படும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார். இதன்படி, காசா மீது இஸ்ரேல் ராணுவம் சரமாரி வான்தாக்குதலை தொடுத்து வருகிறது.
தரை வழி தாக்குதலுக்கும் தயாராக எல்லையில் லட்சக்கணக்கான வீரர்களை குவித்து வைத்துள்ளது. மக்கள் வெளியேற கெடு விதித்து இருந்த நிலையில் தற்போது வானிலை காரணமாக தாக்குதல் தொடங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. எந்த நேரமும் இஸ்ரேல் படைகள் காசாவுக்குள் தாக்குதலை நடத்தலாம் என்று சொல்லப்படுகிறது.
இது ஒருபக்கம் இருக்க ஹமாஸ் இயக்கத்தினரும் டெல் அவிவ் மீது நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு மேலாக உச்ச கட்ட போர் பதற்றம் அங்கு நிலவுகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலுவான ஆதரவை அளித்து வருகின்றன. அதேவேளையில், போர் விதிகளை பின்பற்றி தாக்குதல் நடத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
இதனிடையே, காசா நகரை இஸ்ரேல் ஆக்கிரமிக்க கூடாது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது:- காசாவை இஸ்ரேல் ஆக்கிரமித்தால் அது பெரிய தவறாக அமையும் என்று நான் நினைக்கிறேன். எனது பார்வையில் ஹமாஸ் மற்றும் ஹமாசின் தீவிராவாத செயல்பாடுகள் பாலஸ்தீன மக்களை பிரதிநிதிப்படுத்தவில்லை.
எனவே, காசாவை மீண்டும் இஸ்ரேல் ஆக்கிரமித்தால் அது மிகப்பெரும் தவறாக அமையும்" என்றார். இதனிடையே, இஸ்ரேலுக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் விதமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அங்கு நேரில் விசிட் செய்யலாம் என்றும் வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications