அமெரிக்க அதிபர் தேர்தல்.. வாக்குப் பதிவு செய்த டொனால்ட் ட்ரம்ப்! யாருக்கு ஓட்டு போட்டாராம் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி, டொனால்ட் ட்ரம்ப் இன்று (சனிக்கிழமை) வாக்களித்துள்ளார் (Early Vote).

புளோரிடாவில் டொனால்ட் டிரம்ப்புக்கு ஒரு வீடு உள்ளது. எனவே, புளோரிடாவில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் ட்ரம்ப் ஓட்டுப் போட்டுள்ளார்.

அமெரிக்க தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் களமிறங்கியுள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

முன்கூட்டியே வாக்குப்பதிவு

முன்கூட்டியே வாக்குப்பதிவு

தேர்தல் 3ம் தேதிதான் என்றபோதிலும், நம்மூரைப் போலன்றி, Early Vote என்ற நடைமுறை உண்டு. வாக்குப் பதிவு நாளன்று நீண்ட கியூவில் வாக்காளர்கள் காத்திருப்பதை தவிர்க்கும் நோக்கத்தில், முன்கூட்டியே வாக்களிக்கவும் வசதி உண்டு. அதன்படி டிரம்ப் இன்று தனது ஓட்டைப் பதிவு செய்துள்ளார்.

 டிரம்புக்கு ஓட்டு போட்டாராம்

டிரம்புக்கு ஓட்டு போட்டாராம்

ஓட்டுப் போட்டு விட்டு வெளியே வந்த டொனால்ட் டிரம்ப் நிருபர்களிடம், "நான் டிரம்ப் என்ற ஒருவருக்கு வாக்களித்தேன்," என்று சிறு புன்னகையுடன் தெரிவித்தார். டிரம்புடன் சேர்த்து, கிட்டத்தட்ட 5.5 கோடி அமெரிக்கர்கள் ஏற்கனவே அதிபர் தேர்தலையொட்டி வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ்க் அணிந்து ஓட்டு

மாஸ்க் அணிந்து ஓட்டு

மாஸ்க் அணியாமல் அடிக்கடி டிமிக்கி கொடுத்து வரும் டிரம்ப், இன்று ஓட்டுபோட வந்திருந்தபோது தனது முகத்தில் மாஸ்க் அணிந்து இருந்தார். மேலும் அவர் நிருபர்களிடம் கூறுகையில், பாலட் ஓட்டுகள் போடுவதை விடவும், இப்படி நேரில் வந்து வாக்களியுங்கள். இது ரொம்பவே பாதுகாப்பானதாக இருக்கிறது. இதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். அனைத்தும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளின்படி அனைத்தும் நடந்து வருகிறது. நீங்கள் நேரில் வராமல் வாக்கு செலுத்தினால் இந்த அளவுக்கு அது பாதுகாப்பாக இருக்குமா என்பதை சொல்ல முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இ மெயில் வாக்குப்பதிவு

இ மெயில் வாக்குப்பதிவு

இமெயில் மூலமாக வாக்குகளை பதிவு செய்வதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் டிரம்ப். இதில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு இருக்கிறது என்று அவர் குற்றம் சாட்டி வருகிறார். இந்த நிலையில்தான் நேரடியாக டிரம்ப், வாக்குச்சாவடிக்கு வந்து அனைவரும் நேரில் வாக்களிக்க தூண்டி உள்ளார் என்கிறார்கள், அமெரிக்க அரசியல் பார்வையாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+