பேனாக்களை தூக்கி வீசிய டொனால்ட் டிரம்ப்.. கோப்புகளில் கையெழுத்திட்டபோது நடந்த சம்பவம்.. பின்னணி
வாஷிங்டன்: அமெரிக்காவின் 47வது அதிபராக குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் நேற்று பதவியேற்றார். அதன்பிறகு அவர் கோப்புகளில் கையெழுத்திட்ட நிலையில் பேனாக்களை பொதுமக்களை நோக்கி தூக்கி வீசிய வீடியோ தற்போது வெளியாகி வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபராக இருந்த கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். அதேபோல் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டார்.

இதில் கமலா ஹாரிசை வீழ்த்தி டொனால்ட் டிரம்ப் மாபெரும் வெற்றி பெற்றார். தேர்தல் முடிவுகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான நிலையில் இரண்டரை மாதங்கள் கழித்து டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார்.
அமெரிக்காவில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறையின்படி அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் நேற்று பதவியேற்றார். டொனால்ட் டிரம்ப் அதிபராக பொறுப்பேற்பது இது 2வது முறையாகும். ஏற்கனவே 2017 முதல் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை அமெரிக்க அதிபராக செயல்பட்டார். அதன்பிறகு இப்போது மீண்டும் அமெரிக்காவின் 47 வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார்.
அமெரிக்காவை பொறுத்தவரை ஒருவர் 2 முறை மட்டுமே அதிபராக பொறுப்பு வகிக்க முடியும். இதன்மூலம் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இருப்பது இதுதான் கடைசி முறையாகும். இந்நிலையில் தான் நேற்றைய தினம் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் நாடாளுமன்றத்தின் கேபிடல் கட்டிடத்தில் உள்ள ரோட்டுண்டா அரங்கில் நடந்த விழாவில் அதிபராக பதவியேற்று கொண்டார். அதேபோல் துணை அதிபராக ஜேடி வான்ஸ் ஆகியோர் பதவியேற்று கொண்டனர்.
இந்த விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். நம் நாட்டின் சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விழாவில் பங்கேற்றார். அதேபோல் டொனால்ட் டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த பதவியேற்பு விழாவுக்கு பிறகு டொனால்ட் டிரம்ப் அரசு கோப்புகளில் கையெழுத்திட்டார். முதல் கையெழுத்தாக அவர் முந்தைய ஜோ பைடன் அரசின் 78 நிர்வாக நடவடிக்கைள் மற்றும் நிர்வாக உத்தரவுகளை அதிரடியாக ரத்து செய்து டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார்.
கோப்புகளில் கையெழுத்திட்டபோது அங்கு கூடியிருந்த டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதில் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்ற டொனால்ட் டிரம்ப் தனது இருக்கையில் இருந்து எழுந்தார். கோப்புகளில் கையெழுத்திட தனக்கு வழங்கப்பட்ட அனைத்து பேனாக்களையும் கையில் எடுத்து கூட்டத்தை நோக்கி வீசினார். அதனை போட்டி போட்டி அங்கிருந்தவர்கள் கேட்ச் பிடித்தனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications