ஆரம்பித்தது வர்த்தக போர்.. சீனா பதிலடி.. அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிப்பு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் பிரசார வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 10% வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். டிரம்பின் அறிவிப்புக்குப் பிறகு சீன அதிகாரிகள் உலக வர்த்தக அமைப்பில் (WTO) புகார் அளிக்கவுள்ளதாகவும், "பொருத்தமான எதிர்மறையான நடவடிக்கைகள்" எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர். ஆனால் எந்த வகையான நடவடிக்கைகள் என்பதைத் தெளிவுபடுத்தவில்லை. சீனாவின் வர்த்தக அமைச்சகம் அமெரிக்கா WTO விதிகளை கடுமையாக மீறுவதாக கண்டித்துள்ளது. மேலும், அமெரிக்க நிலக்கரி மற்றும் திரவ இயற்கை எரிவாயுவிற்கு (LNG) சீனா, 15% வரி விதித்துள்ளது.

மெக்ஸிகோ, கனடாவுடன் ஒப்பீடு

மெக்ஸிகோ, கனடா போன்ற நாடுகள் உடனடியாக எதிர்வினை அளித்துள்ள நிலையில், சீனாவின் பதில் எதுவும் பெரிய அளவுக்கு இல்லாதது கவனத்தை ஈர்த்துள்ளது. மெக்ஸிகோ மற்றும் கனடா மீதான வரிகள் 25% ஆக இருந்தது. சீனாவுக்கு 10% மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ, கனடா மீதான கூடுதல் வரி விதிப்பை நேற்று திடீரென டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளது தனிக் கதை.

donald trump tax china

அமெரிக்கா-சீனா உறவுகள்

டிரம்ப் பதவி ஏற்பதற்கு முன்பே சீன தலைவர் ஷி ஜின்பிங்குடன் "மிகவும் நல்ல" தொலைபேசி உரையாடல் நடைபெற்றதாகவும், இருவரும் வர்த்தக விவகாரங்களில் ஒத்துழைக்க முன்வருவதாகவும் கூறப்படுகிறது. ரஷ்யா-உக்ரைன் யுத்தம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் அமெரிக்கா-சீனா ஒத்துழைப்பிற்கான வாய்ப்பு இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனா WTO-வில் புகார் அளிப்பதன் மூலம் சீனா சர்வதேச வர்த்தக விதிகளை மதிக்கிறது என்ற செய்தியை உலகளவில் பரப்ப விரும்புகிறது. அதேசமயம் அமெரிக்கா விதிகளை மீறுவதாக குற்றஞ்சாட்டுகிறது.

வர்த்தகப் போர் தீவிரமாகுமா?

2018-ஆம் ஆண்டு டிரம்ப் சீனாவுக்கு எதிராக பெரும் வரிகள் விதித்தபோது சீனாவும் 185 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க பொருட்களுக்கு வரியை கூட்டி பதிலடி அளித்தது. தற்போதும் சீனா எதிர்காலத்தில் எதிர்மறையான நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் அதன் மவுனம் சந்தேகங்களை கிளப்பியது. இந்த நிலையில், இன்று சீனா வர்த்தக போருக்கான சங்கநாதத்தை முழங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% வரி விதிக்க முடிவுசெய்த பின்னர், சீனா உடனடியாக பதிலடியாக அமெரிக்க நிலக்கரி மற்றும் எல்என்ஜிக்கு (LNG) 15% வரி விதித்துள்ளது. இந்த நடவடிக்கை வர்த்தக போர் மேலும் தீவிரமாகும் என்ற எண்ணங்களை தூண்டும் வகையில் உள்ளது. உலக வர்த்தக அமைப்பின் (WTO) வழக்குடன் மட்டுமல்லாமல், சீனா தற்போது நேரடி எதிர்மறை நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் தனது வர்த்தக உரிமைகளை விட்டுக்கொடுக்க ரெடியில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

சீனாவின் பொருளாதார தன்னிறைவு முயற்சி

சீனா தற்போது அமெரிக்க வரிகள் ஏற்படுத்தும் பாதிப்புகளை குறைப்பதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. சீனாவின் அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகள் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 3% மட்டுமே. இருந்தாலும் சீனா இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்து அமெரிக்காவுக்கு எதிராக வர்த்தக போரை தொடங்கியுள்ளது. அமெரிக்க ஊடகமான சிஎன்என், சீனா தங்கள் நாட்டுடன் நட்புறவை பேணுவதற்காகவே அமைதியாக இருப்பதாக இன்று கட்டுரை வெளியிட்ட நிலையில், சீனா பதிலடி கொடுத்து தனது தரப்பிலிருந்து முஷ்டியை முறுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+