டிரம்ப்பின் கையில் அது என்ன காயம்.. அமெரிக்க அதிபருக்கு என்ன தான் ஆச்சு? போட்டோவை பாருங்க.. ஷாக்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் எப்போதுமே சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். அதேபோலத் தான் இந்த முறையும் அவர் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். ஆனால், இந்த முறை அதற்கு அவரது பேச்சு அதற்குக் காரணமில்லை. மாறாக அவரது கையில் இருந்த சிறு காயமே அதற்குக் காரணமாகும். இந்தக் காயத்திற்கு என்ன காரணம்.. டிரம்ப் பூரண உடல்நிலையுடன் இருக்கிறாரா எனப் பல கேள்விகள் இதனால் எழுந்துள்ளது.
உலக வல்லரசு நாடாக அமெரிக்கா இருக்கிறது. அங்கு நடக்கும் ஒவ்வொரு விஷயமும் உலகெங்கும் எதிரொலிக்கும் என்பதால் அங்கு நடக்கும் விவகாரங்களை உலக நாடுகள் உற்றுக் கவனிக்கும். மேலும், அமெரிக்க அதிபரின் செயல்பாடுகளும் கூட உன்னிப்பாகக் கவனிக்கப்படும். செயல்பாடுகள் என்றால் வெறும் பேச்சு மட்டும் இல்லை. அவரது உடல்நிலை தொடங்கி எல்லாவற்றையும் கவனிப்பார்கள்.

அதிபர் உடல்நிலை
மாஜி அதிபர் பைடன் உடல்நிலை குறித்த தகவல்கள் பேசுபொருளானதை நாம் பார்த்திருக்கிறோம். ஏனென்றால் அமெரிக்காவைப் பொறுத்தவரை அதிபராக இருப்பவர் பூரண உடல்நிலையுடன் இருக்க வேண்டும் என்பதை மக்கள் எதிர்பார்ப்பார்கள். அப்போது தான் நாட்டை திறம்பட நிர்வகிக்க முடியும் என்பதே அவர்கள் கருத்து. இதனால் தான் அதிபர் உடல்நிலை எப்போதும் உற்றுக் கவனிக்கப்படும்.
இதற்கிடையே இப்போது டிரம்ப் கிட்டத்தட்ட அதேபோன்ற ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அதாவது டிரம்ப்பின் வலது கையின் பின்புறத்தில் ஒரு சிறிய காயம் காணப்பட்டது. சில நாட்களுக்கு முன்புதான் அவரது இடது கையிலும் இதேபோன்ற காயம் இருந்தது. டிரம்ப்பின் கைகளில் தொடர்ந்து இதுபோல காணப்படும் காயங்கள் அவரது உடல்நிலை குறித்த கவலைகளை எழுப்புகிறது.
சிகிச்சை காயங்கள்
இந்தக் காயங்கள் பார்த்தால் மருத்துவச் சிகிச்சையின் போது ஏற்படும் காயம், அதாவது ஊசி போடும்போது ஏற்படும் காயங்கள் போலத் தெரிவதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். 79 வயதான டிரம்ப் சில உடல்நிலை பிரச்சினைகளால் மாதக்கணக்கில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகச் சொல்லப்படும் நிலையில், இவை பேசுபொருளாகியுள்ளன.

கடந்த காலங்களில் சொல்லப்பட்டது என்ன
கடந்த காலங்களிலும் கூட டிரம்ப்பின் கைகளில் இதுபோன்ற காயங்கள் தென்பட்டுள்ளன. அப்போது டிரம்ப் டீம் இந்தக் காயத்தை மறைக்கவே முயன்றது. அதாவது அந்தச் சமயத்தில் காயத்தின் மேலே மேக்அப் போட்டு அதை மறைக்க முயன்றிருந்தது. அதேநேரம் இந்த முறை பார்த்தாலே ஏதோ காயம் இருப்பது தெளிவாகத் தெரிந்தது. நேற்று திங்களன்று தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் வெள்ளை மாளிகைக்கு வந்து டிரம்ப்பை சந்தித்த போது எடுக்கப்பட்ட போட்டோக்களில் இந்தக் காயம் தெளிவாகத் தெரிகிறது.
இருப்பினும், இது பெரிய விஷயம் இல்லை என்பதைப் போலவே வெள்ளை மாளிகையின் மருத்துவர் டாக்டர் சீன் பர்பபெல்லா மற்றும் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் தொடர்ந்து கூறி வருகிறார்கள். அதிபர் டிரம்ப் தினசரி பல நூறு பேருடன் தொடர்ந்து கைக்குலுக்குவதாலும், இதய ஆரோக்கியத்திற்குக் கொடுக்கப்படும் ஆஸ்பிரின் பயன்பாட்டாலும் இவை ஏற்பட்டதாக அவர்கள் கூறினர்.
டிரம்ப்பிற்கு ஏற்பட்ட பாதிப்பு
மேலும், அதிபர் டிரம்ப்பிற்கு chronic venous insufficiency என்ற பாதிப்பு இருப்பதாக வெள்ளை மாளிகை மருத்துவர் டாக்டர் பர்பபெல்லா கடந்த காலங்களில் கூறியிருக்கிறார். அதாவது அவரது காலில் இருக்கும் ரத்த நாளங்களால் ரத்தத்தை மீண்டும் இதயத்திற்கு அனுப்புவதில் சிரமம் இருக்கிறதாம். இருப்பினும், இது 70 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே எப்போதும் வழக்கமாகக் காணப்படும் பாதிப்பு தான் என்றும் டிரம்ப் நல்ல உடல்நிலையிலேயே இருக்கிறார் என்றும் அவர் கூறியிருந்தார்.
-
ஈரான் மீது முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா.. ஹார்முஸ் ஜலசந்தியும் க்ளோஸ்.. ஒரே பதற்றம் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!












Click it and Unblock the Notifications