அமெரிக்க அதிபர் தேர்தல்.. டிரம்ப்- ஜோ பிடன்.. முன்னணியில் இருப்பது யார்? வெளியான தகவல்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ள நிலையில், எந்த மாநிலத்தில் யாருக்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்ட கணிப்பில் ஜோ பிடன் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.
நவம்பர் 3ம் தேதி நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் குடியரசுக்கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். துணை அதிபர் வேபாட்ளராக தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதேபோல் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் பதவிக்கு முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் மற்றும் துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். பல்வேறு மாநிலங்களில் தபால் வாக்குகள் போடப்பட்டு வருகின்றன.
இந்த தேர்தலில் இன்றைய நிலவரப்படி, யாருக்கு அதிக வெற்றி வாய்ப்பு என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போதைய நிலவரப்படி எதிர்க்கட்சி தலைவரான ஜோ பிடென், அதிபர் டிரம்பை விட அதிக மாகாணங்களில் முன்னணியில் இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
பிரபல ஆங்கில ஊடகம் கடந்த 14 நாட்களில் 8 மாகாணங்களில் எடுத்த தேர்தல் வாக்கு கணிப்பை வெளியிட்டுள்ளது., ப்ளோரிடா, பெனிசுலவேனியா, மிசிகென், வடக்கு கலிபோர்னியா, அரிஜோனா, விஸ்கோனிசின், லோவா போன்ற மாநிலங்களில் ஜோ பிடென் முன்னணியில் இருக்கிறார். ஓகியோ மாகாணத்தில் டிரம்ப் முன்னணியில் இருக்கிறார். ஜோ பிடனைவிட 0.8 சதவீதம் அதிகம் பெற்று முன்னணியில் இருக்கிறார்.
அதேநேரம் ஜோ பிடென், டிரம்பைவிட ப்ளோரிடா, பெனிசுலவேனியா, மிசிகென், வடக்கு கலிபோர்னியா, அரிஜோனா, விஸ்கோனிசின், லோவா போன்ற மாநிலங்களில் குறைந்த பட்சம் ஒரு சதவீதம் முதல் அதிக பட்சம் 8 சதவீதம் வரை அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் இருப்பதாக இங்கிலாந்தைச் சேர்ந்த அந்த ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது
-
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
73 ஏவுகணை தாக்குதல்.. 656 ட்ரோன்.. சைரன் சத்தம்.. பெண்கள், குழந்தை கதறல்.. உக்ரைனை துவம்சம் செய்த ரஷ்யா! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications