கூகுளை எச்சரித்த டிரம்ப்.. அதிபர் தேர்தலில் ஜெயித்து வந்தால் அவ்வளவு தான்.. பரபரப்பான ‛வார்னிங்’

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கூகுள் நிறுவனம் தன்னை பற்றி மோசமான கட்டுரைகளை காட்டுவதோடு, கமலா ஹாரிஸ் பற்றி நல்ல கட்டுரைகளை காட்டுகிறது. இதனை கூகுள் மாற்றம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற பிறகு வழக்கு தொடரப்படும் என்று டொனால்ட் டிரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் களமிறங்கி உள்ளார். இவர்கள் 2 பேர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

us president election 2024 donald trump google

இருவரும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் சமீபத்தில் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்ற நேரடி விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் கமலா ஹாரிஸ் வென்றதாக பல ஊடகங்களில் செய்திகள் வெளியிட்டுள்ளன. ஆனால் கமலா ஹாரிஸ் உடனான விவாதத்தில் தான் வென்றதாக டொனால்ட் டிரம்ப் கூறிவருகிறார்.

அதேபோல் அமெரிக்க அதிபர் தேர்தலில் முதலில் டொனால்ட் டிரம்பை எதிர்த்து தற்போதைய அதிபர் ஜோபைடன் களமிறங்க இருந்தார். அப்போது வெளியிடப்பட்ட கருத்து கணிப்புகளில் டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகித்தார். ஆனால் ஜோ பைடனுக்கு பதில் ஜனநாயக கட்சி கமலா ஹாரிசை அறிவித்த நிலையில் டொனால்ட் டிரம்ப் பின்தங்கி உள்ளார். கருத்து கணிப்புகளில் கமலா ஹாரிஸ் தான் முன்னிலை வகித்து வருகிறார்.

இருப்பினும் கூட கருத்து கணிப்புகளை தாண்டி வெற்றி பெற டொனால்ட் டிரம்ப் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தான் தற்போது டொனால்ட் டிரம்ப் கூகுள் நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது கூகுளில் தன்னை தவறாக சித்தரிக்கும் வகையிலான ஸ்டோரிகளை கூகுள் வைத்துள்ளதாகவும், கமலா ஹாரிஸ் பற்றி நல்ல ஸ்டோரிகளை கூகுள் காட்டுவதாகவும் அவர் விமர்சனம் செய்துள்ளார். இதனால் தன்னை பற்றிய கட்டுரைகளை கூகுள் மாற்றம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் வழக்கு தொடர்வேன் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில், ‛‛ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் பற்றி கூகுள் நேர்மறையான கட்டுரைகளை காட்டுகிறது. ஆனால் என்னை பற்றி மோசமான கட்டுரைகளை கூகுள் காட்டுகிறது. இது கூகுள் நேரடியாக தேர்தலில் தலையிடுவதை காட்டுகிறது. இதனால் நீதித்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்.

இல்லாவிட்டால் அதிபர் தேர்தலில் வென்று வெள்ளை மாளிகைக்குள் நுழைந்தால் கூகுள் மீது வழக்கு தொடரப்படும். நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டு வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவித்துள்ளார். டொனால்ட் டிரம்பின் இந்த குற்றச்சாட்டு பற்றி கூகுள் தரப்பில், ‛‛ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் யாருக்கும் ஆதரவு இல்லை. அரசியல் கட்சி வேட்பாளர்கள் பற்றிய தேடலின்போது யாருக்கும் சாதகமான கட்டுரைகளை கூகுள் காட்டுவது இல்லை. இதில் கூகுள் நிறுவனம் உறுதியாக உள்ளது.

அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறார். பாலியல் தொல்லை, ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்தது, 2020 அதிபர் தேர்தலில் தலையீடு செய்தது, ஜோ பைடனிடம் தோற்றபிறகு நாட்டில் ஆதரவாளர்கள் மூலம் பிரச்சனையை கிளப்பியது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் டொனால்ட் டிரம்ப் மீது உள்ளது. இது வரும் அதிபர் தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் டொனால்ட் டிரம்ப் கூகுளை விமர்சனம் செய்து வழக்கு தொடரப்படும் என்று வார்னிங் செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+