Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிரம்ப் vs கமலா.. அதிக வாக்கு பெற்றாலும் அதிபர் தேர்தலில் தோற்க வாய்ப்பு இருக்கு. இது பெரிய ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகிலேயே மிகவும் பழமையான ஜனநாயக நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் மிகவும் வினோதமான ஒரு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த முறையில் ஒரு வேட்பாளர் அதிக வாக்குகளை வாங்கினால் கூட தோற்று போக வாய்ப்பு இருக்கிறது.. எது அதிக வாக்கு வாங்கினாலும் தோல்வியா என்று ஷாக் ஆவது புரிகிறது.. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.

அமெரிக்காவில் அடுத்த வாரம் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்.

us presidential election 2024 joe biden donald trump 2024

தேர்தலுக்கு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அங்கு பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. அமெரிக்காவில் ஒருவர் குறைவான வாக்குகள் வாங்கினாலும் கூட வெல்ல வாய்ப்பு இருக்கிறது அது தெரியுமா உங்களுக்கு.. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.

என்ன முறை: உலகில் எந்தவொரு நாடாக இருந்தாலும் அதிக வாக்குகளை பெறுவோரே தேர்தலில் வெல்வார்கள். ஆனால், அமெரிக்காவில் அப்படி இல்லை. அங்கு electoral votes என்ற முறையே பின்பற்றப்படுகிறது. இதன் காரணமாக குறைவான வாக்குகளை பெற்றாலும் கூட அதிபர் தேர்தலில் வெல்ல முடியும். கடந்த 2016இல் நடந்த அதிபர் தேர்தலில் கூட டிரம்பை விட ஹிலாரி கிளிண்டன் கூடுதல் வாக்குகளை பெற்றிருந்தார். ஆனாலும், இந்த electoral votes காரணமாக டிரம்ப் வென்று அதிபரானார்.

அமெரிக்கா முழுக்க 538 electoral votes உள்ளது. இவர்கள் அனைவரும் அதிபர் தேர்தல் முடிந்தவுடன் கூட்டம் நடத்தி அதிபரை தேர்வு செய்வார்கள். நம்ம ஊரில் எப்படி பெரும்பான்மை தேவையோ அதேபோல 270 electoral votes பெறுவோர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்கள். 1787ம் ஆண்டு அமெரிக்காவில் அரசியலமைப்பு இயற்றப்பட்டது முதலே இந்த சட்டம் தான் பின்பற்றப்படுகிறது.

இழுபறி மாகாணங்கள்: அமெரிக்காவை பொறுத்தவரை என்ன தான் 50 மாகாணங்கள் இருந்தாலும், அதில் சில மாகாணங்கள் எப்போதும் குடியரசு கட்சிக்கே வாக்களிக்கும். அதேபோல சில மாகாணங்கள் ஜனநாயக கட்சிக்கே வாக்களிக்கும். 7, 8 மாகாணங்கள் மட்டுமே மாற்றி மாற்றி வாக்களிக்கும். அந்த இழுபறி மாகாணங்களில் யார் வெல்கிறார்களோ.. அவர்களே அதிபர் தேர்தலில் வெல்வார்கள். எனவே, உண்மையில் அதிபர் தேர்தல் இந்த மாகாணங்களில் மட்டுமே பரபரப்பாக நடக்கும்.

சிக்கல் என்ன: இந்த முறையை மாற்ற கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், எதற்கும் பலன் இல்லை. இதனால் வேறு வழியின்றி அமெரிக்காவில் இந்த முறையே தொடர்கிறது. இந்த 538 electoral votes பெரும்பாலும் கட்சியின் உள்ளூர் நிர்வாகிகள் அல்லது தலைவர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு கட்சியும் இவர்களை நியமிக்கும்.

அதாவது கலிபோர்னியாவில் 54 electoral votes இருக்கும் நிலையில், அங்கு டிரம்பை விட கமலா ஹாரிஸ் ஒரு வாக்கு கூடுதலாக பெற்றால் கூட இந்த 54 electoral votesம் கமலா ஹாரிஸுக்கு தான் வரும். அதேநேரம் ஒரு வாக்கு குறைவாக பெற்றதால் டிரம்பிற்கு இந்த 54 electoral votesஇல் ஒன்று கூட கிடைக்காது. மாகாண வாரியாக இப்படி தான் தேர்தல் நடக்கும்.

2015 தேர்தல்: உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஒட்டுமொத்தமாக தேசியளவில் ஹிலாரி கிளிண்டன் 48.2% வாக்குகளை பெற்றார். டிரம்ப் 46.1% வாக்குகளை மட்டுமே பெற்றார். ஆனால், பல இழுபறி மாகாணங்களில் டிரம்ப் வென்றிருந்தார். இதனால் அவரால் 304 electoral votesஐ பெற முடிந்தது. அதேநேரம் ஹிலாரி கிளிண்டனால் 227 electoral votesஐ மட்டுமே பெற முடிந்தது.

அதாவது ஹிலாரியை விட சுமார் 30 லட்சம் வாக்குகளை குறைவாக பெற்ற போதிலும் டிரம்ப் வென்று அதிபரானார். இதற்கு காரணமே electoral votes தான். இந்த முறை இருப்பதால் அதிபர் தேர்தலில் குறைவான வாக்குகளை பெற்றாலும் அதிபராக முடியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+