எதே..ஜெலன்ஸ்கி ரஷ்ய அதிபர்..கமலா ஹாரிஸ் துணை அதிபர் ட்ரம்பா? உளறி கொட்டிய பைடன்! கேலி செய்த ட்ரம்ப்
வாஷிங்டன்: வியாழக்கிழமை அன்று நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை, அதிபர் புதின் என்றும், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை துணை அதிபர் ட்ரம்ப் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தவறுதலாகக் குறிப்பிட்டதால் அவரை பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
இன்னும் சில மாதங்களில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது அங்கு விவாதம் சூடு பிடித்திருக்கிறது. பொது நிகழ்வுகள் மற்றும் ட்ரம்புக்கு எதிரான விவாதத்தில் தற்போது 81 வயதை கடந்திருக்கும் அதிபர் ஜோபைடன் தொடர்ந்து தடுமாறி வருகிறார்.

இந்த சூழ்நிலையில் ஜனநாயக கட்சியினர் வரும் நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் தற்போதைய துணை அதிபர் ஆன கமலா ஹாரிஸை வேட்பாளராக அறிவிக்க திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
காரணம் பல்வேறு நிகழ்வுகளில் பேசி வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொடர்ந்து தனது பேச்சில் தடுமாறி வருகிறார். இதன் காரணமாக ஜோ பைடனை காட்டிலும் அதிபர் போட்டியில் இருக்கும் டொனால்ட் ட்ரம்ப்-ஐ வீழ்த்தும் வாய்ப்பு கமலா ஹாரிஸுசுக்கு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. டொனால்ட் டிரம்ப், பைடன் ஆகியோரின் வயது காரணமாக இரு கட்சிகளில் இருக்கும் துணை அதிபர்கள் வேட்பாளர்கள் மீது மக்களுக்கு நன்மதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது ஜோ பைடன் பேசி இருக்கும் பேச்சு அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட கூடாது என சொந்த கட்சியினரையே விமர்சிக்க வைக்கும் அளவுக்கு வந்திருக்கிறது அமெரிக்காவின் வாஷிங்டனில் 2024 ஆம் ஆண்டிற்கான நேட்டோ உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உளறி கொட்டினார். குறிப்பாக உக்ரைன் அதிபரான வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை 'ரஷ்ய அதிபர் புடின்' என அறிமுகப்படுத்தியது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இருந்த போதும் உடனடியாக சுதாரித்து அவர் புதினை விட சிறந்தவர் என கூறி சமாளித்தார்.
மேலும் அமெரிக்க துணை அதிபர் ஆன கமலா ஹாரிஸை 'துணை அதிபர் ட்ரம்ப்' எனவும் அவர் குறிப்பிட்டது பலத்த கேலி கிண்டலுக்கு ஆளாக்கியுள்ளது. ட்ரம்புக்கு எதிரான விவாதத்தின் போது ஜோ பைடனின் பேச்சு அவரது மனக்கூர்மையை மற்றும் வயது மீதான விமர்சனத்தை எழுப்பிய நிலையில், அது தற்போது மேலும் கேலி கிண்டலுக்கு ஆளாக்கியுள்ளது.
கடந்த சில தினங்களாகவே பைடன் இப்படி வயது முதிர்வால் இப்படி பேசி வந்திருந்தாலும், இப்போது அது அதிக கவனம் பெற முக்கிய காரணம் ஒன்று உள்ளது. காரணம், பைடன் இந்த மாநாட்டுக்கு முன்னதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பெரிய பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு முன்னதாக நடந்த உலகளாவிய முக்கிய நிகழ்வில் உளறியதன் மூலம், அவரை அதிபர் தேர்தலில் இருந்தே ஒதுங்குமாறு அவரது ஜனநாயகக் கட்சியினரே கூற அடித்தளமாய் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் கேலி செய்துள்ளார். இதுதொடர்பாக அவரது சமூக வளைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஜோ பைடன் தனது செய்தியாளர் சந்திப்பை மிகவும் மோசமாக தொடங்கியுள்ளார். நான் அதிபர் ட்ரம்பை.. துணை அதிபராக தேர்ந்தெடுத்திருக்க மாட்டேன்.. கிரேட் ஜாப் ஜோ' என கிண்டல் செய்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications