அமெரிக்க அதிபர் தேர்தல்.. இறங்கி வந்த ஜோ பைடன்.. போட்டியில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகுவதாக அறிவித்துள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடுவேன் பிடிவாதமாக கூறி வந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து ஜோ பைடன் விலகுவதாக அறிவித்துள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் அவர் போட்டியிட இருந்த நிலையில் தொடர் அழுத்தங்களால் இந்த முடிவை எடுத்துள்ளார்.

அமெரிக்காவில் 4 ஆண்டுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடந்து வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு இறுதியில் நடந்த தேர்தலில் அதிபராக இருந்த குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்பை ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஜோ பைடன் அதிபராக செயல்பட்டு வரும் நிலையில் அவரது பதவிக்காலம் என்பது விரைவில் முடிவுக்கு வர உள்ளது.
இந்நிலையில் தான் இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் டொனால்ட் டிரம்ப் களமிறங்குகிறார். அவர் குடியரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட உள்ளார். அதேபோல் வரும் அதிபர் தேர்தலில் மீண்டும் ஜோ பைடன் களமிறங்குவதில் ஆர்வம் காட்டினார். மீண்டும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிடுவேன் என பிடிவாதமாக இருந்தார்.

ஆனால் ஜோ பைடனுக்கு இப்போது 81 வயது ஆகிறது. அதோடு அவர் அவ்வப்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகிறார். இதனால் அவர் போட்டியிட வேண்டாம் என்று ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். ஆனால் ஜோ பைடன் போட்டியிடுவதில் உறுதியாக இருந்தார். ஆனால் அழுத்தம் அதிகரிக்கவே அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் ஜோ பைடன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் ஜோ பைடன் கூறியிருப்பதாவது:- அமெரிக்க அதிபராக நான் பணியாற்றுவது என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது எனது எண்ணமாக இருந்தாலும், தேர்தல் போட்டியில் இருந்து விலகுகிறேன். மீதமுள்ள எனது பதவிக்காலத்தை நிறைவேற்றுவதில் தீவிர கவனம் செலுத்துவேன்.
நான் எடுத்த முடிவு ஜனநாயக கட்சி மற்றும் நாட்டின் நலன் சார்ந்து எடுத்தது ஆகும். எனது இந்த முடிவு தொடர்பாக விரைவில் விரிவாக பேசுவேன். நான் மீண்டும் அதிபராக வேண்டும் என ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி. என் மீது அமெரிக்க மக்கள் வைத்த நம்பிக்கைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றிய துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு நன்றி.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக நான் அறிவிக்கப்பட்டதும் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிசையே தேர்வு செய்தேன். ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிசுக்கு எனது முழு ஆதரவை வழங்க விரும்புகிறேன். ஜனநாயக கட்சியினர் அனைவரும் ஒன்று கூடி டொனால்டு ட்ரம்பை வீழ்த்த வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications