அமெரிக்க அதிபர் தேர்தல்.. ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ்? ஜோ பைடன் ஆதரவு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிட ஜோ பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிட ஆர்வம் காட்டினார். ஆனால் பிரசாரத்தில் தடுமாறியது.. வயது முதிர்வு காரணமாக நியாபக மறதி என பல சிக்கல்களை ஜோ படைன் எதிர்கொண்டார்.

இதனால், அதிபர் தேர்தலில் ஜோ பைடன் போட்டியிட எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், போட்டியில் இருந்து விலக மாட்டேன் என ஜோ பைடன் பிடிவாதமாக இருந்தார். ஜோ பைடனுக்கு இப்போது 81 வயது ஆகிறது. அதோடு அவர் அவ்வப்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகிறார். இதனால் அவர் போட்டியிட வேண்டாம் என்று ஜனநாயக கட்சியினர் விருப்பம் தெரிவித்தனர்.
ஜனநாயக கட்சியின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூட ஜோ பைடன் விலக வேண்டும் எனக் கூறினார். அவர் கூறுகையில் ‛‛ஜோ பைடனின் வெற்றி பெறும் தன்மை என்பது குறைந்து விட்டது. இதனால் அவர் வெற்றி பெற முடியுமா? என்பதையும், தேர்தலில் போட்டியிடுவது பற்றியும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்'' எனக் கூறினார். ஜோ பைடனின் குடும்பத்தினரும் அவர் போட்டியில் இருந்து விலக வேண்டும் என கூறியதாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில் ஜோ பைடன் தனது முடிவில் இருந்து இறங்கி வந்து அதிபர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார். இதனால், ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக யார் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கமலா ஹாரிசை அதிபர் வேட்பாளாரக நியமிக்க ஜோ பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications