பிரதமர் மோடியை மறந்த அதிபர் பைடன்.. மேடையிலேயே உளறி கொட்டி.. அடடே என்ன இப்படி ஆகிடுச்சு!
வாஷிங்டன்: அமெரிக்காவில் குவாட் அமைப்பின் மாநாடு நடக்கும் நிலையில், அதில் நான்கு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். குவாட் மாநாடு முடிந்தவுடன் நடந்த பிரஸ் மீட்டில், பிரதமர் மோடியை அறிமுகப்படுத்த வேண்டியதை மறந்த அமெரிக்க அதிபர் பைடன் திக்கித் திணறி நின்றார் இது குறித்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
அமெரிக்க அதிபராக இப்போது பைடன் இருக்கிறார். 81 வயதான பைடன் சில உடல்நிலை பாதிப்புகளால் அவதிப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் சில நேரங்களில் அவர் அப்படியே உறைந்து நின்றுவிடுவார். அல்லது என்ன செய்ய வேண்டும் என்பதை மறந்துவிடுவார்.

பைடன்: இதற்கிடையே மீண்டும் அதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. அமெரிக்காவில் இப்போது குவாட் அமைப்பின் மாநாடு நடைபெறுகிறது. டெலாவேரில் நடக்கும் இந்த மாநாட்டில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் பங்கேற்கின்றன. இதில் பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்த மாநாடு முடிந்தவுடன் நடந்த செய்தியாளர் சந்திப்பில் 4 நாட்டுத் தலைவர்களும் ஒரே மேடையில் பங்கேற்றனர். அப்போது ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் மற்றும் ஜப்பானின் ஃபுமியோ கிஷிடா ஆகியோருடன் இணைந்து இந்தோ- பசிபிக் பகுதியில் அதிகரிக்கும் புற்றுநோய் குறித்துப் பேசினர். அதைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் விவரித்தனர்.
தடுமாறி பைடன்: இதற்குப் பிறகு அதிபர் பைடன் பிரதமர் மோடியை மேடையில் அறிமுகப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், பைடன் அதை மறந்துவிட்டார். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் அவருக்குக் குழப்பம் இருந்தது அவரை பார்த்தாலே தெரிந்தது. "அடுத்து நான் யாரை அறிமுகப்படுத்த வேண்டும்?" எனக் கேட்ட மைக்கிலேயே பைடன், "அடுத்தது யார்" என மேடையிலேயே கேட்டார்.
பைடன் அடுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை மறந்துவிட்டார் என்பதை உணர்ந்த தொகுப்பாளர் பிரதமர் மோடியை அறிமுகப்படுத்தினார். மோடியும் எழுந்து நின்று தனது உரையைத் தொடர்ந்தார்.
முதல்முறை இல்லை: பிரதமர் மோடியை அறிமுகப்படுத்த மறந்து உளறிய பைடனின் இந்த வீடியோ இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதேநேரம் 81 வயதான பைடன் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப் போவது இது முதல்முறை இல்லை. கடந்த ஜூலை மாதம், வாஷிங்டனில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது அவர் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை ரஷ்ய அதிபர் என்று அறிமுகம் செய்து வைத்தது பரபரப்பைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
பைடன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகப் பல மாதங்களாகத் தகவல் பரவி வருகிறது. பல பொது நிகழ்வுகளில் பைடனின் நடவடிக்கைகளும் அதைக் காட்டுவதாகவே இருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் விவாதத்தில் தான் பைடனின் உடல்நிலை எந்தளவுக்கு மோசமாக இருந்தது என்பது தெளிவாகத் தெரிந்தது. பலரும் இதைச் சுட்டிக்காட்டி அழுத்தம் கொடுத்ததால் அவர் அதிபர் தேர்தலில் இருந்து விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications