ரஷ்யா இத மட்டும் பண்ணட்டும்.. நேட்டோ கண்டிப்பாக உள்ளே வரும்.. உக்ரைன் போர் குறித்து உக்கிரமான பைடன்!
வாஷிங்டன் : உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா இரசாயன ஆயுதத்தை பயன்படுத்தினால் அதற்கு நேட்டோ "பதிலளிக்கும்" என்று பிரஸ்ஸல்ஸில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டிற்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
நேட்டோ விவகாரத்தில் உக்ரைன் எல்லையில் படைகளைக் குவித்த ரஷ்யா திடீரென போரை தொடங்கியது. தரைவழி, வான்வழி, கடல்வழி என மும்முனை தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா 30வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைன் எல்லையில் பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் போர்
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து குண்டு மழை பொழிகின்றன. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல் ஒருமாதம் கடந்து விட்டாலும் கூட இன்னும் தாக்குதலின் தீவிரம் குறையவில்லை. உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா தனது தாக்குதலை தொடுத்து வருகிறது. ஆனால், உக்ரைன் படைகள் கடும் சவால் அளிப்பதால், ரஷ்யாவில் இன்னும் தலைநகரை கைப்பற்ற முடியவில்லை.

தக்க பதிலடி
மேலை நாடுகளின் உதவியுடன் உக்ரைன் தொடர்ந்து ரஷ்ய படைகளுடன் போர் புரிந்து வரும் நிலையில், மூன்றாவது வாரத்திலும் ரஷ்யாவுக்கு உக்ரைன் படைகள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றன. ரஷ்யப் படைகள் தற்போது உணவுப் பஞ்சத்தால் தவித்து வருவதாகவும் மேலும் அவர்களது வாகனங்களுக்கு எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக ரஷ்யப் படை வீரர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நேட்டோ பதிலளிக்கும்
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா இரசாயன ஆயுதத்தை பயன்படுத்தினால் அதற்கு நேட்டோ "பதிலளிக்கும்" என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார். பிரஸ்ஸல்ஸில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டிற்குப் பிறகு பேசிய பைடன், " "அவர் அதைப் பயன்படுத்தினால் நாங்கள் பதிலளிப்போம். பதிலின் தன்மை பயன்பாட்டின் தன்மையைப் பொறுத்தது" என்றும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைன் மீதான போரில் இரசாயன ஆயுதத்தை பயன்படுத்தினால் அதற்கு நேட்டோ "பதிலளிக்கும்" என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார்.
Recommended Video

ஜோ பைடன் எச்சரிக்கை
முன்னதாக ,இனிமேல் தான் உண்மையான அச்சுறுத்தல் இருக்கும் என தான் நினைப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று முன் தினம் எச்சரித்தார். நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஐரோப்பாவிற்கு புறப்பட்டபோது, "உக்ரைன் மீது ரஷ்யா இரசாயன ஆயுத தாக்குதலை தொடங்க சாத்தியக்கூறுகள் உள்ளன. இது உண்மையான அச்சுறுத்தலாக அமையும். இப்போது ஏற்பட்டுள்ள தளவாட சிக்கல்கள் மற்றும் உக்ரேனிய படைகளின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக, ரஷ்யா இரசாயன அல்லது அணு ஆயுதங்களை அதன் படையெடுப்பு நிறுத்த ஆயுதங்களாக பயன்படுத்தலாம் என்ற அச்சம் நிலவுகிற எனக் கூறி இருந்தார்.












Click it and Unblock the Notifications