டிரம்ப் அடித்த மெகா பல்டி! "வரி எதுவும் இல்லை.." கிரீன்லாந்து விவகாரத்தில் ட்விஸ்ட்.. என்ன நடந்தது?
வாஷிங்டன்: கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் மீது வரி இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். கிரீன்லாந்து தர மறுத்தார் ஐரோப்பிய நாடுகள் மீது வரி விதிப்பேன் என டிரம்ப் மிரட்டியிருந்த நிலையில், இப்போது வரி இல்லை என அவர் அறிவித்துள்ளார். கிரீன்லாந்துக்கு ராணுவத்தை அனுப்பப்போவதில்லை என டிரம்ப் கூறியிருந்த நிலையில், இப்போது வரியும் இல்லை எனச் சொல்லி இருப்பதால் பதற்றம் தணிந்துள்ளது.
ஆர்டிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள கிரீன்லாந்து பகுதியை அமெரிக்கா வசம் ஒப்படைக்க வேண்டும் என டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார். அந்த பிராந்தியத்தில் சீனா மற்றும் ரஷ்யா ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும் அந்த நாடுகள் ஆக்கிரமித்தால் அதைச் சமாளிக்கும் திறன் டென்மார்க்கிற்கு இல்லை என்பதால் அந்தப் பிராந்தியத்தைத் தங்களுக்குத் தர வேண்டும் என்று டிரம்ப் சொல்லி வந்தார்.

கிரீன்லாந்து
மேலும், இதற்காக ராணுவ நடவடிக்கையையும் பரிசீலனை செய்வதாகவும் அவர் கூறி வந்தார். டிரம்பின் இந்த பேச்சுக்கு டென்மார்க் மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் ஐரோப்பிய நாடுகளையும் சாடிய டிரம்ப், அவர்கள் மீது 10% வரி விதிக்கப் போவதாகக் குறிப்பிட்டார். மேலும், கிரீன்லாந்து விவகாரத்தில் உடன்பாடு எட்டவில்லை என்றால் வரியை 25% வரை உயர்த்துவேன் என்றும் அவர் மிரட்டினார். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
டிரம்ப் பல்டி
இதற்கிடையே கிரீன்லாந்து விவகாரத்தில் வரிகளை அறிவிக்கப் போவதில்லை என டிரம்ப் கூறியுள்ளார். ஏற்கனவே நேற்றைய தினம் உலக பொருளாதார மன்றத்தில் பேசிய டிரம்ப், கிரீன்லாந்து மீது அமெரிக்கா ராணுவத்தை இறக்காது என அறிவித்து இருந்தார். அந்த அறிவிப்பு வந்து சில மணி நேரத்திலேயே வரி விதிக்கப் போவதில்லை என்பதையும் டிரம்ப் அறிவித்துள்ளார்.
உலகப் பொருளாதார மன்றத்தில் நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூடேவுடனான சந்திப்புக்குப் பிறகு டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார். பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருந்த இந்த வரிகள், நேட்டோ தலைவருடனான பேச்சுவார்த்தைக்குப் பின் ரத்து செய்யப்படுவதாக அவர் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் அறிவித்தார்.
அறிவிப்பு
இது குறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல்ஸ் பக்கத்தில் மேலும், "நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டேவுடன் ஆக்கப்பூர்வமான ஒரு ஆலோசனையை நடத்தினேன். கிரீன்லாந்து மற்றும் முழு ஆர்க்டிக் பிராந்தியத்திற்குமான எதிர்கால ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்தத் தீர்வு, நிறைவேற்றப்பட்டால், அமெரிக்காவிற்கும், அனைத்து நேட்டோ நாடுகளுக்கும் ஒரு சிறந்த ஒன்றாக இருக்கும்.
இதன் காரணமாகப் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவிருந்த இறக்குமதி வரிகளை நான் விதிக்கப் போவதில்லை. கிரீன்லாந்தைப் பொறுத்தவரை அங்கும் கோல்டன் டோம் பாதுகாப்பு தருவது குறித்துக் கூடுதல் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. வரும் காலங்களில் கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும். அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் இந்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து நடத்துவார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
வரவேற்பு
கிரீன்லாந்தைக் கைப்பற்றப் போவதாக டிரம்ப் சொன்னபோது அதை மிக கடுமையாக எதிர்த்த டென்மார்க் வெளியுறவு அமைச்சர் லார்ஸ் லோக்கி ராஸ்முசென், வரிகள் திட்டத்தைக் கைவிட்ட இந்த முடிவை வரவேற்றார். இது ஒரு நேர்மறையான திருப்பம் என்றார் ராஸ்முசென். இந்த விவகாரம் சரியான முறையிலேயே செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பின்னணி
டிரம்ப்பிற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க நிறுவனங்களுக்கு வரி விலக்கு தரும் மசோதா மீதான வாக்கெடுப்பை ஐரோப்பிய ஒன்றியம் தள்ளி வைத்திருந்தது. இந்த மசோதா மீது அடுத்த சில வாரங்களில் வாக்கெடுப்பு நடக்கும் எனக் கூறப்பட்டு இருந்த நிலையில், டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளால் அதைத் தள்ளி வைக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்தது. அதைத் தொடர்ந்தே டிரம்ப் வரி இல்லை.. படையெடுப்பு இல்லை எனப் பல்டி அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஈரான் போர் ஆரம்பித்த பின் முதல் முறை நல்ல சம்பவம்.. ஹார்முஸை கடந்த 2 அமெரிக்க போர்க்கப்பல்கள் -
மூடு மாறிய டிரம்ப்! 'ரீசெட்' பண்ணிடுவோம் பாத்துக்கோங்க.. ஈரான் விஷயத்தில் வாயை விட்டுட்டாரே! -
1.4 கோடி வரை சம்பளம்.. வீடியோ கேம் விளையாட தெரிந்தால்.. அமெரிக்காவில் லட்டு மாதிரி வேலை -
உலகமே தேடும் பாகிஸ்தானின் செரீனா ஹோட்டல்.. ஈரான் அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு தேர்வானது எப்படி? -
முக்கிய கட்டத்தை எட்டிய பேச்சுவார்த்தை.. பாகிஸ்தானிலிருந்து வந்த குட் நியூஸ்! இந்தியாவுக்கு நிம்மதி! -
நடுவில் பாகிஸ்தானை வைத்து.. ஈரானிடம் பேச்சுவார்த்தையை தொடங்கியது அமெரிக்கா! அடுத்து என்ன நடக்கும்? -
அமைதி பேச்சுவார்த்தையின் முக்கிய கட்டம்.. பாக்., பிரதமரை சந்தித்த அமெரிக்க துணை அதிபர்! -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. பேச்சுவார்த்தையில் தொடர் இழுபறி! நெதன்யாகு லேசுபட்ட ஆள் கிடையாது! -
திடீரென அமெரிக்க துணை அதிபர் விமானத்தை சூழ்ந்த போர் விமானங்கள்.. பாகிஸ்தான் வான் எல்லையில் பரபரப்பு! -
பறந்த 26 போன் கால்கள்.. பாகிஸ்தான் வெறும் 'முகமூடி' தான்.. அமெரிக்கா- ஈரான் போரில் சீனா ஆடிய கேம் -
அடங்க மறுக்கும் ஈரான்.. விடாமல் விரட்டும் ட்ரம்ப்.. ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் வெடிக்கும் போர்? -
விண்டோஸை தூக்கி எறியும் பிரான்ஸ்... அமெரிக்காவிற்கு பயப்படுகிறதா.. பின்னணி என்ன?











Click it and Unblock the Notifications