வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போட்றா மியூசிக்க.. கையை நீட்டி நீட்டி டிரம்ப் போட்ட செம்ம டான்ஸ்.. எவ்வளவு மகிழ்ச்சி.. பாருங்க!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க தேர்தல் நாளாக இன்று அதிபர் டிரம்ப் மக்களை கவரும் விதமாக ஓட்டு, ஓட்டு, ஓட்டு என்று டேக் போட்டு அவர் நடனமாடும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்,

அமெரிக்க தேர்தல் நான்கு ஆண்டுக்கு ஒவ்வொரு முறையும் நவம்பர் மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை நடைபெறுவது வழக்கம் . அந்த வகையில் இன்று அமெரிக்க தேர்தல் நடைபெற்று வருகிறது,

அமெரிக்காவின் ஆளும் கட்சியான குடியரசு கட்சி சார்பில் தற்போது அதிபராக இருக்கும் டொனால்ட் டிரம்ப் (74) மீண்டும் போட்டியில் உள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் (78) போட்டியில் உள்ளார்.

us presidential election 2020: drump dancing video on viral at social media

அமெரிக்காவில் மொத்தம் 538 வாக்காளர் குழு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள மாகாணங்களில் உள்ள மக்கள் தொகை அடிப்படையில் வாக்காளர் குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை மாறுபாடுகிறது. இதில் 270 இடங்களை வெல்பவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

அடுத்த சில மணி நேரம் தான் நாம் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறது.. ஜில் பிடன் வீடியோஅடுத்த சில மணி நேரம் தான் நாம் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறது.. ஜில் பிடன் வீடியோ

தேர்தலில் அமெரிக்க மக்கள் தங்கள் வாக்குகளை ஆர்வமுடன் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் தேர்தல் நாளாக இன்று அதிபர் டிரம்ப் மக்களை கவரும் விதமாக வாக்கு, வாக்கு, வாக்கு, என என்று டேக் போட்டு விமான நிலையம், கடற்கரை, மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என டிரம்ப் பிரச்சாரத்திற்கு சென்ற இடங்களில் எல்லாம் ஆதரவாளர்கள் முன்பு ஆடிய நடனத்தின் தொகுப்பு அந்த வீடியோவில் உள்ளது.

செம்ம பின்னணி இசையுடன் இருக்கும் டிரம்பின் நடன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டிரம்ப் இந்த முறை தான் மிகப்பெரிய வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

English summary
The American people are eagerly casting their ballots. On election day, President Trump released a video of himself dancing to the tune of "Vote, Vote, Vote" to captivate the crowd.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X