Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்ணீர் விட்ட பைடன்.. கமலா ஹாரிஸ் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென எமோஷ்னல் ஆன கூட்டம்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவின் சிகாகோவில் நடந்த ஜனநாயக தேசிய மாநாடு நடந்து வருகிறது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென மேடையேறிய கமலா ஹாரிஸ் பைடனை புகழ்ந்து பேசினார். நம்ப முடியாத அளவுக்கு மிகச் சிறந்த ஒரு அதிபராக இருந்ததற்கு நன்றி எனக் குறிப்பிட்டார். கமலா ஹாரிஸ் பேச்சைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்ட ஜோ பைடன் கண்ணீர் விட்டார்.

அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுவது கடந்தாண்டே உறுதியாகிவிட்டது. அதைத் தொடர்ந்து அவர் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியிருந்தார்.

US Presidential Election 2024 Joe Biden Kamala Harris 2024

பைடன்: ஆனால், ஜனநாயக கட்சியில் யாருமே எதிர்பார்க்காத பல மாற்றங்கள் நடந்தது. முதலில் ஜனநாயக கட்சி சார்பில் பைடன் போட்டியிடுவதாகவே இருந்தது. இருப்பினும், டிரம்ப் உடனான விவாதத்தில் அவர் சொதப்பியது அவருக்கு எதிராகப் போனது. பைடன் உடல்நிலை குறித்து அப்போது பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கினர். தொழிலதிபர்கள் பலரும் பைடன் போட்டியிட்டால் நன்கொடை தர மாட்டோம் என்றும் அழுத்தம் கொடுக்க தொடங்கினர்.

இதையடுத்து வேறு வழியில்லாமல் பைடன் அதிபர் ரேஸில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து கமலா ஹாரிஸ் அதிபர் ரேஸுக்குள் வந்தார். கமலா ஹாரிஸ் உள்ளே வந்ததும் நிலைமை மொத்தமாக மாறியது. அவருக்கான ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கருத்துக் கணிப்புகளிலும் அவர் டிரம்பை ஓவர்டேக் செய்துள்ளார்.


எமோஷ்னல்: இப்படி கமலா ஹாரிஸுக்கு சாதகமான சூழல் நிலவும் நிலையில், ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு இப்போது சிகாகோவில் நடக்கிறது. இந்த மாநாட்டின் இறுதியில் தான் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறார். இந்த மாநாடு நேற்று தொடங்கிய நிலையில், முதல் நாளே அங்கு எமோஷ்னலான சம்பவம் நடந்துள்ளது.

தற்போது அதிபராக இருக்கும் பைடன் அந்த நிகழ்ச்சியில் தனது கட்சியினர் இடையே பிரியாவிடை உரை ஆற்றினார். ஒரு மாதத்திற்கு முன்பு யார் பைடனுக்கு அழுத்தம் கொடுத்து அவரை வெளியேற வைத்தார்களோ, அவர்களே பைடனுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். வி லவ் யூ ஜோ என்று அவர்கள் எழுப்பிய கோஷம் விண்ணைப் பிளப்பதாக இருந்தது.

கண்ணீர்: இதைச் சற்றும் எதிர்பார்க்காத பைடன் சட்டென எமோஷ்னல் ஆனார். கண்ணீர் விட்ட அவர் கூட்டத்தைப் பார்த்து ஐ லவ் யூ என பதிலுக்குக் கூறினார். தொடர்ந்து பேசிய பைடன். "நமது வேலை இன்னும் முடியவில்லை. இன்னும் பல வேலைகள் இருக்கிறது. அது உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் நாம் சரியான திசையில் செல்கிறோம். நல்ல முடிவு கிடைக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

கமலா ஹாரிஸ்: அப்போது பேசிய கமலா ஹாரிஸ, "நமக்கு கடந்த 4 ஆண்டுகள் மிகச் சிறப்பான ஒரு அதிபர் கிடைத்திருந்தார். அவரை கொண்டாட்டத்துடன் வழியனுப்ப நான் விரும்புகிறேன். நாங்கள் எப்போதும் உங்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறோம்" என்றார். இதைக் கேட்டவுடன் பைடன் மீண்டும் எமோஷ்னல் ஆனார். இது தொடர்பான போட்டோ தான் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

தற்போது வெளியான அமெரிக்க அதிபர் தேர்தலில் சர்வேயில் டிரம்பை காட்டிலும் கமலா ஹாரிஸ் 4% முன்னிலையில் இருக்கிறார். அதிபர் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் ஸ்விங் மாகாணங்களில் கூட கமலா ஹாரிஸ் கை தான் ஓங்கி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+