"பூனை திருட்டு.." சீரியஸாக பேசிய டிரம்ப்! வெடித்து சிரித்த கமலா ஹாரிஸ்.. ஒரு நொடி ஸ்டன் ஆன நெறியாளர்
வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்கும் நிலையில், முன்னதாக கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் இடையே விவாதம் நடந்தது.. அப்போது ஒரு கட்டத்தில் அமெரிக்க மக்களின் பூனைகள் எல்லாம் திருட்டுப் போவதாக டிரம்ப் ரொம்பவே சீரியஸாக சொல்ல அதைக் கேட்டதும் கமலா ஹாரிஸ் வெடித்துச் சிரித்தார். இது குறித்த முழு பின்னணியைப் பார்க்கலாம்.
அமெரிக்காவில் நவ. மாதம் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடும் நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

இதற்கிடையே இரு தலைவர்களுக்கும் இடையே முதலாம் விவாதம் நடந்தது. அமெரிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு இந்த விவாதம் நடைபெற்றது.
விவாதம்: இந்த விவாதத்தில் அமெரிக்கப் பொருளாதாரம், கருக்கலைப்பிற்கான உரிமை, எல்லை பாதுகாப்பு, இஸ்ரேல் ஹமாஸ் போர் என பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விரிவாக இரு தலைவர்களும் விவாதம் நடத்தினர். ஒருவர் பேசும் போது அடுத்தவரின் மைக் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் மாறி மாறி பேசவில்லை. ஒருவர் சொல்லும் கருத்துகள் தெளிவாகக் கேட்க முடிந்தது.
அப்படி இருவரும் காரசாரமாக விவாதித்துக் கொண்டு இருந்த போது அங்கு ஒரு சுவாரசியமான நிகழ்வு நடந்தது. அதாவது டிரம்ப் மிகவும் சீரிஸயாக பேசிக் கொண்டு இருந்த போது திடீரென கமலா ஹாரிஸ் வெடித்துச் சிரித்தார். இதைப் பார்த்ததும் டிரம்ப் டென்ஷன் ஆகிவிட்டார். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
புலம்பெயர்ந்தோர்: இந்த விவாதத்தில் டிரம்ப் வழக்கம் போலப் புலம் பெயர்ந்தோர் குறித்தே அதிகம் பேசினார். புலம் பெயர்ந்த தொழிலாளர்களால் அமெரிக்கப் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அமெரிக்க மக்களுக்கு வேலை கிடைப்பது இல்லை என்றும் அவர் பேசினார். ஒரு கட்டத்தில் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் புலம் பெயர்ந்தோர் பூனைகளைத் திருடிச் சாப்பிடுவதாகக் கூறினார். இதைக் கேட்டவுடன் தான் கமலா ஹாரிஸ் வெடித்துச் சிரித்துவிட்டார்.
பூனை திருட்டு: அதாவது இந்த விவாதத்தில் பேசிய குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்ப், "ஒஹியோ மாகாணத்தில் உள்ள ஸ்பிரிங்ஃபீல்டில், சட்டவிரோதமாகக் குடியேறிய நபர்கள் நாய்களைச் சாப்பிடுகிறார்கள்.. இப்போது அமெரிக்காவுக்குள் புதிதாக வந்துள்ள அவர்கள் பூனைகளைக் கூட திருடிச் சாப்பிடுகிறார்கள். அங்கு அமெரிக்க மக்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளை எல்லாம் திருடி சாப்பிடுகிறார்கள். இதுதான் இப்போது இந்த மண்ணில் நடக்கிறது" என்று டிரம்ப் ரொம்பவே சீரிஸயாக பேசிக் கொண்டு இருந்தார்.
வெடித்துச் சிரித்த கமலா ஹாரிஸ்: ஆனால், பூனைகளை எல்லாம் திருடிச் சாப்பிடுகிறார்கள் என டிரம்ப் சொன்னதும் கமலா ஹாரிஸ் வெடித்துச் சிரித்துவிட்டார். ஏனென்றால் ஒஹியோ மாகாணத்தில் புலம் பெயர்ந்தோர் பூனைகளைத் திருடிச் சாப்பிடுவதாகச் சொல்லப்படும் தகவல் என்பது இணையத்தில் பரவிய ஒன்று.. அதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. ஸ்பிரிங்ஃபீல்ட் நிர்வாகமும் கூட இந்தத் தகவலைத் திட்டவட்டமாக மறுத்து இருந்தது. பூனைகளைத் திருடிச் சாப்பிடுவதாகக் கூறும் குற்றச்சாட்டில் எந்த அடிப்படையும் இல்லை என்று கூறியிருந்தார்.
நகராட்சி நிர்வாகமே அதிகாரப்பூர்வமாக அந்த செய்தியை மறுத்துவிட்ட போதிலும், இணையத்தில் பரவிய செய்தியை டிரம்ப் அதிபர் தேர்தல் விவாதத்தில் கூறியிருக்கிறார். இதற்கு பதிலளிக்காமல் கமலா ஹாரிஸ் வெறுமன சிரித்து மட்டும் இருக்கிறார். அதாவது டிரம்பின் இந்த குற்றச்சாட்டுகள் நகைப்புக்குரியது என்பது போலவே கமலா ஹாரிஸ் ரியாக்ஷன் இருந்தது.












Click it and Unblock the Notifications