"டிரம்ப் தோற்கணும்.. வெறுப்பின் உச்சத்தில் மனைவி மெலானியா.. கமலா ஹாரிஸுக்கே சப்போர்ட்.." பரபர தகவல்
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தாண்டு அதிபர் தேர்தல் நடக்கும் நிலையில், டிரம்ப்பின் மனைவி கூட அவர் தோற்க வேண்டும் என நினைப்பதாக டிரம்ப் நிர்வாகத்தில் பணிபுரிந்த அந்தோணி ஸ்காராமுச்சி கூறியிருக்கிறார். டிரம்ப்பின் மனைவி மெலானியா கூட கமலா ஹாரிஸ் வெல்ல வேண்டும் என்றே நினைப்பதாகவும் கூறி அந்தோணி ஸ்காராமுச்சி பகீர் கிளப்பியுள்ளார்.
அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர்.

இரு தரப்பிற்கும் இடையே போட்டி கடுமையாக இருப்பதால் பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே டிரம்பை காலி செய்யும் வகையில் இப்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
பகீர் கருத்து: அதாவது டிரம்ப் தோற்க வேண்டும் என்று அவரது மனைவி மெலானியாவே விரும்புவதாக வெள்ளை மாளிகையின் முன்னாள் தகவல் தொடர்பு செயலாளர் அந்தோணி ஸ்காராமுச்சி தெரிவித்துள்ளார். மேலும், கமலா ஹாரிஸ் வெல்ல வேண்டும் என்றே மெலானியா நினைப்பதாகவும் கூறி அந்தோணி ஸ்காராமுச்சி பகீர் கிளப்பியுள்ளார். தனது கணவர் டிரம்ப் மீது மெலானியா வெறுப்பில் இருப்பதாகவும் இதன் காரணமாகவே கமலா ஹாரிஸை அவர் ஆதரிப்பதாகவும் கூறியுள்ளார்.
அந்தோணி ஸ்காராமுச்சி சமீபத்தில் நேர்காணல் ஒன்றை அளித்திருந்தார். அதில் தான் அவர் இந்த கருத்துகளைக் கூறியிருக்கிறார். கமலா ஹாரிஸ் வெற்றியில் மெலனியா டிரம்ப் ரொம்பவே ஆர்வமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அந்தோணி ஸ்காராமுச்சியின் இந்தக் கருத்துகள் அமெரிக்க அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
காரணம்: ஏனென்றால் கடந்த 2016, 2020 ஆண்டுகளில் டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது, அவருக்கு ஆதரவாக மெலானியாவும் டிரம்பிற்காக வந்து பிரச்சாரம் செய்தார். பல ஊர்களுக்குச் சென்று பிரச்சார கூட்டங்களில் பேசினார். டிரம்புடன் இணைந்து பேரணிகளில் கலந்து கொண்டார். ஆனால், இந்தாண்டு மெலானியாவை எங்கும் பார்க்கவே முடியவில்லை. ஓரிரு கூட்டங்களில் மட்டும் பங்கேற்றார். டிரம்ப் தனி ஆளாகவே தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
இதன் காரணமாகவே ஸ்காராமுச்சியின் கருத்துகள் முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், கமலா ஹாரிஸ் வெல்ல வேண்டும் என்பதிலேயே மெலானியா ஆர்வமாக இருப்பதாகவும் அவர் கூறினார். தனது கணவர் டிரம்ப் மீது மெலானியா வெறுப்பில் இருப்பதாகவும் இதன் காரணமாகவே கமலா ஹாரிஸ் வெல்ல வேண்டும் என அவர் நினைப்பதாகவும் கூறினார்.
பின்னணி என்ன: எந்தவொரு பிரச்சார கூட்டத்திலும் பங்கேற்காததால் டிரம்ப்- மெலானியா இணைந்து பங்கேற்காத நிலையில், இருவரும் விவாகரத்து பெற உள்ளதாகக் கூட தகவல் வெளியானது. அதன் பிறகே ஓரிரு கூட்டங்களில் மட்டும் அவர் கலந்து கொண்டார். டிரம்ப்- மெலானியாவின் மகன் இப்போது கல்லூரி சேரப் போகிறார். அதனால் அவருக்கு உதவியாக மெலானியா இருப்பதாகவும் இதன் காரணமாகவே அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
டிரம்ப் வென்றாலும் மெலானியா வெள்ளை மாளிகைக்கு வரப் போவதில்லையாம். அவர் தனது மகனைக் கவனித்துக் கொள்வதிலேயே அதிக நேரம் செலவிட நினைக்கிறாராம்.
மறுப்பு: இதற்கிடையே ஸ்காராமுச்சியின் கருத்துகளை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தன் மீது இருக்கும் வெறுப்பின் காரணமாகவே இதுபோன்ற ஆதாரமில்லாத பொய்யான கருத்துகளை ஸ்காராமுச்சி கூறி வருவதாகவும் டிரம்ப் சாடியுள்ளார்.
யார் இந்த ஸ்காராமுச்சி: டிரம்ப் அதிபராக இருந்த போது கடந்த 2017ம் ஆண்டு வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு செயலாளராக இருந்தவர் இவர். இருப்பினும், சில காலம் மட்டுமே அவர் இந்த பதவியில் இருந்தால் இடையில் சில சர்ச்சைகளில் இவர் சிக்கியதால் அந்த பதவியில் இருந்து டிரம்ப் இவரை டிஸ்மிஸ் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications