மேக் அப் போட மறுத்ததால் அதிபர் தேர்தலில் தோல்வி.. ஒரே நாளில் மாறிய முடிவுகள்.. இப்படி கூட நடக்குமா!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றைப் புரட்டிப் போட்ட விவாதம் என்றால் அது 1960ம் ஆண்டு நடந்த விவாதம் தான். அப்போது அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ரிச்சர்ட் நிக்சன், கென்னடி ஆகியோர் விவாதத்தில் பங்கேற்றனர். விவாதத்திற்கு முன்பு வரை சர்வேக்களில் நிக்சன் முன்னிலையில் இருந்த நிலையில், விவாதம் மொத்தமாக மாற்றிப் போட்டது. கென்னடி முன்னிலைக்கு வந்து அதிபர் தேர்தலையும் வென்றார்.
அதற்கு முன்பு வரை அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட இரு அதிபர்கள் நேரடியாக விவாதம் செய்ததே இல்லை. முதல்முறையாக 1960 அதிபர் தேர்தலுக்கு முன்பு இந்த விவாதத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

விவாதம்: அந்தத் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜான் எஃப் கென்னடி, குடியரசு கட்சி சார்பில் நிக்சன் போட்டியிட்டனர். அந்த காலகட்டத்தில் தான் அமெரிக்காவில் முதல்முறையாகத் தொலைக்காட்சிகள் வெகுஜன மக்களிடையே பிரபலமடைந்து வந்தது. இந்த சூழலைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள இரு வேட்பாளர்களும் முயன்றனர். இதன் காரணமாகவே பிரபல டிவி நிறுவனங்கள் விவாதத்திற்கு அழைத்த போது இரு தரப்பும் ஒப்புக் கொண்டன. இதையடுத்து அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக 1960ம் ஆண்டு செப். 26ம் தேதி அதிபர் தேர்தல் விவாதம் நடந்தது.
இது அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்பட்டது. கருப்பு- வெள்ளையில் டிவியில் விவாதம் ஒளிபரப்பப்பட்டது. விவாதத்திற்கு முன்பு வரை குடியரசு கட்சி வேட்பாளர் ரிச்சர்ட் நிக்சன் வெல்வார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் நிக்சன் அதற்கு முன்பு இரண்டு முறை துணை அதிபராக இருந்திருந்தார். மக்கள் ஆதரவு அவருக்கு அதிகமாகவே இருந்தது. ஆனால், விவாதம் இதை மொத்தமாகப் புரட்டிப் போட்டது.
நிக்சன்: குறிப்பாக இந்த முதல் விவாதம் நிக்சனுக்கு மிகப் பெரிய பின்னடைவைக் கொடுத்தது. ஏனென்றால் முதலாம் விவாதத்தின் போது மேக்அப் போட நிக்சன் மறுத்துவிட்டார். மேலும், பிரச்சார கூட்டத்தில் இருந்து அவர் நேரடியாக விவாதத்திற்கு வந்துவிட்டார்.. இதனால் டிவியில் பார்க்கும் போது பலரும் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவே கருதினர். டிவியில் வெளிர்ந்து போய், அதிக வியர்வையுடன் அவர் தோன்றினார். விவாதம் முடிந்த உடன் நிக்சனின் தாயார் அவருக்கு போன் செய்து உடம்பிற்கு என்ன பாதிப்பு என விசாரித்துள்ளார். அந்தளவுக்கு நிக்சன் பார்க்க மோசமாக இருந்துள்ளார்.
கென்னடி: அதேநேரம் மறுபுறம் ஜான் எஃப் கென்னடி டிவி எந்தளவுக்கு தனக்கு ரீச் கொடுக்கும் என்பதை நன்றாகவே உணர்ந்து இருந்தார். இதனால் அவர் விவாதம் நடந்த நாளில் வேறு எந்தத் திட்டத்தையும் வைத்திருக்கவில்லை. மேலும், மேக்அப் அணிந்திருந்ததால் டிவியில் பார்க்க பளிச்சென இருந்தார்.
மேலும், விவாதத்தின் போது நிக்சன் நெறியாளரைப் பார்த்தே பேசிக் கொண்டு இருந்தார். அதேநேரம் கென்னடி நேரடியாக டிவியை நோக்கிப் பேசினர். இது டிவி பார்த்த மக்களுக்கு கென்னடி ஏதோ நேரடியாக தங்களிடம் பேசுவதைப் போன்ற உணர்வை கொடுத்துள்ளது. முதலாம் விவாதம் நடந்த அந்த நாள் அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் முக்கியமான நாளாகப் பார்க்கப்படுகிறது. காட்சி ஊடகத்தில் நாம் சொல்ல வரும் கருத்தைத் தாண்டி அதை நாம் எப்படிச் சொல்கிறோம் என்பது முக்கியம் என்பதை உணர்த்திய நாள்.
முக்கியமான விவாதம்: அதே ஆண்டில் தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு நடந்த மூன்றாவது விவாதமும் முக்கியமான ஒன்று. அதில் பல தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தது. டிவி சேனல் வரலாற்றில் முதல்முறையாக ஸ்பிளிட்-ஸ்கிரீன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருந்தது. மேலும், இந்த விவாதத்தின் போது நிக்சன் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்தார். கென்னடி நியூயார்க்கில் இருந்தார். ஆனால், ஒரே மாதிரியான செட் அமைத்து இருவரும் ஒரே அறையில் இருப்பது போல டிவியில் காட்டினர்.
இதுபோல மொத்தம் நான்கு விவாதங்கள் நடந்தது. அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் அது முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. இந்தத் தேர்தலுக்குப் பிறகு 16 ஆண்டுகளுக்கு அடுத்த விவாதம் நடக்கவில்லை என்ற போதிலும், அதன் பிறகு ஒவ்வொரு அதிபர் தேர்தலிலும் விவாதம் என்பது தவிர்க்கவே முடியாத ஒன்றாக மாறிவிட்டது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications