ஸ்விங் ஆகிட்டே இருக்கும்.. அமெரிக்க அதிபரை தீர்மானிக்க போவதே இந்த மேட்டர் தான்.. ஆஹா இதை பாருங்க
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் சில குறிப்பிட்ட மாகாணங்களை ஸ்விங் மாகாணங்கள் (swing states) என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது இந்த மாகாணங்களில் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிக்குச் சரிபாதி செல்வாக்கு இருக்கும். இந்த மாகாணங்களில் யார் வெல்கிறார்கள் என்பதே அமெரிக்க அதிபர் என்பதைத் தீர்மானிப்பதில் முக்கியமானதாக இருக்கும்.
அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் இருக்கின்றன. அதில் சில மாகாணங்கள் எப்போதும் குடியரசு கட்சிக்கே ஆதரவாக வாக்களிக்கும். உதாரணத்திற்கு டெக்சாஸ், ஓக்லஹோமா, வடக்கு டகோட்டா உள்ளிட்ட மாகாணங்களைச் சொல்லலாம்.

அதேபோல சில மாகாணங்கள் எப்போதும் ஜனநாயக கட்சிக்கு வாக்களிக்கும். உதாரணத்திற்கு கலிபோர்னியா, நியூயார்க் உள்ளிட்ட மாகாணங்களைச் சொல்லலாம்.
ஸ்விங் மாகாணங்கள்: இருப்பினும், சில மாகாணங்கள் இதுபோல எப்போதும் ஒரே கட்சிக்கு வாக்களிக்காது. இதைத் தான் அவர்கள் ஸ்விங் மாகாணங்கள் என்று குறிப்பிடுகிறார்கள். இந்த மாகாணங்கள் பொதுவாகக் குறிப்பிட்ட கட்சிக்கு விசுவாசமாக இருக்காது.. இந்த மாகாணங்கள் ஒவ்வொரு தேர்தல்களிலும் குடியரசு கட்சிக்கும் ஜனநாயக கட்சிக்கும் மாறி மாறியே வாக்களித்துள்ளனர்.
இதுபோன்ற மாகாணங்களில் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி வாக்காளர்கள் கிட்டதட்ட சம அளவில் இருப்பார்கள். இதன் காரணமாகவே இந்த மாகாணங்களில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கட்சிகள் வெல்கின்றன. இந்த மாகாணங்களில் போட்டி கடுமையாக இருப்பதால் இவை யார் அதிபராகப் போகிறார் என்பதையே முடிவு செய்யக்கூடிய மாகாணங்களாக இருக்கும். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ஏன் முக்கியம்: அமெரிக்காவில் Winner takes all முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறிப்பிட்ட electoral votes இருக்கும். யார் அங்கே அதிக வாக்குகள் வாங்குகிறார்களோ.. அவர்களுக்கே மொத்த electoral votesயும் செல்லும். உதாரணமாக நியூ ஜெர்சி மாகாணத்தில் 14 electoral votes இருக்கும் நிலையில், அங்கே டிரம்பை விடக் கமலா ஹாரிஸ் ஒரு வாக்கு கூடுதலாக வாங்கினாலும் மொத்த 14 electoral votesஉம் கமலா ஹாரிஸுக்கு செல்லும். இதன் காரணமாகவே இந்த ஸ்விங் மாகாணங்கள் முக்கியமானதாக மாறுகிறது.
பென்சில்வேனியா: லிஸ்டில் முதலில் இருப்பது பென்சில்வேனியா. இங்கே மொத்தம் 19 எலக்டோரல் வாக்குகள் உள்ளன. கடந்த 3 தேர்தல்களில் இவர்கள் மாறி மாறியே வாக்களித்துள்ளனர். 2020ல் பைடனுக்கு இந்த மாகாணம் வாக்களித்தது. இருப்பினும், விலைவாசி உயர்வு காரணமாக அமெரிக்காவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாகாணமாக பென்சில்வேனியா இருக்கிறது. மேலும், டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூடும் இங்கு தான் நடந்தது. இதனால் இந்த 19 எலக்டோரல் வாக்குகள் யார் பக்கம் வேண்டுமானாலும் செல்லலாம் என்ற சூழலே நிலவுகிறது.
அடுத்து ஜார்ஜியா- 16 எலக்டோரல் வாக்குகள்.. கடந்த 2020 தேர்தலில் பைடன் வெற்றியைத் தடுக்க டிரம்ப் ஆதரவாளர்கள் முயன்ற மாகாணங்களில் ஒன்று இதுவாகும்.. இதற்காக அவர் ஜார்ஜியாவில் தான் வழக்கையும் சந்தித்து வருகிறார். 1990கள் முதலே குடியரசு கட்சிக்கு ஆதரவாக வாக்களித்து வந்துள்ள ஜார்ஜியாவில் பைடன் கடந்த 2020இல் வென்றார். ஆனால், இந்த முறை இந்த மாகாணம் யாருக்கு வாக்களிக்கப் போகிறது என்பது கேள்விக்குறியே
மிச்சிகன்: 3ஆவது மாகாணம் மிச்சிகன்- 15 எலக்டோரல் வாக்குகள். இங்குக் கடந்த 3 தேர்தல்களில் இரு கட்சிகளும் மாறி மாறி வென்றுள்ளன. கடந்த முறை இங்கே பைடன் வென்றுள்ளார். அமெரிக்காவிலேயே அரபு-அமெரிக்கர்கள் அதிகம் இருக்கும் மாகாணம். இதனால் காசா போர் பைடனுக்கு தலைவலியாக மாறி இருக்கிறது. அடுத்து அரிசோனா- 11 எலக்டோரல் வாக்குகள்.. 1990களுக்கு பிறகு பைடன் முதல்முறையாக இங்கே வென்றார். மெக்சிகோ எல்லையில் உள்ள இந்த மாகாணம் தான் சட்ட விரோத குடியேற்றம் குறித்து விவாத புள்ளியாக இருக்கிறது.
அடுத்து விஸ்கான்சின்.. இங்கே மொத்தம் 10 எலக்டோரல் வாக்குகள் உள்ளன. கடந்த 2 தேர்தல்களிலும் வெறும் 20 ஆயிரம் வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டுள்ளன. இரு கட்சிகளுக்கும் கிட்டதட்ட சரியான வாக்காளர்கள் இருப்பதால் இங்கு கடும் போட்டி நிலவுகிறது. அடுத்து கடைசியாக நெவாடா.. இங்கே 6 எலக்டோரல் வாக்குகள் உள்ள நிலையில், இதுவும் முக்கியமான மாகாணமாக மாறி இருக்கிறது.
ரொம்ப முக்கியம்: இந்த ஸ்விங் மாகாணங்களை எல்லாம் சேர்த்தால் மொத்தம் 77 எலக்டோரல் வாக்குகள் வருகின்றன. கடந்த பல தேர்தல்களில் இந்த 77 எலக்டோரல் வாக்குகள் தான் யார் அதிபர் என்பதையே தீர்மானிப்பவையாக இருந்துள்ளன. எனவே, இந்த ஸ்விங் மாகாணங்கள் யார் வெல்லப் போகிறார்கள் என்பது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications