நம் ஊர் மாதிரி இல்லை.. அமெரிக்காவில் ஒருவரால் 8 வருஷம் மட்டுமே அதிபராக இருக்க முடியும்! ஏன் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒருவர் அதிபராகத் தேர்வானாலும் அவரால் அதிகபட்சமாக 2 முறை அதாவது 8 ஆண்டுகள் மட்டுமே அதிபராக இருக்க முடியும். எப்போது இந்த மாற்றம் அமலுக்கு வந்தது. எதற்காக இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டது என்பது பலருக்குத் தெரியாது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.

நமது நாட்டில் ஒருவரால் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் பதவியில் இருக்க முடியும். ஆனால், அமெரிக்காவில் அப்படி இல்லை. ஒருவரால் இரண்டு முறை மட்டுமே அதிகபட்சமாக அதிபராக இருக்க முடியும்.

US Presidential Election 2024 US world 2024

அதற்கு என்ன காரணம் என்பது பலருக்கும் தெரியாது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். 1951ம் ஆண்டு அமெரிக்காவில் கொண்டு வந்த முக்கிய சட்டத் திருத்தமே இதற்குக் காரணமாகும்.

சட்டம்: 1951இல் அமெரிக்க அரசியலமைப்பின் 22வது திருத்தம் தான் ஒருவர் எத்தனை முறை அதிபராக இருக்கலாம் என்பதை வரைமுறை செய்கிறது. எந்தவொரு நபரும் இரண்டு முறைக்கு மேல் அதிபர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது என்பதை இந்த சட்டம் மிகத் தெளிவாகக் கூறுகிறது. அதாவது ஒருவருக்கு எவ்வளவு மக்கள் செல்வாக்கு இருந்தாலும் இரண்டு முறைக்கு மேல் அதிபராக இருக்க முடியாது என்பதே இந்தச் சட்டமாகும்.

எதற்காக இந்த சட்டம்: அப்போது அதிபராக இருந்த ஃபிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் யாரும் எதிர்பார்க்காத வகையில் நான்கு முறை தொடர்ந்து அதிபராகத் தேர்தலில் வென்ற நிலையில், இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. 1932இல் முதல் முறையாக அதிபரான ஜனநாயக கட்சியின் ரூஸ்வெல்ட், 1936, 1940 மற்றும் 1944 எனத் தொடர்ச்சியாக 4 தேர்தல்களில் வெற்றி பெற்றார்.

1945இல் அவர் உயிரிழந்ததாலேயே துணை அதிபராக இருந்த ஹாரி எஸ். ட்ரூமன் அதிபராகத் தேர்வாகி 1948 தேர்தலில் போட்டியிட்டார். ரூஸ்வெல்ட் உயிருடன் இருந்திருந்தால் அவரே கூட 1948இல் மீண்டும் போட்டியிட்டு இருக்கலாம்.

நிரந்தரமாக அதிகாரம் செல்லக் கூடாது: ஆனால், இப்படி ஒருவரே 4 முறை அதிபர் தேர்தலில் வென்றதே அங்கே அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. அதற்கு முன்பு யாருமே அமெரிக்க வரலாற்றில் தொடர்ச்சியாக 4 முறை வென்றதே இல்லை. ரூஸ்வெல்ட்டின் நீண்ட பதவிக்காலம், எங்கு அதிபரை ஜனாதிபதி மிகவும் சக்திவாய்ந்த நபராகவும் நிரந்தரமாக ஒருவருக்கு அதிகாரம் குவிய வழிவகுக்குமோ என்ற கவலையை ஏற்படுத்தியது. ஜனநாயக செயல்முறையில் செக் அண்ட் பேலன்ஸ் வேண்டும் என்பதற்காகவே அதிபராக ஒருவர் எத்தனை முறை தேர்வாகலாம் என்பதற்கு அதிகபட்ச வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டது.

பதவி ஒரு தற்காலிக பதவியாக இருப்பதை 22வது திருத்தம் உறுதி செய்கிறது. ஒருவர் நிரந்தரமாக இந்த பதவியில் இருப்பதையும் இது தடுக்கிறது. அமெரிக்கா முன்னோக்கிச் செல்ல புதிய அதிபர் புதிய சிந்தனைகள் தேவை என்பதை இதன் நோக்கம். இதன் மூலம் அதிகாரத்தைத் தக்க வைப்பதை விட அதிகபட்சம் 8 ஆண்டுகளில் ஒரு அதிபர் தான் விரும்பியதைச் செய்வதை இது ஊக்குவிக்கிறது.

பெரிய தாக்கம்: இந்த சட்டத் திருத்தம் அமெரிக்க அதிபர் தேர்தலில் மிகப் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. ஒருவரால் நிரந்தரமாக அதிபர் பதவியில் இருக்க முடியாது என்பதால் தனது பதவிக் காலத்திற்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்ய இது அதிபர்களை ஊக்குவிக்கிறது. முக்கிய இலக்குகள் அடைந்து தனது பெயரை வரலாற்றில் இடம் பெற வைக்கப் பல அதிபர்கள் முயல இந்த சட்டத் திருத்தமே வழிவகுத்தது.

பராமரிக்கிறது: மேலும், இந்த 22வது திருத்தம் அமெரிக்க ஜனநாயகத்தின் ஆரோக்கியத்தையும் ஸ்திரத்தன்மையையும் பராமரிக்கிறது. அதிகாரம் குவிவதைத் தடுக்கவும், அமைதியான முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடப்பதையும் இது ஊக்குவிக்கிறது. அதிபர் பதவி என்பது தேசத்தின் நலனுக்காக ஒருவருக்குத் தற்காலிகமாக வழங்கப்படும் பொறுப்பு என்ற கருத்தை இது வலுப்படுத்துகிறது. டிரம்ப் ஏற்கனவே அதிபராக ஒரு முறை இருந்துவிட்ட நிலையில், அவர் இந்தத் தேர்தலில் வென்றாலும் ஒரு முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+