அமெரிக்க அதிபர் தேர்தல் விவாதம்! பைடனை ஓவர் நைட்டில் காலி செய்த மேட்டர்- கொஞ்சம் அசந்தாலும் ஆள் காலி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவைப் பொறுத்தவரை அதிபர் தேர்தல் விவாதங்கள் ரொம்பவே முக்கியம். அங்கு நவ. மாதம் தேர்தல் நடக்கும் நிலையில், நாளை மறுநாள் அதாவது செப். 10ம் தேதி அதிபர் வேட்பாளர்கள் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே விவாதம் நடக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் விவாதங்கள் ஏன் முக்கியம். இதன் பின்னணி என்ன என்பதை நாம் பார்க்கலாம்.

அமெரிக்கா அடுத்த 4 ஆண்டுகளுக்கு எப்படிச் செல்லும் என்ற எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தல் தான் அதிபர் தேர்தல். இது அமெரிக்காவைத் தாண்டி எப்போதும் சர்வதேச அளவில் தாக்கங்களை ஏற்படுத்தும்.

us presidential election 2024 donald trump kamala harris

அதிபர் பதவி: உலகின் மிகப் பழமையான ஜனநாயக நாடுகளின் ஒன்றான அமெரிக்காவின் அதிபர் பொறுப்பில் இருக்கும் நபருக்குப் பல அதிகாரங்கள் உள்ளன. சுகாதாரம், கல்வி, பொருளாதாரம், காலநிலை மாற்றம் மற்றும் தேசியப் பாதுகாப்பு போன்ற முக்கிய துறைகளில் அவர் தான் நாட்டை வழிநடத்த வேண்டும்.

அதிபர் பொறுப்பில் இருக்கும் நபர் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் பல கோடி அமெரிக்கர்களின் வாழ்க்கையைப் பாதிக்கும். உலக வல்லரசு நாடாக இருப்பதால் அமெரிக்காவில் நடக்கும் மாற்றங்கள் உலகெங்கும் எதிரொலிக்கும்.

சுப்ரீம் கோர்ட் நீதிபதி: அதேபோல அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட் நீதிபதி நியமனத்திலும் அமெரிக்க அதிபருக்கே அதிகாரம் இருக்கிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டால் அவருக்கு ஓய்வு பெறும் வயது இல்லை. மரணமடையும் வரை அல்லது விருப்பப்பட்டு ராஜினாமா செய்யும் வரை ஒருவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகத் தொடர்வார்.

அதிபரே நேரடியாக நியமனம் செய்வார் என்பதால் அது கொள்கை அடிப்படையில் இருக்கும். உதாரணத்திற்குக் குடியரசு கட்சி அதிபர்கள் (டிரம்ப் கட்சி) வலதுசாரிகளையும் ஜனநாயக கட்சி இடதுசாரி சித்தாந்தம் கொண்டவர்களைத் தேர்வு செய்வார்கள். எனவே, ஒரு நீதிபதி உயிரிழக்கும் போது அல்லது ராஜினாமா செய்யும் போது யார் அதிபராக இருக்கிறார் என்பது முக்கியம். மிக முக்கியமான விவகாரம் விசாரணைக்கு வரும் போது எந்த சித்தாந்தம் கொண்டவர்கள் நீதிபதியாக அதிகம் இருக்கிறார்களோ அதற்குச் சாதகமாகவே தீர்ப்பு வரும்.

நாடாளுமன்றம்: அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும். யார் அதிபராக இருக்கிறாரோ.. அவரது கட்சிக்கே நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு முன்னிலை கிடைக்கும். மேலும், அமெரிக்கப் பொருளாதாரத்திலும் அதிபர் எடுக்கும் முடிவுகள் முக்கியமானது. மேலும், இவற்றுடன் அதிபராக இருக்கும் ஒருவர் அமெரிக்காவின் பிரதிநிதியாக அடையாளமாக உலக நாடுகளிடையே பார்க்கப்படுவார்.

இத்தனை அதிகாரங்களும் பொறுப்புகளும் இருப்பதாலேயே அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரு தலைவர்கள் நேருக்கு நேர் விவாதிக்க வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் விரும்புகிறார்கள். இதுபோன்ற விவாதங்களின் போது தான் இரு தரப்பு வேட்பாளர்கள் முன்வைக்கும் கொள்கைகள், அவர்களின் அணுகுமுறை, மக்களை வழிநடத்தும் ஸ்டைல் ஆகியவை மக்களுக்குத் தெரிய வரும்.

பங்கேற்க மாட்டார்கள்: நம்ம ஊரில் தலைவர்கள் இதுபோன்ற நேரடி விவாதங்களில் பங்கேற்க மாட்டார்கள். ஆனால், அமெரிக்காவில் பல ஆண்டுகளாக இது நடைமுறை இருக்கிறது. விவாதத்தை வைத்தே யாருக்கு வாக்களிக்கலாம் என்பதை நடுநிலை வாக்காளர்கள் முடிவு செய்வார்கள். பைடனுக்கு ஓரளவுக்கு ஆதரவு இருந்த போதும், டிரம்ப் உடனான விவாதத்திற்கு பிறகே அவரது சப்போர்ட் ஆட்டம் கண்டது இங்குக் குறிப்பிடத்தக்கது. மேலும், அமெரிக்க வரலாற்றை எடுத்துப் பார்த்தால் விவாதங்கள் தான் அங்குப் பல அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றியமைத்துள்ளது.

முக்கியத்துவம்: இந்த காரணங்களாலேயே அமெரிக்காவில் அதிபர் தேர்தல் விவாதங்கள் முக்கியத்துவம் பெறுகிறது. அதேநேரம் சமீப காலமாக நடக்கும் விவாதங்களில் பல விமர்சனங்களும் எழுந்துள்ளன. குறிப்பாக ஒருவரது கொள்கை என்ன என்பதை விட, அவர் மற்றவரை ஓவர்டேக் செய்து எப்படிப் பேசுகிறார்.. என்ன மாதிரி ஆளுமையைக் காட்டுகிறார் என்பதை மக்கள் அதிகம் கவனிக்கிறார்கள். இதனால் கொள்கை குறித்துத் தெளிவான விளக்கங்கள் கிடைப்பதில்லை என்ற விமர்சனங்களும் உள்ளன.

அமெரிக்காவில் 1960ல் முதலில் விவாதம் நடந்தது. அதன் பிறகு அடுத்த 24 ஆண்டுகளுக்கு விவாதம் நடக்கவில்லை என்ற போதிலும் 1984 முதல் அதிபர் தேர்தல்களில் விவாதங்கள் தடுக்கவே முடியாத ஒன்றாகிவிட்டது. இப்போது இதில் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் நேரடியாக விவாதிக்க உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+