"கழுதை vs யானை.." அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் சின்னங்கள்! பின்னணியில் இருக்கும் மெகா ட்விஸ்ட்
வாஷிங்டன்: அமெரிக்க அரசியலை ஆட்டிப்படைக்கும் ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகளின் சின்னங்கள் ரொம்பவே தனித்துவமானது. குடியரசுக் கட்சி யானையைச் சின்னமாகக் கொண்டுள்ளது.. அதேபோல ஜனநாயகக் கட்சி கழுதையைச் சின்னமாகக் கொண்டுள்ளது. ஆனால், பலருக்கும் இந்த இரு கட்சிகளும் எப்படி இந்த விலங்குகளைச் சின்னமாகப் பெற்றன என்பது தெரியாது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கும் நிலையில், பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை ஜனநாயக கட்சியும், குடியரசு கட்சியும் தான் பிரதானம்.

சின்னங்கள்: அங்கு ஜனநாயக கட்சிக்குக் கழுதை சின்னமும், குடியரசு கட்சிக்கு யானை சின்னமும் இருக்கிறது. அங்குத் தேர்தல் பிரச்சாரம், விவாதம் அவ்வளவு ஏன் மீம்ஸ்களில் கூட இந்த இரண்டு விலங்குகளையும் தான் அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால், பலருக்கும் இந்த இரு கட்சிகளும் எப்படி இந்த விலங்குகளைச் சின்னமாகப் பெற்றன என்பது தெரியாது. இதன் வரலாறு சுமார் 150- 200 ஆண்டுகளுக்கு முந்தையதாகும். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
1828ஆம் ஆண்டு ஜனநாயக கட்சி சார்பில் ஆண்ட்ரூ ஜாக்சன் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் அவர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வந்தார். அப்போது அவருக்கு எதிராகப் போட்டியிட்டவர்கள், ஆண்ட்ரூ ஜாக்சனை ஜாக்காஸ் (jackass) என விமர்சித்தனர். ஜாக்காஸ் என்பது கழுதையைக் குறிக்கும் வார்த்தையாகும். ஒருவரைக் கேவலப்படுத்த வேண்டும் என்றால் இந்த வார்த்தையைத் தான் பயன்படுத்துவார்கள்.
வினோதமான காரணம்: அதன்படியே ஜாக்சனை ஜாக்காஸ் என எதிர் தரப்பினர் அழைத்தனர். ஆனால், இதையே ஜாக்சன் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். இதற்குப் பதிலடி கொடுக்கிறேன் என்ற பெயரில் மேலும் தரம் தாழ்ந்து பேசுவதற்குப் பதிலாக அவர் அதை வரவேற்றார். தனது பிரச்சார சுவரொட்டிகளில் கழுதையின் படத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார். இதற்குத் தேர்தலில் கைமேல் பலனும் கிடைத்தது. இந்தத் தேர்தலில் வென்ற ஜாக்சன் அமெரிக்காவின் ஏழாவது அதிபராகத் தேர்வானார். மேலும், ஜனநாயக கட்சியின் முதல் அதிபரும் இந்த ஜாக்சன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், 1870க்கு பின்னரே ஜனநாயக கட்சிக்குக் கழுதை என்பது மக்களிடையே பிரபலமானது. அரசியல் கார்ட்டூனிஸ்ட் தாமஸ் நாஸ்ட் 1870களில் தனது கார்ட்டூன்களில் ஜனநாயக கட்சியைக் குறிக்கக் கழுதையைப் பயன்படுத்தினார். அதன் பிறகே இந்த சிந்தனை மக்களிடையே பதிந்தது. கழுதை என்பது வலிமை, தைரியம் மற்றும் பிடிவாதத்தின் அடையாளமாக இருப்பதாக ஜனநாயக கட்சியினர் கூறுகின்றனர்.
ட்விஸ்ட் என்ன தெரியுமா: இப்போது அமெரிக்காவில் கழுதை சின்னம் என்றாலே அது ஜனநாயக கட்சியுடையது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இதுவரை கழுதை சின்னத்தை ஜனநாயக கட்சி அதிகாரப்பூர்வமாக ஏற்கவில்லை. அதாவது மக்கள் கழுதை சின்னத்தை ஜனநாயக கட்சியுடன் தொடர்புப்படுத்திக் கொண்டாலும், அது அவர்களது அதிகாரப்பூர்வ சின்னம் இல்லை என்பது பெரிய ட்விஸ்ட் தான்.
குடியரசு கட்சி: அதேபோல டிரம்பின் குடியரசு கட்சிக்கு யானை சின்னம் கிடைத்த கதையும் சுவாரசியமானது. 1854இல் குடியரசு கட்சி உருவானது. அதன் பிறகு ஆறு ஆண்டுகள் கழித்து ஆபிரகாம் லிங்கன் 1860இல் குடியரசு கட்சி சார்பில் தேர்வான முதல் அதிபர் ஆனார். லிங்கனின் அதிபராக இருந்த போது தான் அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் மூண்டது. அப்போது குடியரசு கட்சியை யானையுடன் தொடர்புப்படுத்திக் கார்டூன்களை வெளி வரத் தொடங்கினர்.
யானை: இந்த யானை சின்னத்தையும் குடியரசு கட்சியுடன் இணைந்து பிரபலப்படுத்தியது தாமஸ் நாஸ்ட் தான்.. அப்போது வீரர்கள் உள்நாட்டுப் போரில் போரிடுவதை seeing the elephant என்றே குறிப்பிட்டுள்ளனர். இந்த டிரெண்ட் மெல்ல அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், பலரும் யானை என்றாலே குடியரசு கட்சி எனப் புரிந்து கொள்ளத் தொடங்கினர்.
1800களின் இறுதியில் பெரும்பாலான குடியரசுக் கட்சித் தலைவர்கள் யானை தங்கள் சின்னம் என்பது போலப் பேசத் தொடங்கினர். இருப்பினும், கடந்த நூற்றாண்டின் நடுவேதான் குடியரசுக் கட்சி தனது அதிகாரப்பூர்வ சின்னமாக யானையை ஏற்றுக்கொண்டது..
-
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
"எனக்கு பிடிக்கலைனா குண்டு போடுவேன்.." அமைதி ஒப்பந்தம் வந்த பிறகும்.. விடாமல் மிரட்டும் டிரம்ப் -
தோற்றது ஈரான் இல்லை! டிரம்ப் தான்.. ரூ.28 லட்சம் கோடியை தாரை வார்க்கும் அமெரிக்கா.. பின்னணி -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில்












Click it and Unblock the Notifications