டிவி சேனலில் திடீரென பீரை எடுத்து குடித்த கமலா ஹாரிஸ்.. அடுத்து பேசுனதை எல்லாம் கேளுங்க.. கலகலப்பு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கும் நிலையில், அங்குத் தீவிரமாகப் பிரச்சாரம் நடந்து வருகிறது. இதற்கிடையே அங்கு டிவி சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த கமலா ஹாரிஸ் திடீரென பீர் கேனை ஓபன் செய்து குடித்தார்.. பீர் குடித்து சில் செய்யும் அவரது வீடியோ இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.

அமெரிக்காவில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுகிறார். அதேபோல கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

us presidential election 2024 kamala harris usa

தேர்தலுக்கு சில காலம் இருக்கும் நிலையில், அங்குப் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக கடும் போட்டி நிலவும் மாகாணங்களைக் குறிவைத்து இரு தலைவர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

கமலா ஹாரிஸ்: தற்போதுள்ள சூழலில் டிரம்பை காட்டிலும் கமலா ஹாரிஸுக்கே ஆதரவு சற்று அதிகமாக இருக்கிறது. இருப்பினும், தேர்தல் வரை இதே நிலை இருக்கும் எனச் சொல்ல முடியாது. இதனால் அங்கு பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே அங்குள்ள டிவி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் சில கூலான தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதாவது அமெரிக்க அதிபர் தங்கும் வெள்ளை மாளிகையில் கடந்த 8 ஆண்டுகளாக மதுபானங்கள் இல்லாமல் இருந்தது. மதுபானத்திற்கு அனுமதி இல்லாமல் எல்லாம் இல்லை.. ஆனால், தற்போதைய அதிபர் பைடனும் சரி, இதற்கு முன்பு 2016- 2020 வரை அதிபராக இருந்த டிரம்ப் சரி டீட்டோடலர்கள். அவர்களுக்கு மதுக் குடிக்கும் பழக்கம் இல்லாததால் மதுபானங்கள் இல்லாமல் வெள்ளை மாளிகை இருந்தது. ஆனால், கமலா ஹாரிஸ் வென்று அதிபரானார் அந்த நிலை மாறிவிடும் போலவே தெரிகிறது.

பீர் குடித்த கமலா ஹாரிஸ்: அங்குள்ள பிரபல டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த கமலா ஹாரிஸ், எப்போதுவாது மது குடித்துவிட்டு சில் செய்வது தனக்கு மிகவும் பிடிக்கும் என்று ஓபனாக தெரிவித்தார். அத்துடன் நிற்காமல் நேர்காணலின் போதே பீர் ஒன்றை ஓபன் செய்து குடிக்கவும் தொடங்கினார். கடைசியாக பேஸ் பால் மேட்ச் ஒன்றைப் பார்க்கக் கணவருடன் சென்ற போது பீர் குடித்ததாகவும் கமலா ஹாரிஸ் தெரிவித்தார். கமலா ஹாரிஸின் இந்த வீடியோ இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.

கடும் விமர்சனம்: இது மட்டுமின்றி அந்த நேர்காணலில் டிரம்பை கமலா ஹாரிஸ் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். டிரம்ப் அதிபர் காலத்தைக் குறிப்பிட்டுப் பேசிய கமலா ஹாரிஸ், "நீங்கள் அதிபராக இருந்த போதுதான் நாம் பல லட்சம் வேலைகளை இழந்தோம். உற்பத்தித் துறையில் பின்னடைவைச் சந்தித்தோம். ஆட்டோமொபைல் துறையில் பின்னடைவைச் சந்தித்தோம். இதற்காகத் தான் மக்கள் உங்களுக்குத் தோல்வியைப் பரிசாக அளித்தார்கள். ஆனால், அதை ஏற்கும் பக்குவம் கூட உங்களுக்கு இல்லை" என்று சரமாரியாக விமர்சித்தார்.

ரொம்பவே சீரிஸயாக பேசுவதை உணர்ந்தாரோ என்னவோ திடீரென டோனை மாற்றிய கமலா ஹாரிஸ், "நான் பீர் குடித்தால் இதுபோலத் தான் பேசிக் கொண்டே இருப்பேன்" என்று சொல்லிச் சிரித்தார்.

அமெரிக்காவில் புதிய அதிபரை தேர்வு செய்ய அடுத்த மாதம் 5ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் களத்தில் உள்ளனர். இதில் தற்போது வெளியாகும் சர்வேக்களில் டிரம்பை விடக் கமலா ஹாரிஸ் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+