கமலா ஹாரிஸுக்கு கிடைத்த பெரிய லீட்.. டிரம்பிற்கு பெரிய அதிர்ச்சி.. அமெரிக்காவில் மொத்தமாக மாறிய சீன்
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் இத்தனை காலம் டிரம்ப் முன்னிலையில் இருந்த நிலையில், கமலா ஹாரிஸ் போட்டிக்கு வந்த உடன் அங்கு சீன் மொத்தமாக மாற தொடங்கியுள்ளது. இதற்கிடையே சமீபத்தில் நடந்த சர்வேக்களில் கமலா ஹாரிஸுக்கு மிகப் பெரிய முன்னிலை கிடைத்துள்ளது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்காவில் இந்தாண்டு நவ. மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் முதலில் பைடன் போட்டியிட இருந்த நிலையில், அவர் உடல்நிலை காரணமாகப் போட்டியில் இருந்து விலகினார்.

இதையடுத்து கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் உள்ளே வந்த பிறகு சீன் மொத்தமாக மாறி இருக்கிறது. சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்பும் அதை உறுதி செய்துள்ளது.
அமெரிக்கத் தேர்தல்: அமெரிக்காவைப் பொறுத்தவரை ஸ்விங் ஸ்டேட்களில் யார் அதிக வாக்குகளைப் பெறுகிறார்கள் என்பது ரொம்பவே முக்கியம். அங்கே Winner take all முறை கடைப்பிடிக்கப்படுவதால் ஸ்விங் மாகாணங்களில் வெல்லும் நபரே ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. அதன்படி முக்கியமான ஸ்விங் மாகாணங்களாக இருக்கும் விஸ்கான்சின், பென்சில்வேனியா மற்றும் மிச்சிகன் ஆகிய மாகாணங்களில் டிரம்பை பின்னுக்குத் தள்ளி கமலா ஹாரிஸ் முன்னிலை பெற்றுள்ளார்.
ஆகஸ்ட் 5 முதல் 9ம் தேதி வரை தேதி வரையிலான காலகட்டத்தில் நடத்திய சர்வேயில் இந்த 3 மாகாணங்களில் கமலா ஹாரிஸுக்கு 50% ஆதரவும் டிரம்பிற்கு 46% ஆதரவும் இருக்கிறது. மின்னசோட்டா ஆளுநர் டிம் வால்ஸை தனது துணை அதிபர் வேட்பாளராகக் கமலா ஹாரிஸ் அறிவித்துள்ள நிலையில், அதற்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருப்பதையே இது காட்டுகிறது.
முன்னிலை: முந்தைய சர்வேகளில், பைடன் ரேஸில் இருந்து வரை இந்த 3 மாகாணங்களிலும் டிரம்ப் தான் முன்னிலையில் இருந்தார். கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன் போட்டி கடுமையான நிலையில், இப்போது கமலா ஹாரிஸ் முன்னிலைக்கு வந்துள்ளார். அங்கே வரும் நவ. 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், அதுவரை இதே டிரெண்ட் தொடர்ந்தால் கமலா ஹாரிஸ் வெல்வது நிச்சயம் என்றே சொல்லப்படுகிறது.
இந்த 3 மாகாணங்களில் பென்சில்வேனியாவில் அவருக்கான ஆதரவு அதிகமாகவே இருக்கிறது. அங்கே எந்தக் கட்சியையும் சாராதவர்கள் மத்தியில் டிரம்பை விடக் கமலா ஹாரிஸுக்கு 10% கூடுதல் ஆதரவு இருக்கிறது. அவர்கள் கமலா ஹாரிஸ் புத்திசாலியாகவும், சரியான தலைவராகவும் கருதுகிறார்கள். அதேநேரம் ஒரு கமலா ஹாரிஸுக்கு ஒரு சிக்கல் இருப்பதையும் இந்த சர்வே காட்டுகிறது.
ஒரே ஒரு பிரச்சினை: அதாவது அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவேன் என்ற முழக்கத்துடன் தேர்தலை எதிர்கொள்ளும் டிரம்ப் தனது திட்டங்களை தெளிவாகக் கூறுகிறார். அதாவது அமெரிக்காவுக்கான தனது விஷனை மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். ஆனால், மறுபுறம் கமலா ஹாரிஸ் தனது திட்டங்களைத் தெளிவாகக் கூறவில்லை என்றே சுமார் 50% பேர் கூறுகிறார்கள். எனவே, அவர் அமெரிக்காவுக்கான தனது விஷனை தெளிவாகக் கூறினால் மட்டுமே மேலும் ஆதரவு அதிகரிக்கும்.
உற்சாகம்: அமெரிக்க அதிபர் தேர்தலில் விஸ்கான்சின், பென்சில்வேனியா மற்றும் மிச்சிகன் ஆகிய இந்த 3 ஸ்விங் மாகாணங்கள் ரொம்பவே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதனால் இந்த சர்வே முடிவுகள் கமலா ஹாரிஸ் தரப்பை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது என்றே சொல்ல வேண்டும்.












Click it and Unblock the Notifications