மோசமான தோல்வி.. இதற்கு பைடனே நின்றிருக்கலாம் போல.. கமலா ஹாரிஸ் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் இதுதான்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தோல்வியடைந்துள்ளார். இது மோசமான தோல்வியாக கருதப்படும் நிலையில் கமலா ஹாரிசுக்கு பதில் ஜோ பைடனே போட்டியிட்டு இருக்கலாம் என்று ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் ஆதரவாளர்கள் புள்ளி விபரங்களுடன் புலம்ப தொடங்கி உள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அமோக வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தற்போதைய துணை அதிபரான ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் (இந்தியா வம்சாவளி)தோல்வியடைந்துள்ளார்.

அமெரிக்காவில் அதிபர் என்பவர் எலக்ட்ரோலல் காலேஜ் ஓட்டுகள் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். மொத்தம் அங்கு 50 மாகாணங்களில் 538 எலக்ட்ரோலல் காலேஜ் ஓட்டுகள் உள்ளன. இந்த எலக்ட்ரோலல் காலேஜ் ஓட்டுகள் என்பது மாகாணங்களின் மக்கள்தொகையை பொறுத்து மாறுபடும்.
இதில் 270 எலக்ட்ரோலல் காலேஜ் ஓட்டுகள் பெறுவோர் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். அதன்படி இன்றைய ஓட்டு எண்ணிக்கையின்போது நம் நாட்டின் நேரப்படி மாலை 5.30 மணியளவில் டொனால்ட் டிரம்ப் 277 எலக்ட்ரோலல் ஓட்டுகளை பெற்றிருந்தார். இது பெரும்பான்மையை விட 7 ஓட்டுகள் அதிகமாகும். இதன்மூலம் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பை எதிர்த்து களமிறங்கிய கமலா ஹாரிஸ் வெறும் 224 எலக்ட்ரோலல் ஓட்டுகளை மட்டுமே பெற்றுள்ளார். இதன்மூலம் கமலா ஹாரிசின் தோல்வி என்பது உறுதியாகி விட்டது. அதுமட்டுமின்றி இன்றயை தேர்தல் முடிவு என்பது கமலா ஹாரிசின் ஜனநாயக கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கமலா ஹாரிசை விட டொனால்ட் டிரம்ப் எலக்ட்ரோலல் வாக்குகள் மட்டுமின்றி மக்களின் மொத்த வாக்கிலும் முன்னிலை வகித்து வருகிறார்.
அதாவது மாலை 5.30 மணியளவில் டொனால்ட் டிரம்ப் மொத்தம் 7 கோடியே 11 லட்சத்து 41 ஆயிரத்து 182 என்ற அளவில் மக்கள் வாக்குகளை பெற்றுள்ளார். இது 51 சதவீத அளவாகும். மறுபுறத்தில் கமலா ஹாரிஸ் 6 கோடியே 62 லட்சத்து 9 ஆயிரத்து 169 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். இது 47.5 சதவீதமாகும்.
இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிசுக்குபதில் ஜோ பைடனே நின்று இருக்கலாம் என்று கருத்து எழ தொடங்கி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்பது கடந்த முறை ஜோ பைடன், டொனால்ட் டிரம்பை வீழ்த்தி இருந்தார். அதாவது கடந்த 2020ம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் மொத்தம் 306 எலக்ட்டோரல் ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் 232 எலக்ட்டோரல் ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார்.
அதேபோல் கடந்த 2020ம் ஆண்டு தேர்தலில் ஜோ பைடன் 8,12,84,666 வாக்குகளையும், டிரம்ப் 7,42,24,319 வாக்குகளையும் பெற்றிருந்தார். ஆனால் மக்கள் வாக்குகள் மட்டுமே அதிபரை தேர்ந்தெடுப்பதில்லை. அந்த தேர்தலில் ஜோ பைடன் மொத்தம் 51.3 சதவீத ஓட்டுகளை பெற்றிருந்தார். ஆனால் டொனால்ட் டிரம்ப் 46.8 சதவீத ஓட்டுகளை மட்டும் பெற்றிருந்தார். இருவருக்குமான ஓட்டு சதவீதம் என்பது 4.5 சதவீதமாக இருந்தது.
"Holy smokes! Literally nothing? Literally not one county?"
— Libs of TikTok (@libsoftiktok) November 6, 2024
Jake Tapper is absolutely SHOCKED by the map showing that Kamala didn't outperform Biden in a single county.
She's a total loser!pic.twitter.com/XI0Q4s4wnU
அதுதவிர இன்னொரு காரணமும் ஜோ பைடனே போட்டியிட்டு இருக்கலாம் என்ற கருத்துக்கு வலு சேர்க்கிறது. அதாவது கடந்த 2020 தேர்தலின்போது ஜோ பைடன் வென்றதை தவிர பிற எந்த மாகாணங்களிலும் கமலா ஹாரிஸ் சிறப்பாக செயல்படவில்லை. அதுமட்டுமின்றி ஜோ பைடன் கைப்பற்றிய சில முக்கிய மாகாணங்களை இப்போது கமலா ஹாரிஸ் இழந்துள்ளார்.
அதோடு கமலா ஹாரிஸ் அடிப்படையில் இந்தியா - ஆப்பிரிக்கா தம்பதிக்கு பிறந்த அமெரிக்கர். பொதுவாகவே அமெரிக்கா தேர்தலில் பெண் வேட்பாளர் போட்டியிட்டால் அது எதிர்த்து களமிறங்கும் ஆண் வேட்பாளருக்கு தான் சாதகமாக உள்ளது. குறிப்பாக கடந்த 2016ல் ஹிலாரி கிளின்டன் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு டிரம்பிடம் தோல்வியடைந்தார். இவர் வெள்ளையினத்தை சேர்ந்தவராக இருந்தாலும் கூட பெண் என்பது அவருக்கு மைனசாக அமைந்தது. அமெரிக்காவை பொறுத்தவரை என்னதான் வளர்ந்த வல்லரசு நாடாக அறியப்பட்டாலும் கூட அந்த நாட்டை திறமையாக வழிநடத்த ஆண் ஒருவரால் தான் முடியும் என்ற பிற்போக்குத்தனம் நிலவுகிறது என்று தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.
அதன்பிறகு ஜோ பைடன் 2020ல் டிரம்பை வீழ்த்தி இருந்தார். ஜோ பைடன் பிறப்பால் அமெரிக்கர் வெள்ளை இனத்தை சேர்ந்தவர். இது அவருக்கு பிளஸ் பாயிண்ட்டாக அமைந்தது. தற்போது கமலா ஹாரிசுக்கு அவர் கருப்பினத்தை சேர்ந்தவர் என்பதும், அடிப்படையில் பெண் என்பதும் மைனஸாக அமையலாம் என்று சிலர் கருதினர். ஏனென்றால் அமெரிக்காவின் 200 ஆண்டுக்கும் அதிகமான வரலாற்றில் இதுவரை ஒரு பெண் கூட அதிபராக இருந்தது இல்லை. இப்படியான சூழலில் கமலா ஹாரிசுக்கு பதில் ஜோ பைடனையே களமிறக்கி இருக்கலாம் என ஜனநாயக கட்சியினர் புலம்ப தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications