டிக் அடித்த கமலா ஹாரிஸ்.. அமெரிக்காவில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் டிம் வால்ஸ்! யார் இவர்
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு டிம் வால்ஸ் போட்டியிடுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மினசோட்டா மாகாண ஆளுநராக உள்ள 60 வயதான டிம் வால்ஸை துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடும் நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை அதிபர் வேட்பாளராக இருக்கும் ஒருவரே துணை அதிபர் வேட்பாளரைத் தேர்வு செய்வார். அதன்படியே டிரம்ப் தனது துணை அதிபர் வேட்பாளராக ஜே.டி.வான்ஸை தேர்வு செய்திருந்தார்.
"வரலாறு படைத்த கமலா ஹாரிஸ்!" எதிர்ப்பே இல்லை.. அமோக ஆதரவு! ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக தேர்வு
இதற்கிடையே ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸும் தனது துணை அதிபர் வேட்பாளரைத் தேர்வு செய்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மினசோட்டா மாகாண ஆளுநராக உள்ள 60 வயதான டிம் வால்ஸை துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்துள்ளார்.

ஜனநாயகக் கட்சியின் துணைத் அதிபர் வேட்பாளராக பென்சில்வேனியா கவர்னர் ஜோஷ் ஷாபிரோ மற்றும் மினசோட்டா கவர்னர் டிம் வால்ஸ் ஆகிய இரண்டு பேர் பரிசீலனையில் இருந்தனர். அதில் தான் டிம் வாப்லை இப்போது கமலா ஹாரிஸ் இறுதி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் துணை அதிபர் வேட்பாளர் தேர்வு குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கமலா ஹாரிஸ் அல்லது ஜனநாயகக் கட்சியில் இருந்து வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications