"அந்த நாளை மறக்கவே முடியாது.." காதல் கதையை பகிர்ந்த கணவர்.. வெட்கப்பட்டு சிரித்த கமலா ஹாரிஸ்.. அடடே

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு இப்போது நடக்கும் நிலையில், அதில் பேசிய கமலா ஹாரிஸின் கணவர் டக்ளஸ் எம்ஹாப் இருவரும் முதலில் எப்படிச் சந்தித்தார்கள் என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார். மேலும், அமெரிக்க வரலாற்றில் மிகச் சிறந்த ஒரு அதிபராகக் கமலா ஹாரிஸ் இருக்கப் போகிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்கள்.

US Presidential Election 2024 Kamala Harris Donald Trump 2024

அங்குள்ள சிகாகோவில் இப்போது ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு நடைபெறுகிறது. இதில் அதிபர் பைடன், முன்னாள் அதிபர்கள் ஒபாமா, பில் கிளிண்டன் பல்வேறு தலைவர்களும் பேசி வருகிறார்கள்.

கமலா ஹாரிஸ் கணவர்: இதற்கிடையே கமலா ஹாரிஸின் கணவர் டக்ளஸ் எம்ஹாப் மேடை ஏறி தங்கள் காதல் கதையைப் பகிர்ந்து கொண்டார். கமலா ஹாரிஸை எப்படிச் சந்தித்தார் என்ற தகவலை அவர் பகிர்ந்து கொண்டு இருக்கிறார். 2013ம் ஆண்டு தனது மனைவியை முதல்முறையாகச் சந்தித்த நாளை நினைவு கூர்ந்த டக்ளஸ், அதன் பிறகுத் தனது மனைவிக்கு ஆடியோ ஒன்றை அனுப்பியதாகத் தெரிவித்தார். அந்த ஆடியோவை ஒவ்வொரு ஆண்டும் திருமண நாளில் கமலா ஹாரிஸ் போட்டுக் காட்டுவார் என்றும் தெரிவித்தார். இதை அவர் சொல்லக் சொல்ல கமலா ஹாரிஸ் வெட்கப்பட்டுச் சிரித்தார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், "அப்போது நான் வழக்கறிஞராக இருந்தேன். எனக்கு அப்போது தான் விவாகரத்து நடந்து இருந்தது. அப்போது தான் எதிர்பாராத விதமாகக் கமலா ஹாரிஸை சந்தித்தேன். அதாவது அப்போது நான் வேலை செய்த ஒரு கேஸ் வெற்றிகரமாக முடிந்தது. இதையடுத்து நான் தனியாக இருப்பதால் அந்த கேஸில் என்னுடன் இருந்த நபர்தான் கமலா ஹாரிஸ் நம்பரை கொடுத்தார்.

உளறல்: மாலை நேரத்தில் நான் கால் செய்து இருக்க வேண்டும். ஆனால், ஏனோ தெரியவில்லை காலை 8.30 மணிக்கு கால் செய்துவிட்டேன். அவர் எடுக்கவில்லை. அப்போது நான் ஒரு ஆடியோ அனுப்பினேன். அப்போது ஒரு பதற்றத்தில் உளறிவிட்டேன். அந்த வாய்ஸ் நோட்டை இன்னும் கூட அவர் எங்கள் திருமண நாளன்று போட்டுக் காட்டுவார்.

எப்போதும் பிஸியாகவே இருக்கும் கமலா நான் கால் செய்த நாளில் வீட்டில் தான் இருந்துள்ளார். அவரது வீட்டின் கிட்சனில் ஏதோ வேலை இருந்ததால் அவர் வீட்டிலேயே இருந்துள்ளார். நான் போன் செய்து இருப்பதைப் பார்த்து, பிறகு என்னை அழைத்தார். இருவரும் சுமார் ஒரு மணி நேரம் வரை பேசினோம். எங்களுக்கு நல்ல ஒரு புரிதல் ஏற்பட்டது. நன்கு பேசி சிரித்தோம். அவரது சிரிப்பு எனக்கு ரொம்பவே பிடிக்கும்.

போர் வீரர்: கமலா ஹாரிஸ் ஒரு போர் வீரர்.. விவாகரத்து ஆகி இருந்த போது எனக்கு 2 குழந்தைகள் இருந்தார்கள். அவர்களை வளர்க்க கமலா ஹாரிஸ் தான் உதவினார். அவர் எப்போதும் குடும்பத்திற்கே முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளார். வேலை எவ்வளவு இருந்தாலும் குடும்பத்திற்கே அவர் முக்கியத்துவம் கொடுத்து வந்து இருக்கிறார். என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான தருணத்தில் கமலா எனக்குச் சரியான நபராக இருந்தார். அதேபோல நமது நாட்டிற்கு முக்கியமான இந்த நேரத்தில், அவர் சரியான அதிபராக இருக்கப் போகிறார்" என்று சொல்லி அவர் தனது பேச்சை நிறைவு செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+