"கமலா ஹாரிஸ் தான் அதிபர்.." 15 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த தமிழ் பட நடிகை.. என்னனு பாருங்க
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் நடக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இதற்கிடையே கமலா ஹாரிஸ் நிச்சயம் அமெரிக்க அதிபராவார் என்று கடந்த 2009ம் ஆண்டிலேயே தமிழ் பட நடிகை ஒருவர் கணித்து ட்வீட் செய்து இருக்கிறார். அவரது இந்த ட்வீட் தான் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
அமெரிக்காவில் வரும் நவ. மாதம் நடக்கும் அதிபர் தேர்தல் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை டிரம்ப் தான் அதிபர் ரேஸில் முன்னிலையில் இருந்தார். ஆனால், கமலா ஹாரிஸ் உள்ளே வந்தவுடன் நிலைமை மொத்தமாக மாறிவிட்டது. இப்போது வரும் சர்வேக்களில் கமலா ஹாரிஸ் தான் முன்னிலையில் இருக்கிறார்.
நடிகை: இதற்கிடையே பழைய நேர்காணல் ஒன்றில் கமலா ஹாரிஸை பிரபல பாலிவுட் பிரபலம் மல்லிகா ஷெராவத் பாராட்டியது இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. கமல் நடிப்பில் வெளியான தசாவதாரம் படத்தில் ஃபிளெட்சர் கமலுக்கு ஜோடிாக நடித்தவர் தான் மல்லிகா ஷெராவத். இவர் கடந்த ஆக. அமெரிக்காவில் உள்ள பிரபல இதழுக்குப் பேட்டியளித்திருந்தார்.
பாராட்டு: அதில் கமலா ஹாரிஸ் தன்னை தானே சுயமாக வளர்த்தெடுத்துக் கொண்ட ஒரு அரசியல் தலைவர் என்று மல்லிகா ஷெராவத் பாராட்டினார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "நான் இந்தியாவில் இருந்து வருகிறேன். அங்கே பெண் அரசியல்வாதிகள் மிகவும் அரிதானவர்கள்.
அப்படியே யாராவது இருந்தாலும் அவர்கள் குடும்பத்தில் ஏற்கனவே யாராவது அரசியலில் இருப்பார்கள். வாரிசு அரசியலால் வந்த பெண்களாகவே இருப்பார்கள். ஆனால் இங்கே நான் ஒரு பெண்ணை சந்தித்தேன். சொந்தமாக அரசியலில் முன்னேறிய ஒருவரைச் சந்தித்தேன்" என்று கமலா ஹாரிஸை அவர் புகழ்ந்து தள்ளி இருந்தார்.
கமலா ஹாரிஸ்: 2009ம் ஆண்டு நடந்த நிதி திரட்டும் விழா ஒன்றிலும் கமலா ஹாரிஸ் மற்றும் மல்லிகா ஷெராவத் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பாக மல்லிகா ஷெராவத் மேலும் கூறுகையில், "அப்போது நான் தண்ணீரில் இருந்து வெளியே வந்த மீனைப் போல நான் தவித்தேன். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அதுவே எனக்கு முதல்முறை.. பதற்றமாக இருந்த என்னை நார்மலாக்கியது கமலா ஹாரிஸ் தான். பதற்றப்பட வேண்டாம்.. அமைதியாக இரு.. இதுவே உன்னை வலிமையாக்கும் என்று அவள் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதிபர் ஆவார்: மேலும், 2009ம் ஆண்டிலேயே கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராக வாய்ப்பு இருப்பதாகவும் மல்லிகா ஷெராவத் குறிப்பிட்டிருந்தார். அவரது அந்த பழைய ட்வீட்டும் இப்போது டிரெண்டாகி வருகிறது. 2009ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி மல்லிகா ஷெராவத் தனது ட்விட்டரில், "அமெரிக்க அதிபராக அனைத்து தகுதிகளையும் கொண்ட கமலா ஹாரிஸ் என்று பெண்ணுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்து" என்று ஷெராவத் பதிவிட்டிருந்தார்.
கமலா ஹாரிஸ் இப்போது தான் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.. அவர் கடந்த 2021 முதல் துணை அதிபராக இருக்கிறார். ஆனால், 2009ம் அவர் இதுபோல எந்தவொரு பொறுப்பிலும் இல்லை. சொல்லப்போனால் தீவிர அரசியலில் கூட கமலா ஹாரிஸ் இறங்கவில்லை. அப்போது சான் பிரான்சிஸ்கோ அரசு தரப்பு வழக்கறிஞராக மட்டுமே இருந்தார். ஆனால், அப்போதே கமலா ஹாரிஸ் இந்த உயரம் செல்வார் என்பதைச் சரியாக கணித்துள்ளார் மல்லிகா ஷெராவத்.
பின்னணி: அப்போது மல்லிகா ஷெராவத் 'பாலிட்டிக்ஸ் ஆஃப் லவ்' (2011) என்ற ஆங்கில திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தில் ஒரு கேரக்டர் கமலா ஹாரிஸ் போல வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதனால் அது குறித்துத் தெரிந்து கொள்ளவே மல்லிகா ஷெராவத் கமலா ஹாரிஸை சந்தித்துப் பேசியிருந்தார். அதன் பின்னரே அவர் இந்த ட்வீட்டை பதிவிட்டு இருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications